Published:Updated:

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!
பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

இந்த ஆனந்த விகடன் இதழை படிக்க க்ளிக் செய்க... : https://bit.ly/2MHtXmv

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

மருத்துவமனை மார்ச்சுவரியில் தந்தையின் உடலைப் பார்த்துக் கதறிய பிரியங்காவுக்கு அப்பா கொல்லப்பட்டதற்கான காரணங்களுக்கான விடை, சி.பி.ஐ., ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் விசாரணைகளில் கிடைத்தாலும்கூட நளினியிடம் அதைத் தெளிவுபடுத்திக்கொள்ள முற்பட்டார். நளினி சந்திப்பு நடைபெற்ற அடுத்த ஆண்டுதான், இலங்கையில் ஈழப் போர் உக்கிரமாக நடைபெற்று, முள்ளிவாய்க்காலில் முற்றும் பெற்றது. 

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

மன்மோகன் சிங் ஆட்சியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, ரியல் எஸ்டேட் தொழிலில் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கிறார் என்கிற குற்றச்சாட்டை பி.ஜே.பி வைத்தபோது, ''எதிர்க்கட்சியினர் எங்களை எவ்வளவு அவமானப்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு நாங்கள் வலிமையானவர்களாக மாறுகிறோம். 'உண்மை வலிமையாக மாறும்' என்பதைப் பாட்டி இந்திரா காந்தியிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்'' என்று பதிலடிகொடுத்தார் பிரியங்கா. இப்படி பாட்டி அரசியலை பார்ட்டியில் பயன்படுத்துபவர் பிரியங்கா.

- திட நெஞ்சம் கொண்டவர்களே பார்க்க முடியாத ராஜீவ் உடலைப் பார்த்து, பிரியங்கா அடையாளம் காட்டினார். அப்போது வயது 18 தான். இப்போது 46 வயதை எட்டியிருக்கும் பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் முக்கிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து 'பாட்டி வழியில் பிரியங்கா... பா.ஜ.க-வை எதிர்கொள்வாரா?' என்ற சிறப்பு அரசியல் அலசலைத் தந்திருக்கிறது கவர் ஸ்டோரி.

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

"2015-ம் ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 68,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு தமிழகத்துக்குக் கிடைத்துள்ளதாகத் தமிழக அரசு கணக்கு காட்டுகிறது. ஆனால், ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் இதுவரை 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளால் புதிதாக 95,000 புதிய வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், சி.எம்.ஐ.ஈ என்ற தனியார் நிறுவனம் எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தமிழகத்தில் மட்டும் கடந்த 2018-ம் ஆண்டில், 9 லட்சம் பேருக்கு வேலை பறிபோயுள்ளது என்ற விவரம் தெரியவந்துள்ளது."

- பா.ஜ.க-வுடன் உரசல், கொடநாடு மிரட்டல், அமைச்சர்கள் குடைச்சல் என ரவுண்டு கட்டும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து, மாஸ் காட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதுகுறித்த முக்கியச் செய்திக் கட்டுரையே 'உலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா?'

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

மிஷ்கின்: "அவர்கூட வேலை செய்றதுன்னு முடிவாகிட்டா, அந்தக் காலகட்டத்துல உள்ள பாடல்களை நிறைய கேட்ட பிறகே, அவர் முன்னாடி போவேன். சும்மா போய் 'எனக்கு அப்படிப் பாட்டு வேணும்; இப்படி பிஜிஎம் வேணும்'னு கேட்கிறது மரியாதைக் குறைவு. இப்போ நான் இயக்கிக்கிட்டிருக்கிற 'சைக்கோ' படத்துலகூட என் கதாநாயகன் ஒரு மியூசிக் கன்டக்டர். இசை இளையராஜாதான். தமிழகத்தில் கடைசி ஒரு தமிழன்தான் இருக்கிறான்னா, அவனும் இளையராஜா பாட்டைக் கேட்பான். இன்னும் ஆழமா, அழகா சொல்லணும்னா, இறக்கும் தறுவாயிலும் நான் இளையராஜா பாடலைக் கேட்டபடியே மரணிக்க விரும்புகிறேன்!"

லெனின் பாரதி: "'மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் கதையை 2011ல் எழுதிட்டு முதல்ல இளையராஜா அப்பாட்டதான் சொன்னேன். 'சின்ன பட்ஜெட் படம். நீங்கதான் இசையமைக்கணும்'னு சொன்னேன். சரின்னு உடனே ஒப்புக்கிட்டார். ஆனா, 2015-ல்தான் ஷூட்டிங் போனேன். ஆனாலும் நாலு வருஷத்துக்கு முன்ன எங்கெங்க பாடல்கள் வரணும்னு சொல்லியிருந்ததை அப்படியே ஞாபகம் வெச்சிருந்தார். இது அவரோட தொழில் நேர்த்திக்கு  ஓர் உதாரணம்."

