R15 V3 இன்ஜின், நேக்கட் டிசைன்... ஸ்டைலா, கெத்தா வரப்போகுது யமஹா MT-15! | Yamaha MT-15 details leaked

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (31/01/2019)

கடைசி தொடர்பு:14:50 (31/01/2019)

R15 V3 இன்ஜின், நேக்கட் டிசைன்... ஸ்டைலா, கெத்தா வரப்போகுது யமஹா MT-15!

FZ போன்ற நேக்கட் ஸ்ட்ரீட் டிசைனோடு மார்ச் மாதத்துக்கு முன்பு விற்பனைக்கு வரப்போகுது இந்த ஃபேரிங் இல்லா R15...

யமஹா, புதிய MT-15 பைக்கை விற்பனைக்குக் கொண்டுவரப்போகிறது. இந்தியாவில் டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த பைக்கை மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதிவுசெய்ய கொடுக்கப்பட்ட 'Type Approval Certificate' இணையத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

யமஹா MT-15

இந்தச் சான்றிதழ்படி, MT-15 பைக்கில் 155சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வருகிறது. இது, 19.04bhp பவர் வெளிப்படுத்துகிறது. யமஹா R15 V3.0 பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான். 14.7Nm டார்க்கில் எந்த மாற்றமும் இருக்காது. பைக்கின் அளவுகளைப் பொறுத்தவரை நீளம்-2,020 மி.மீ, அகலம்-800 மி.மீ மற்றும் உயரம்-1,070 மி.மீ உள்ளது.

Type Approval certificate

நன்றி - https://bit.ly/2FZl478

தாய்லாந்தில் வெளியான MT-15 பைக்கை ஒப்பிடும்போது, இந்திய மாடலின் நீளம் 325 மி.மீ அதிகமாக உள்ளது. உயரமும் 5 மி.மீ அதிகம். ஆனால், இரண்டு மாடலிலும் 1,335 மி.மீ வீல்பேஸ் உள்ளது. இந்திய மாடலில் டெயில் பகுதி நீளமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. R15 பைக்கில் இருக்கும் டயர்கள் இல்லாமல், புதிய டயர்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. 

MT-15

பைக்கின் மொத்த எடை 288 கிலோ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். பைக்கின் மற்றும் ரைடர் இருவரின் எடையும் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. ரைடரின் எடை தோராயமாக 75 கிலோ என்று எடுத்துக்கொண்டால், MT-15 பைக்கின் எடை 138 கிலோ இருக்கும். R15 V3 பைக்கில் வந்ததுபோல தாய்லாந்து மாடலை விட 5 கிலோ எடை கூடுதலாக இருக்கலாம். இந்திய மாடலில், USD ஃபோர்க்குக்கு பதிலாக சாதாரண டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன்தான் வரும். அலுமினியம் ஸ்விங் ஆர்ம்-க்கு பதிலாக, பாக்ஸ் செக்‌ஷன் ஸ்விங்ஆர்ம் வரும். மார்ச் மாதத்துக்கு முன்பு இந்த பைக் விற்பனைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.