Published:Updated:

வயிற்றுப் போக்குக்கு புதிய மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

ஹைதராபாத்: வயிற்றுப் போக்குக்கு எதிராக போராடும் புதிய மருந்தை ஹைதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ரோட்டா வைரஸ் தாக்கி உயிரிழக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் லிமிடட் நிறுவனத்தைச் சேர்ந்த இந்திய விஞ்ஞானிகள், அந்த வைரஸை எதிர்த்து போராடும் புதிய மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.

##~~##
வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்ட இந்த மருந்தினை குழந்தைகளுக்கு மூன்று தவணைகளாக கொடுத்தால், அவர்களுக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டு உயிரிழப்பது தவிர்க்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வயிற்றுப் போக்குகளைத் தடுக்கும் வெளிநாட்டு மருந்துகளின் விலையை விட மிகக் குறைந்த விலையில் இது விற்பனைக்கு வர உள்ளது.