- 'ஒரு கடல், நான்கு நதிகள்!' என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜாவுடனான தங்கள் அனுபவங்கள் குறித்துப் பகிர்கிறார்கள், நான்கு தலைமுறை இயக்குநர்கள். ஒவ்வொரு வரியும் வியக்கத்தக்கது.

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

"என் சிறு வயதில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள என் தாத்தா வீட்டுக்குத்தான் எப்போதும் வெக்கேஷனுக்கு வருவோம். அப்படி ஒருமுறை இங்கே வரும்போது எங்கள் பிளாட்டுக்குக் கீழே அஜித் பட ஷுட்டிங் நடந்துகொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் உற்சாகத்தில் கூச்சல் போட்டோம். அவர் எங்களை அழைத்துப் பேசினார். பிறகு, ஆட்டோகிராஃப் வாங்கி, படம் எடுத்துக்கொண்டோம். இப்போது, இந்தப் பாடலில் நான் அவருக்கே பாடியிருப்பது அந்தச் சிறு வயது உற்சாகத்தை அதிகரித்துள்ளதாகவே கருதுகிறேன். இந்தப் பாடலுக்காக இன்னும் அவரை சந்திக்கவில்லை. ஆனால், சந்திக்க மிக ஆவலாக இருக்கிறது."

- "கண்ணான கண்ணே" - இன்று பல அப்பாக்களின் ரிங்டோனாகவும் ஹலோ டியூனாகவும் மொபைல்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் ஒரு தாலாட்டு கானம். 2012-ம் ஆண்டு வெளியான கடல் படத்தின் 'அடியே' பாடல் முதல் 'விஸ்வாசம்' படத்தின் 'கண்ணான கண்ணே' வரை அவர் பாடியுள்ள அத்தனை பாடலிலும் தனக்கான ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி, பல இசை ரசிகர்களைத் தன் வசப்படுத்திவைத்துள்ளார், சித். ஆறு மாதம் சென்னை, ஆறு மாதம் அமெரிக்கா எனப் பறந்துகொண்டிருக்கும்போதே, மறுவார்த்தை பேசாதே, குறும்பா, ஹை ஆன் லவ், என சமீபத்தில் ரிலீஸான எமோஷன்கள் வழிந்தோடும், டிரெண்டிலிருக்கும் பெரும்பான்மையான பாடல்கள் இவர் பாடியவையே. அவரைப் பற்றி நிறையவே தெரிந்துகொள்ளும் வாய்ப்பைத் தந்திருக்கிறது. "அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்!" எனும் தலைப்பிலான நேர்காணல். 

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

"சிவாஜி என்ற மகா கலைஞன் மூலமாதான் சினிமா எனக்கு அறிமுகம். அவர் படங்களும், அவருடைய நடிப்பும் எனக்குள்ளே ஏற்படுத்திய கெமிக்கல் ரியாக்‌ஷன்தான், நடிகன் ஆகணும்ங்கிற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனா, அதுக்கான முயற்சிகளை எடுக்கிறப்போதான், நடிகன் ஆகுறதுக்கான எந்த சாத்தியக்கூறும் எனக்கு இல்லைன்னு புரிஞ்சது. நான் அழகா இல்லை; உயரமா இல்லை; எனக்கு டான்ஸ் வராது; ஃபைட் பண்ணப் பிடிக்காது... இப்படி ஒரு நடிகனுக்கு அப்போ உருவாக்கி வைக்கப்பட்டிருந்த எந்தக் கட்டமைப்பும் என்கிட்ட இல்லை. ஆனா, சினிமா எனக்குப் பிடிக்கும்; சினிமாவுல ஒரு பிரபலமா இருக்கணும். அதுக்காக என்னை நானே சுய மதிப்பீடுக்கு உட்படுத்திக்கும்போதுதான், எனக்குள்ள இருந்த இயக்குநர் சேரன் வெளியே வந்தார்." - 22 ஆண்டுக்காலப் பயணத்தை வார்த்தைகளில் சுருக்கித் தருகிறார், சேரன். படைப்புகளில் உணர்வுகளை உருக்கிப் பிரித்தவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு 'திருமணம்' மூலம் திரும்பியிருக்கிறார். "ரஜினியையும் விஜய்யையும் மிஸ் பண்ணிட்டேன்!" என்ற அவரது சிறப்புப் பேட்டியில் பல நெகிழ்வான தருணங்களைப் பகிர்ந்திருகிறார்.

