புதிய டச் ஸ்க்ரீன், ஏபிஎஸ்... 2019 ரெனோ க்விட் காரில் என்ன ஸ்பெஷல்? | Renault Launches New Kwid with ABS, Apple & Android Connectivity!

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:09:00 (05/02/2019)

புதிய டச் ஸ்க்ரீன், ஏபிஎஸ்... 2019 ரெனோ க்விட் காரில் என்ன ஸ்பெஷல்?

வருகிற ஏப்ரல் 1, 2019 முதலாக, வாகனங்களின் பாதுகாப்பில் புதிய விதிகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. எனவே, வாகனத் தயாரிப்பாளர்கள், தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களை அதற்கேற்ப மேம்படுத்தி வருகின்றனர். புதிய வெளியீடுகள் புதிய விதிகளின்படி இருப்பதையும் பார்க்க முடிகிறது. எனவே, அந்த வரிசையில் ரெனோ நிறுவனம், இந்தியாவில் தனது டாப் செல்லிங் காரான க்விட்டின் மேம்படுத்தப்பட்ட மாடலைக் களமிறக்கி இருக்கிறது. 6 கலர்கள் மற்றும் 8 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்தக் காரின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (2.78 - 4.75 லட்ச ரூபாய்), சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த க்விட் பேஸ்லிஃப்ட் மாடலின் அதே விலையில் வந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது. ஆனால், மார்ச் 2019 முதலாக, வேரியன்ட்டுக்கு ஏற்ப காரின் விலையை 10,000-லிருந்து 20,000 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம் எனத் தகவல்கள் வந்திருக்கின்றன. ஆகவே, இது அறிமுக விலையாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. காரின் டிசைன், இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை.

 

ரெனோ

 

கேபினில் இருக்கும் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு வசதிகளிலும்தான் முன்னேற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதே 7 இன்ச்தான் என்றாலும், அதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டி இடம்பெற்றிருக்கிறது. மேலும், Voice Recognition, யுஎஸ்பி வாயிலாக வீடியோ Playback, USB Fast சார்ஜர் ஆகிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே, தனது வகையில், முன்னே சொன்ன வசதிகளைக் கொண்டிருக்கும் விலைகுறைவான கார் என்ற பெருமையை, ரெனோ க்விட் பெற்றிருக்கிறது. இந்தக் காரின் அனைத்து வேரியன்ட்டிலும் டிரைவர் காற்றுப்பை, ABS & EBD, ஸ்பீடு அலர்ட், முன்பக்கப் பயணிகளுக்கான சீட் பெல்ட் Reminder ஆகியவை கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட டட்ஸன் ரெடிகோ (பேஸ்லிஃப்ட்) மற்றும் முற்றிலும் புதிய மாருதி சுஸூகி ஆல்ட்டோ (அக்டோபர் 2019 அறிமுகம்) ஆகியவற்றை எதிர்கொள்ள, ரெனோ தனது அஸ்திரத்தைத் தயாராக வைத்திருக்கிறது எனலாம்.

 

க்விட்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க