2019 பஜாஜ் டொமினார் பைக்கின் புக்கிங் தொடங்கியது - மாற்றங்கள் என்ன? | Bajaj Opens Bookings of 2019 Dominar 400 - What are the Changes?

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (07/02/2019)

கடைசி தொடர்பு:08:00 (07/02/2019)

2019 பஜாஜ் டொமினார் பைக்கின் புக்கிங் தொடங்கியது - மாற்றங்கள் என்ன?

கடந்த டிசம்பர் 2016-ல் வெளிவந்த டொமினார் 400, பஜாஜ் நிறுவனத்தின் விலை அதிகமான பைக்காக இருப்பது தெரிந்ததே. ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் சீரிஸ் பைக்குகளுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்ட இந்த பைக், அந்த நிறுவனம் எதிர்பார்த்த விற்பனை இலக்கை அடையவில்லை. மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில், 2-4 லட்ச ரூபாய் செக்மென்ட்டில் புதிய தயாரிப்புகளும் (டிவிஎஸ் அப்பாச்சி RR310, பிஎம்டபிள்யூ G310R & G310GS, கவாஸாகி நின்ஜா 300 ABS, யமஹா YZF-R3 ABS, ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்ஸ், ஜாவா சீரிஸ்) அறிமுகமாகிவிட்டன.

 

டொமினார் 400

 

எனவே இதைக் கருத்தில்கொண்டு, அடுத்தத் தலைமுறை டொமினார் 400 பைக்கைத் தயாரிக்கும் பணிகளில் இறங்கியது பஜாஜ். கடந்த சில மாதங்களாக இந்தியா முழுக்க தீவிரமான டெஸ்ட்டிங்கில் இருந்த இந்த பைக்கில், என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் இணைய உலகில் நிலவிவந்தது. இதற்கான விடையை, சமீபத்தில் வெளிவந்த The World's Favourite Indian' விளம்பரத்தில் இந்த நிறுவனம் தந்திருக்கிறது. இந்நிலையில் புதிய டொமினாரின் புக்கிங் தொடங்கிவிட்டது! இதற்காக 5,000 ரூபாய் செலுத்தினால் போதும். 

 

பைக்கில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

 

பஜாஜ்

 

ஸ்பை போட்டோ மற்றும் பஜாஜ் வலைதளத்தில் இருந்த படத்தை வைத்துப் பார்க்கும்போது, மிக முக்கியமான மாற்றமாக USD ஃபோர்க் இருக்கிறது. இது கேடிஎம் டியூக் 390 பைக்கில் இருக்கும் அதே பாகம்தான் என்பதை உணர்த்தும் விதமாக, டிஸ்க் பிரேக் அமைப்பு இடம் மாறியிருக்கிறது. மேலும் பெட்ரோல் டேங்க், இன்ஜின் Cowl, ஹெட்லைட் Visor ஆகியவற்றில் சிறிய டிசைன் மாற்றம் தெரிகிறது. தவிர ரியர் வியூ மிரர்கள் புதிதாக இருக்கிறது. சிறப்பான எக்ஸாஸ்ட் சத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக, புதிய டூயல் Port எக்ஸாஸ்ட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரட்டை டிஸ்பிளேக்கள், கியர் இண்டிகேட்டர் போன்ற கூடுதல் தகவல்களைத் தெளிவாகக் காட்டும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 373.2சிசி இன்ஜின் BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப இருக்கும்படியும், முன்பைவிட அதிக பவர் - டார்க் வெளிப்படுத்தும்படி டியூன் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. DOHC அல்லது Ride By Wire அமைப்பு இதற்காகப் பயன்படுத்தப்படலாம். முன்னே சொன்ன விஷயங்களால், தற்போதைய மாடலைவிடப் புதிய மாடலின் விலை அதிகமாக இருக்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க