புதுவருடத்தில் முதலீடு செய்யலாம், வரியையும் மிச்சப்படுத்தலாம்! | Invest in New Year and save tax!

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (07/02/2019)

கடைசி தொடர்பு:16:11 (07/02/2019)

புதுவருடத்தில் முதலீடு செய்யலாம், வரியையும் மிச்சப்படுத்தலாம்!

நடப்பு  2019-ம் ஆண்டில்  முன்னேற்றத்துக்கு தேவையான பல தனிப்பட்ட தீர்மானங்களை எடுத்திருப்பீர்கள். இதுவரை  வருமான வரியை மிச்சப்படுத்த முதலீடு செய்யாமல் இருந்தால் அதற்கு இப்போது  பிள்ளையார் சுழி போட்டுவிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், நல்லதைச் செய்ய சிறந்த நேரம் என்பது 'இப்போது' மட்டுமே!

நாம் கட்டும் வருமான வரியை சேமிக்க எவ்வாறு முதலீடு செய்து லாபத்தைப் பெருக்கலாம் எனப் பார்ப்போம்!

வருமான வரி பிரிவு 80சி என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?


நீங்கள் வேலைப் பார்க்கும் அலுவலகத்தின் ஹெச்.ஆர். அல்லது கேஷியர்  பொதுவாக அக்டோபர்/நவம்பர் மாதத்தில் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்புவார். அதில், உங்களின் நிதியாண்டின் சம்பளம் மற்றும் இதர  வருமானங்களைக் குறிப்பிட்டு, நீங்கள் வருமான வரியை தவிர்க்க என்ன மாதிரி முதலீடுகளை செய்ய இருக்கிறீர்கள் என கேட்டிருப்பார். இதற்கும்  வருமான வரி பிரிவு 80சி-க்கும் தொடர்பு உண்டு. 80சி பிரிவின் கீழ் வரும் முதலீடு மற்றும் செலவுகளை நீங்கள் செய்திருந்தால், ரூ. 1,50,000 வரை வருமான வரி கட்டத் தேவையில்லை. இதனால், 80சி பிரிவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

எந்தெந்த முறைகளில் முதலீடு செய்தால்  80சி பிரிவுபடி வரி விலக்கு பெறலாம்?


பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் (பி.பி.எஃப்), வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், லைஃப் இன்ஷூயூரன்ஸ், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் ஆகியவற்றில் முதலீடு செய்து வரியை மிச்சப்படுத்தலாம். இந்த முறைகளைக் காட்டிலும் தற்போது அதிக பயனுள்ள வரி சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுவது இ.எல்.எஸ்.எஸ். எனப்படும் ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS - Equity Linked Savings Scheme) ஃபண்ட் என்பதாகும். 

இ.எல்.எஸ்.எஸ். என்றால் என்ன? அது நமக்கு எவ்வாறு உதவுகிறது?

இ.எல்.எஸ்.எஸ். எனப்படுவது  பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் எனப்படும் மியூச்சுவல் ஃபண்டாகும். இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டை  மூன்றாண்டு கழித்து எடுக்க முடியும்.  இதில் நாம் கட்டும் தொகை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் அதிகமாகும். ஆனால், எங்கு ரிஸ்க் அதிகமோ, அங்குதான் லாபமும் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சிறந்த இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட்களில் நாம் குறைந்தபட்சமாக 5 வருடம் முதல் 20 வருடங்கள் முதலீட்டைத் தொடரவதன்மூலம், நீண்டகால அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக 12%-14% லாபம் பெறமுடியும். 80சியில் கொடுக்கப்பட்டுள்ள பிற வரி சேமிப்பு முறைகளைக் காட்டிலும் இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் லாக் இன் பீரியட் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

ரூ.1,50,000 ரூபாய் வரை வருமான வரி உண்டு என்றால், இந்த மொத்தத் தொகையையும் இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாமா?

இந்தப் பிரிவின் கீழ் ரூ. 1.5  லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.  இதில், ஆயுள்  காப்பீடு பிரீமியம், சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் போன்ற பிடித்தங்கள் போக மீதி தொகையை இ.எல்.எஸ்.எஸ். ஸ்கீமில் முதலீடு செய்து, அந்த முதலீடு மூலம் வரியை சேமிக்கலாம்!

இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் எவ்வாறு நம் பணத்தை சேமிக்க உதவுகிறது?

உதாரணம்:

நீங்க எப்படி பீல் பண்றீங்க