மஹிந்திரா XUV300 - சைஸ், மைலேஜ், வேரியன்ட், கலர், வசதிகள் பற்றித் தெரியுமா? | What are the Technical Details & First in Class Features of Mahindra XUV300?

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (06/02/2019)

கடைசி தொடர்பு:07:50 (06/02/2019)

மஹிந்திரா XUV300 - சைஸ், மைலேஜ், வேரியன்ட், கலர், வசதிகள் பற்றித் தெரியுமா?

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு எக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் ஆகிய 4 மீட்டருக்குட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, XUV300 காரை வருகின்ற பிப்ரவரி 14, 2019 அன்று அறிமுகப்படுத்த இருக்கிறது மஹிந்திரா. இந்த காரின் அதிகாரபூர்வ படங்கள் தற்போது இணையத்தில் வெளியான நிலையில், மற்ற விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. ஸாங்யாங் டிவோலி தயாரிக்கப்படும் x100 ப்ளாட்ஃபார்மில்தான் இந்த காம்பேக்ட் எஸ்யூவியும் தயாரிக்கப்படுகிறது. அதைவிட 200மிமீ குறைவான நீளத்தைக் கொண்டிருந்தாலும், இது 26மிமீ கூடுதல் அகலம் மற்றும் 27மிமீ கூடுதல் உயரத்தைக் கொண்டுள்ளது. தவிர போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிக அகலம் மற்றும் வீல்பேஸ், பெரிய டயர்கள், பவர்ஃபுல் இன்ஜின்கள் போன்ற பல ப்ளஸ் பாயின்ட்களை இந்த மஹிந்திரா கார் கொண்டிருக்கிறது. எனவே XUV300-ன் சைஸ், மைலேஜ், வேரியன்ட் மற்றும் வசதிகள் என்ன என்பதைப் பார்ப்போமா?

 

XUV300

 

நீளம்/அகலம்/உயரம் (மிமீ): 3,995/1,821/1,617 மிமீ
வீல்பேஸ்: 2,600 மிமீ
ஃப்யூல் டேங்க்: 42 லிட்டர்
டயர்கள்: 215/55 R17
பூட் ஸ்பேஸ்: 257 - 625 லிட்டர்
டர்னிங் ரேடியஸ்: 10.6 மீட்டர்

 

மஹிந்திரா

 

இன்ஜின்கள் (பெ/டீ): 1.2 லிட்டர் டர்போ/1.5 லிட்டர்
கியர்பாக்ஸ் (பெ/டீ): 6 ஸ்பீடு மேனுவல்
அராய் மைலேஜ் (பெ/டீ): 17/20 கிமீ
உத்தேச விலை: 8-12 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்)
வேரியன்ட்கள்: W4, W6, W8, W8(O)
கலர் ஆப்ஷன்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்ச், கறுப்பு, சில்வர், வெள்ளை

 

 

காம்பேக்ட் எஸ்யூவி

 

First In Class வசதிகள்: டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், சன் ரூஃப், 7 காற்றுப்பைகள், 3 ஸ்டீயரிங் மோடுகள் (Comfort, Normal, Sports), மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம், Heated ரியர் வியூ மிரர்கள், Hill Hold Assist, Electronic Stability Control, Tyre Pressure Monitoring System, Tyre Position Display, Ambient Lighting, Auto Dimming IRVM, 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க