2019 ம் ஆண்டு உலக அழகிப்போட்டிக்கான தமிழ்நாடு ஆடிஷனில் கலந்துகொள்ள விருப்பமா?! | femina miss world tamilnadu audition date announced

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (30/01/2019)

கடைசி தொடர்பு:18:20 (30/01/2019)

2019 ம் ஆண்டு உலக அழகிப்போட்டிக்கான தமிழ்நாடு ஆடிஷனில் கலந்துகொள்ள விருப்பமா?!

2019 ம் ஆண்டு உலக அழகிப்போட்டிக்கான தமிழ்நாடு ஆடிஷனில் கலந்துகொள்ள விருப்பமா?!

2019- 2020 ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டிக்கான முதல்கட்ட தேர்வுகள் மாநில அளவில் தொடங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளவிரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 2018 ம் ஆண்டு தமிழ்நாடு ஆடிஷனில் திருச்சியைச் சேர்ந்த அனுக்கீர்த்தி வாஸ் ``மிஸ் தமிழ்நாடு" பட்டம் பெற்று, தமிழ்நாடு சார்பாக ``மிஸ் இந்தியா" போட்டிக்குத் தேர்வாகி உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டார். தற்போது 2019 ம் ஆண்டுக்கான உலகஅழகிப் போட்டிக்கான ஆடிஷன்கள்  பிப்ரவரி மாதத்தில் இந்தியா முழுவதும் மாநிலத்தின் தலைநகரங்களில் வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                     அழகிப்போட்டி

மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் டாப் த்ரீ பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் சார்பாகவும் தேர்வு செய்யப்படும் மாடல்களுக்கு மும்பையில் மீண்டும் போட்டிகள் நடத்தப்பட்டு ``மிஸ் தமிழ்நாடு"போன்ற மாநில அழகிக்கான பட்டம் வழங்கப்படும். அதன் பின் ஒவ்வொரு மாநில அளவிலும் தேர்வு செய்யப்பட்ட 29 அழகிகளுக்கு, இந்தியா அளவில் போட்டிகள் நடைபெறும். அவர்களில் ஒருவர் மிஸ் இந்தியாவாக வாகை சூடி, உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கு பெறுவார். இதன்படி தமிழ்நாடு அழகிக்கான ஆரம்பகட்ட ஆடிஷன் பிப்ரவரி 2 ம் தேதி வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கான ஆடிஷனின் நடுவர்களாக ஆடைவடிவமைப்பாளர் சைத்தன்யா ராவும், மிஸ் இந்தியா ஆனுக்கீர்த்தி வாஸும் இடம்பெற உள்ளனர்.

                                                                                           தமிழ்நாடு ஆடிஷன்

போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதிகள் :

இந்தியக் குடிமகளாக இருக்க வேண்டும்.

18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ( 27 வயதுவரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். ஆனால், ரன்னர் அப் பட்டத்திற்கு மட்டுமே தகுதி உடையவர்களாகக் கணக்கில் கொள்ளப்படுவார்கள்)

ஐந்தரை அடி உயரம் அவசியம்.