30 ஆண்டுகள் காத்திருந்து ஓட்டுநர் உரிமம் எடுத்திருக்கும் வழக்கறிஞர்! | Chennai Advocate Waited 30 years for Monocular vision driving license

வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (06/02/2019)

கடைசி தொடர்பு:14:10 (08/02/2019)

30 ஆண்டுகள் காத்திருந்து ஓட்டுநர் உரிமம் எடுத்திருக்கும் வழக்கறிஞர்!

30 ஆண்டுகள் காத்திருந்து ஓட்டுநர் உரிமம் எடுத்திருக்கும் வழக்கறிஞர்!

காசு, பணம், புகழ், பதவி இந்த எதுவுமே ஒரு மனிதனின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில்லை. தன்னம்பிக்கை மட்டும்தான் அதைத் தீர்மானிக்கிறது. முதல் முறை கார் ஓட்டும்போது நம்மிடம் LLR இருக்காது, சொந்த கார் இருக்காது, பெரும்பாலும் 18 வயதுகூட நிரம்பியிருக்காது. சர்ச்சில் தங்கம் முதல்முறை கார் ஓட்டும்போது அவருக்கு ஒரு கண்ணில் பார்வையே இல்லையாம். ஒரு கண்ணில் பார்வை இல்லாமல் 50 வயதில் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கிறார். 30 ஆண்டுகள் இல்லாத ஓட்டுநர் உரிமம் இப்போது எதற்கு என்ற கேள்வி எழ அவரிடம் தொடர்ந்து பேசினேன்.

ஒரு கண் பார்வையுடன் ஓட்டுநர் உரிமம் எடுக்கலாம் என்பதற்கான GO

``14 வயசுல நண்பன் விளையாட்டா அடிச்சதுல இடது கண் பார்வை போயிடுச்சு. நானே பைக், கார் ஓட்ட கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் லைசென்ஸ் இல்லாமதான் ஓட்டினேன். நான் வக்கீலுக்கு பிராக்டிஸ் பண்றப்போதான் அது எவ்வளவு பெரிய ரிஸ்க்னு தெரிஞ்சது. கார் வாங்கின பிறகு, கால் டிரைவர் வச்சி ஓட்டினேன். அவசர வேலைகளுக்கும் வெளியூர் பயணங்களுக்கும் அவரை கூட்டிட்டு போறது சிரமமா இருந்தது. என்னோட மனைவி நல்லா கார் டிரைவ் பண்ணுவாங்க. ஆனா, அவங்களும் இல்லைனா நான் பஸ், ஆட்டோல போக  வேண்டியது இருந்தது. இந்த விஷயத்துல எனக்கான சுதந்திரம் எங்கிட்ட இல்லையேனு தோனுச்சு.

லைசென்ஸ் எடுக்க ஏதாவது வழி இருக்கானு பார்த்தப்போ, இடது கண்ணை எடுத்திட்டு அங்க ஒரு செயற்கை கண் பொருத்தி கண் இருக்கிற மாதிரி காமிச்சி லைசென்ஸ் எடுக்க நிறைய பேர் சொன்னாங்க. ஒரு தப்ப மறைக்க இன்னொரு தப்பு பண்ண விருப்பம் இல்லை’’ என்றார் வெளிப்படையாக.

சர்ச்சில் தங்கம்

`Monocular Vision இருப்பவர்களுக்கு சில விதிகளின் கீழ் ஓட்டுநர் உரிமம் தரலாம்’ என 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு   பரிந்துரைத்தது. RTI-யில் பெற்ற இந்தyf தகவலை வைத்துதான் தற்போது ஓட்டுநர் உரிமம் வாங்கியிருக்கிறார் சர்ச்சில் தங்கம். 

``ஏற்கெனவே லைசென்ஸ் வச்சிருக்கவர் விபத்தில் ஒரு கண் பார்வை இழந்துட்டா அவருக்கு Monocular Vision லைசென்ஸ் கிடைக்கிறது பெரிய விஷயம் இல்லை. ஆனால், ஒரு கண் பார்வையோட புதுசா ஒருவர் லைசென்ஸ் வாங்க முடியாது. இதுக்கு தீர்வா, 2017 நவம்பர் மாசம் மத்திய அரசு சில நிபந்தனைகளோட, ஒரு கண் பார்வை உள்ளவங்க லைசென்ஸ் எடுக்கலாம்னு பரிந்துரைச்சாங்க. இந்தத் தகவல் கேள்விப்பட்டு லைசென்ஸ் எடுக்க RTO கிட்ட மத்திய அரசு GO கொண்டுபோய் காட்டினேன். 6/12 அளவைவிட நல்ல கண்பார்வை இருக்குனு அரசு கண் மருத்துவமனையில் மெடிக்கல் சர்டிஃபிகேட் கொடுத்தேன். டெஸ்ட்டிலும் நல்லா கார் ஓட்டிட்டேன். ஒரு வாரத்துல எனக்கு லைசென்ஸ் கெடச்சிடுச்சு.

Blind certificate

RTO அலுவலகத்தில் மெடிக்கல் சர்டிஃபிகேட் கேக்குறாங்க. ஆனால், கண் மருத்துவமனையில் 'Blid Certificate' கொடுக்கிறாங்க. கண் மருத்துவர் கொடுக்கும் சர்டிஃபிகேட் எப்படிப் பிடிக்கிறதுனு நிறையே பேருக்குத் தெரியலை’’ என்றார். 

இந்தப் பரிந்துரை வந்து 2 வருஷம் ஆகுது. ஆனால், இன்னும் நிறைய பேருக்கு போய்ச் சேரலை. சமீபத்தில் ஒருவரைச் சந்திச்சேன். `லைசென்ஸ் எடுத்துத் தர முடியுமா’னு கேக்குறார். அவருக்குச் சரியான வருமானம் இல்லையாம். லைசென்ஸ் எடுத்தா ஸ்விக்கியில் ஓட்டி சம்பாதிச்சிக்குவேன்னு சொல்றார். அவருக்கு நாளைக்கு மெடிக்கல் சர்டிஃபிகேட் வாங்கப் போறோம். இப்போ என் பையனை ஸ்கூல் ஆனுவல் டே கூட்டிட்டு போகப்போறேன். நான் யாரையும் நம்பி இல்லனு தோனுது. இப்பத்தான் சந்தோஷமா இருக்கு’’ என்றவர் றெக்கை விரித்துப் பறப்பதுபோல அங்கிருந்து தன் காரை எடுத்துச்சென்றார்.


டிரெண்டிங் @ விகடன்