Published:Updated:

சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் சாத்தியமா?

சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் சாத்தியமா?
சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் சாத்தியமா?
சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் சாத்தியமா?

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வாங்கி பார்வையிட்டு, அதில் திருத்தம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, எஜமானரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படும் ஒரு கூண்டுக்கிளி போல் உள்ளதாக சாடியிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தை தொடர்ந்து, சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, அமைச்சரவை குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சரவை குழுவில் கபில் சிபல், வி. நாராயண சாமி மற்று சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும், சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சிறப்பு அழைப்பாளராக இக்குழுவில் இடம்பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களே ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளது ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது ஒரு கண்துடைப்பு நாடகம் எனக்கூறியுள்ள பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி,"இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே

##~~##
வேறுபாடுகள் உள்ளது.சி.பி.ஐ. அமைப்பு சுதந்திரமாக செயல்படுவது குறித்தான உடன்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். தற்போது அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம். மீண்டும் இதனை தொடங்க தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
இத்தகைய நிலையில், சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படுவது சாத்தியமா...? இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்.. விவாதிக்கலாம்.