PUBG விளையாட மொபைல் வாங்கித் தராததால் மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு! | Denied new phone to play PUBG, teenager commits suicide

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (04/02/2019)

கடைசி தொடர்பு:20:50 (04/02/2019)

PUBG விளையாட மொபைல் வாங்கித் தராததால் மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், PUBG கேம் ஆட குடும்பத்தினர் புதிய மொபைல் வாங்கித்தராத காரணத்தால், தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

PUBG

காவல்துறையின் தகவலின்படி, மும்பையில் உள்ள குர்லாவின் நேரு நகர் பகுதியில் வசித்துவந்த அந்த இளைஞர், தீவிர PUBG ரசிகராக இருந்திருக்கிறார். தாய், அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது குழந்தையுடன் வாழ்ந்துவந்திருக்கிறார் அவர். நல்ல க்ராஃபிக்ஸில் எந்த வித சிக்கலும் இன்றி இந்த கேமை ஆட விரும்பிய அவர், 37,000 ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பிரீமியம் மொபைல் ஒன்றை வாங்கிதருமாறு தனது அண்ணனிடம் கேட்டுள்ளார். ஆனால் இதை மறுத்து, தன்னால் அதிகபட்சம் 20,000 மதிப்பிலான மொபைலைத்தான் வாங்கித்தர முடியும் என்று கூறியுள்ளார். இதனால், கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. ஆனாலும், அவர் எதிர்பார்த்தது கிடைப்பதாக இல்லை. வாக்குவாதம் முடிந்து அனைவரும் இரவு 2 மணிக்கு தூங்கச் சென்றிருக்கின்றனர். ஆனால், அந்த இளைஞர் மட்டும் விடாமல் PUBG ஆடியிருக்கிறார். இரவு கழிவறை செல்ல எழுந்த அண்ணன், சமையலறையிலிருந்த ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பியைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். மொபைல் கிடைக்காத விரக்தியில்தான் இதை அவர் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விரக்தி

தற்போது, அந்தப் பகுதியின் காவல்துறை இதுதொடர்பான விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சமீபத்தில்தான் 11-வயதான சிறுவன்   ஒருவன், இந்த கேம் பலரை அடிமையாக்குகிறது; வன்முறை, கொலை, ஆக்கிரமிப்பு, சூறையாடல் போன்றவற்றை ஊக்குவிக்கிறது என PUBG-க்கு தடைகோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க