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

ஒருமுறை இருமுறையல்ல ஆறுமுறை மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி முழுக்க முழுக்க தன் விடாப்பிடி முயற்சியினால் தேர்ச்சி பெற்று பிறகு பயிற்சி எடுத்துத் தற்போது காவல்துறைக் கண்காணிப்பாளராக ஒடிசாவில் பணியில் இருக்கிறார் சிவசுப்ரமணி. ஒரு ஐ.டி.ஐ மாணவன் ஓட்டுநராக இருந்து... கப்பலில் பயணித்து… ரயில்வேயிலும் வேலைபார்த்து அத்தனை துன்பத்தையும் வலிகளையும் தாங்கிக்கொண்டு தற்போது இந்தப் பதவிவரை வந்திருப்பதெல்லாம் அசாத்தியம். தன்னைப் போன்று வழிகாட்டிகள் இல்லாமல் வளரும் இளைஞர்களுக்குத்தான்  'எட்ட முடியும் இலக்குகள்' புத்தகத்தையும் எழுதி முடித்திருக்கிறார். 

தமிழகத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னை போல ஒடிசாவிலும் வேதாந்தா நிறுவனம் இயற்கை வளத்தை அழித்து பாக்ஸைட் எடுக்க முற்பட்டபோது எழுந்த பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர் சிவசுப்ரமணி. அதற்கு அவர் சொல்லும் காரணமெல்லாம் ஒன்றுதான், ''இங்கே தமிழகத்தில் மக்கள் பிரச்னையிலும் அதிகாரத்திலும் அரசியல்வாதிகள் தலையிடுவது போல அங்கே அரசியல்வாதிகள் காவல்துறை அதிகாரத்திலும் மக்கள் உரிமையிலும் தலையிட மாட்டார்கள். பிரச்னையில் மக்களே முடிவெடுக்கும் உரிமையை அரசு அளித்தது. அதனால் காவல்துறையாலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது" என்கிறார். 

- சிவசுப்ரமணி பகிர்ந்த கடந்து வந்த பாதைதான் 'தடை தகர்த்த தமிழன்!' எனும் சிறப்புக் கட்டுரை. தவறவிடாதீர்கள்.

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

''முதல்முறை என்னைப் பார்க்கிறவங் களுக்கு நான் வித்தியாசமாதான் தெரிவேன். தள்ளாடும் என் நடையையும் தடுமாறும் வார்த்தைகளையும் வெச்சு நான் குடிச்சிருக்கேனோன்னு சந்தேகப்படுவாங்க. முதல்முறை ஸ்கூல்ல ஒரு பையன் 'குடிச்சிருக்கியாடா'ன்னு கமென்ட் பண்ணினான். அதைப் பார்த்துட்டு மத்தவங்களும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்ப மட்டும் மனசுக்குக் கஷ்டமா இருந்தது. என் பிரச்னை தெரிஞ்சவங்க யாரும் அப்படிக் கிண்டல் பண்றதில்லை. அப்படியே யாராவது பண்ணினாலும் இப்பல்லாம் அதை நான் சீரியஸா எடுத்துக்கிறதில்லை.''

எழுத்துக்கூட்டிப் பேசிப் பழகும் மழலை போலப் பேசுகிறார் ஸுவேப் மொஹமது ஸியா. சென்னைப் புதுக்கல்லூரியில் விலங்கியல் துணைப் பேராசிரியரான ஸுவேப் நம்மைப்போல ஒருவரல்லர். உடலியக்கத்தை மெள்ள மெள்ளச் சிதைக்கும் 'அட்டாக்ஸியா' என்கிற அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டவர். - 'நம்பிக்கையே என்னை இயக்குகிறது!' எனும் சிறப்புக் கட்டுரை நமக்கு உத்வேகம் பாய்ச்சுவது உறுதி. 

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

தமிழர்களின் மரபு உணவுகளான சிறுதானியங்கள், பாரம்பர்ய உணவுகளுக்கென்று பிரத்தியேகமாக இயங்கும் உணவகங்கள் இம்மாம்பெரிய சென்னையில் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் இருக்கின்றன. அந்தவகையில் கட்டாயம் அடையாளப்படுத்தப்பட வேண்டிய ஓர் உணவகம், 'பிரேம்ஸ் கிராம போஜனம்'. அடையாறு, சர்தார் படேல் சாலையில், பெரிதாக வெளியில் தெரியாமல் சற்று உள்ளடங்கியிருக்கிறது இந்த உணவகம். முதல் மாடியில் இருந்த ஒரு சிறு வீட்டை உணவகமாக மாற்றியிருக்கிறார்கள். ஆங்காங்கே காகிதத் தோரணங்கள். மனதைக் குளிர்விக்கும் சித்திரங்கள். சூழலே ஒன்றச் செய்துவிடுகிறது. முகப்பில் நம் பாரம்பர்ய அரிசிகள், தானியங்களையெல்லாம் சிறு சிறு டப்பாக்களில் போட்டுக் காட்சிப்படுத்தியிருக் கிறார்கள். இன்னொருபுறம், நாட்டுச்சர்க்கரையில் செய்யப்பட்ட பாரம்பர்ய இனிப்புகள் அடுக்கப் பட்டிருக்கின்றன. குழந்தைகள் எழுதிப் பழகும் சிலேட்டையே மெனு கார்டாக மாற்றியிருக்கிறார்கள். 35 பேர் அமர்ந்து சாப்பிடலாம். இணைய உணவு விற்பனையாளர்கள் ஒருபுறம் திரண்டு நிற்கிறார்கள். - 'சோறு முக்கியம் பாஸ்!' தொடரின் இந்த வாரமும் ஒரு சுவைமிகு அறிமுகம். 

