1000 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி - பாஸ்வேர்டை யாரிடமும் சொல்லாமல் இறந்த அதிபர்! | Cryptocurrency exchange owner dies without sharing the password leaving 1000 rupee worth cryptocurrency at stake

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (06/02/2019)

கடைசி தொடர்பு:15:00 (06/02/2019)

1000 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி - பாஸ்வேர்டை யாரிடமும் சொல்லாமல் இறந்த அதிபர்!

கனடாவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் க்வாட்ரீகா. இதன் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெரால்டு கோட்டேன் டிசம்பர் மாதம் உயிரிழந்தார். 'Crohn's disease' என்னும் நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது முப்பதாவது வயதில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்தபோது இயற்கை எய்தியுள்ளார். ஆனால், நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை முழுமையாகப் பார்த்துவந்த அவர் கடவுச்சொல் உட்பட எந்தத் தகவலையும் எவரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் இறந்திருக்கிறார்.

Gerald cotten

இந்த எதிர்பாராத மரணத்தினால் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவேண்டிய 1,000 கோடி ரூபாய் ($140 மில்லியன்) மதிப்பிலான பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளுக்கும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தச் சிக்கலை தீர்க்கும்வரை சில காலம் தங்களுக்கு 'creditor protection' வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது அந்த நிறுவனம்.

கிரிப்டோகரன்சி

ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் எங்களுக்கு இந்த இறப்பின்மீது நம்பிக்கை இல்லை. ஏதேனும் ஆதாரத்தைக் காட்டுங்கள் எனச் சமூகவலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர். ஜெரால்டு கோட்டேனின் மனைவி ஜெனிபர் ராபர்ட்சனும் தனக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது, வீட்டில் முழுமையாகத் தேடியும் இது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். ஆன்லைனில் இருந்தால் ஹேக்கிங் பிரச்னைகள் வரும் என ஆஃப்லைனில் "cold wallet"-களில் இந்த கிரிப்டோகரன்சி தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதை நேரில் சென்று மட்டும்தான் இயக்கமுடியும். இதைப்பற்றிய தகவல்கள் தெரியாமல்தான் இந்த நிறுவனம் இப்போது திக்குமுக்காடியுள்ளது.

பிட்காயின்

நீதிமன்றத்தால் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோட்டேனின் லேப்டாப்பை ஹேக் செய்து தகவல்களை வெளியே எடுக்க முன்னணி ஹேக்கர்கள் முயற்சி செய்துவருகின்றனர். இருப்பினும் முழுமையாக அனைத்தையும் மீட்கமுடியாது எனத் தெரிகிறது. எனவே தற்போது கிரிப்டோகரன்சியில் இருக்கும் பாதுகாப்பு வசதிகள் இன்னும் சீர்செய்ய வேண்டும் என முயற்சிகள் எடுத்துவரப்படும். இந்த நிலையில் இது கிரிப்டோகரன்சி சந்தையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க