சந்தோஷத்தில் மெசேஜ் பிரியர்கள்... வரவிருக்கிறது புதிய 230 எமோஜிகள்! | 230 NEW emoji coming to your Android in 2019

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (07/02/2019)

கடைசி தொடர்பு:08:30 (07/02/2019)

சந்தோஷத்தில் மெசேஜ் பிரியர்கள்... வரவிருக்கிறது புதிய 230 எமோஜிகள்!

கடந்த நூற்றாண்டுகளிலோ நேரில் அதிகமாகப் பேசினோம். ஆனால், அந்தக் காலங்கள் எல்லாம் மாறி தற்போது, செல்லிடப்பேசி மயமானது. ஆனால் அதையும் விஞ்சி வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் எனச் சமூகவலைதளங்களில் உரையாடுவது தற்போது அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இப்படியான உரையாடல்களில் வார்த்தைகளைவிட எமோஜிகள் (உணர்ச்சி குறியீடுகள்) முக்கிய பங்காற்றி வருகின்றன என்பது நம்மால் மறுக்கமுடியாத ஒன்று. மெசேஜால் புரியவைக்க முடியாததை எமோஜிகள் எளிதாகப் புரிய வைக்கின்றன எனலாம். எமோஜிகளே உரையாடல்களாகவும் மாறுகின்ற இந்த வேளையில், இந்த வருடம் வரவிருக்கின்றன 230 புதிய எமோஜிகள்...

எமோஜி

உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் அதற்கேற்ற வடிவில் ஒருங்கிணைத்து கணினி மொழி வடிவில் தரும் யூனிகோடு (unicode) நிறுவனம் தான் இந்த எமோஜிகளை வெளியிட உள்ளது.

அதில் 59 புதிய எமோஜிகள், 171 ஆண், பெண் மற்றும் முக வேறுபாடுகளுடனாக (skintone) மொத்தம் 230 எமோஜிகளாக உள்ளன..

அதில் அடங்கியுள்ள எமோஜிகளாவன 

1.எந்திர கை என்னும் Mechanical  Arm 
2.காது கேளாத மனிதன்  போல (deaf person )
3.ரத்தத்துளி போல (drop of  blood )
4. சிறிய அப்பம் (waffle )
5.ஐஸ்  கியூப் (ice cube )
6.கொட்டாவி  விடுதல் (yawning  face )
7.கிள்ளுதல்  போல (pinching  hand )

மேலும் பண்புகளை  கூறும் எமோஜிகளாக ,
1.ஆண், பெண் wheelchair ல் உட்காந்திருப்பது போல 
2. நாயை  வழிநடத்துவது (guide dogs )
3.ஆண் பெண் இருவரும்  கையை அணைத்திருப்பது (people  holding hands ) போலவும் அமைந்துள்ளன.

எமோஜி

இத்தகைய எமோஜிகள் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் பயனாளர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவை இந்த வருடம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.