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர்... எது உங்களுக்கு சவால் மிக்கதாக உள்ளது. உங்கள் மனதுக்கு நெருக்கமான வடிவமாக நீங்கள் உணர்வது எது?

"நாவலாசிரியர்தான் சவால் நிறைந்தது. வரலாற்று நாவலாசிரியர் பணி பல மடங்கு சவால் நிறைந்தது. நாவலின் புள்ளியை முடிவு செய்யும் வரைதான் கையும் பேனாவும் நம் வசம் உள்ளன. எழுதும்போதே, நாவலின் முதல் வாசகராக, அடுத்து என்ன, அடுத்து என்ன என நாவலின் ஓட்டத்தில் பயணிக்கும் தருணங்களின் படைப்பு மனநிலை ஈடு சொல்ல முடியாதது. வரலாற்றின் ரகசியப் பக்கங்களுக்குள் நாம் நுழையும் கணத்தில் எதிர்கொள்ளும் அதிர்ச்சியும் சுவாரஸ்யமும், ஆச்சர்யமும் நம்மை மாயாஜாலங்கள் நிறைந்தவராக உணர வைக்கும் தருணங்கள். மனித மனங்களுக்கு ஊடாகப் பயணிப்பதும், காலத்தின் ஊடாகப் பயணிப்பதும் அடர் காட்டில் சிறு ஒளியைப் பிடித்தபடி நடக்கும் பேரனுபவம். கவிஞராகவும் இருப்பதால், கவிதையின் தேரில் அமர்ந்து, நாவலுக்குள் பயணிக்கிறேன். கவிதையும் நாவலும் இணைந்த மேம்பட்ட வடிவமொன்று கைவசப்பட்டிருக்கிறது. அதுவே மனதிற்கு மிக நெருக்கமாகவும் உள்ளது.  

- தன்னுடைய கவிதைகளின் வழியே தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் அ.வெண்ணிலா. சிறுகதை, கட்டுரை எனத் தொடர்ந்து இயங்கிவருபவர். தற்போது தனது முதல் நாவலை வெளியிட்டுள்ளார். பொதுவாகப் பெண் எழுத்தாளர்கள் வரலாற்றுப் புதினங்களில் ஆர்வம் காட்டுவது குறைவு எனும்போது வெண்ணிலா 'கங்காபுரம்' என்னும் வரலாற்று நாவலை எழுதியுள்ளது இலக்கிய உலகில் கவனம் ஈர்த்துள்ளது. அவருடன் உரையாடலே "நாவலாசிரியர் என்பது சவாலான பணி!"

பிரியங்கா to தமிழிசை: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

தான் உண்டு தன் சோலி உண்டு என, இருக்கும் இடம் தெரியாமல் இருந்துகொண்டிருப்பவர் அஜித். அவரையே 'அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்து வெறுப்பாக்கியதோடு, 'வித்யாபதி, இன்று முதல் உமக்குப் பேசும் வல்லமையைத் தந்தோம்' எனப் பேசவும் வைத்து சாதனை புரிந்திருக்கிறார் தமிழிசை. இதேபோல் வெறென்ன, 'மிஷன் இம்பாஸிபிள்'களை தமிழிசை செய்துமுடித்து சாதனை புரிவார் என முன்னோக்கிச் சிந்தித்ததில்...

'ட்விட்டராண்டவர்' கமல் புரியும்படி கீச்சும் அரிய சாதனையை நிகழ்த்திக்காட்ட தமிழிசையால் முடியும்! தமிழிசையால் மட்டும்தான் முடியும்!  'பெண்பாடு; பண்பாடு', 'நீர்; போர்' என வார்த்தை விளையாட்டுகளில் வித்தகம் புரிந்துகொண்டிருக்கும் தமிழிசை, ட்விட்டரில் ட்விட்டராண்டவரை விமர்சித்து நான்கைந்து கவிதைகள் எழுதினால் போதும்.

- இது போன்ற மேலும் சில ஐட்டங்களின் ஜாலி தொகுப்புதான் 'தரமான சம்பவங்கள் - by தமிழிசை'

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2DIu8Li