Published:Updated:

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!
பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

இந்த வார ஆனந்த விகடன்: https://bit.ly/2UJIl0c

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

"ஈழத்தில் நடக்கும் அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதரர்களும் பிள்ளை களும் அறிவாயுதம் ஏந்தி யிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக் கிறேன்" என்று தனது இறுதிவரிகளைப் பதிவு செய்துவிட்டு சென்னை சாஸ்திரி பவன் வாயிலில் 29 ஜனவரி 2009 அன்று தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் பத்திரிகையாளர் முத்துக்குமார். அவர் மரணித்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இந்தப் பத்தாண்டுகளில் ஈழத்தில் போர் ஓய்ந்து அமைதியும் இயல்பும் திரும்பி வெள்ளைப் பூக்கள் மலர்ந்துவிட்டதாகவே பொதுச்சமூகம் நம்பிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஈழத்துக்கும் விடியவில்லை... இறந்த முத்துக்குமாரின் குடும்பத்துக்கும் விடிவு கிட்டவில்லை. 

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

"எங்களுக்கு தினக்கூலிதான் வயித்துச் சாப்பாட்டுக்கு. கூடவே, இரண்டு பிள்ளைங் களையும் படிக்க வெச்சாகணுமே! காலையில அப்பாவும் வீட்டுக்காரரும் பழைய இரும்பு பேப்பர் வாங்க வீடு வீடா போவாங்க; மாலையில இந்த ஐஸ் வண்டி வியாபாரம். அண்ணன் இறந்து இத்தனை வருசமாச்சு, ஒவ்வொரு முறை இறந்த தினத்தன்னைக்கும் சந்திக்கிறவங்க ஏதாவது உதவின்னா கேளுங்கன்னு சொல்லுவாங்க. அதோட அவங்களை அடுத்த நினைவு தினத்துலதான் சந்திக்க முடியும்."

- இலங்கைத் தமிழர்களுக்காக தன்னைத் தீக்கிரையாக்கிக் பத்திரிகையாளர் முத்துக்குமாரின் குடும்பத்தின் தற்போதையை நிலையை நமக்குக் காட்டுகிறது 'தமிழ்ச் சமூகத்தின் தியாகம் தள்ளுவண்டியில்!' எனும் சிறப்புக் கட்டுரை. 

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

* படத்தில் விக்ரமுக்கும் அக்‌ஷராவுக்கும் என்ன உறவு?

> "இரண்டு வெவ்வேறு தளங்களில் இருக்கிற விக்ரமுக்கும் அக்‌ஷராவுக்கும் நடக்கிற ஒரு சம்பவத்தால இந்த ரெண்டு பேரோட வாழ்க்கையும் அவங்களுக்குப் பிடிக்காமலே ஒண்ணாகிடுது. அதுக்கப்புறம் அந்த வாழ்க்கையையிலேயே அவங்க தொடர்ந்து போறாங்களா, இல்ல வெளியில வராங்களா என்பதுதான் கதை.

அக்‌ஷராவுக்கு ஜோடியா நாசர் சாரோட பையன் அபி நடிச்சிருக்கார். முதலில் இந்த ரோலுக்காக நாங்க பல பேரை ஆடிஷன் பண்ணினோம். வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆள்களை வரவெச்சு ஆடிஷன் பண்ணினோம். யாருமே செட்டாகலை. ஒரு நாள் கமல் சார், 'நம்ம நாசரோட பையன் அபி இந்தக் கேரக்டருக்கு செட் ஆவார்னு தோணுது. ஆடிஷன் பண்ணிப் பார்'னு சொன்னார். அப்புறம் அவரை வெச்சு ஒரு வாரம் ஆடிஷன் பண்ணினோம். அப்புறம் ஒரு வொர்க் ஷாப் வெச்சு அவரை நடிக்க வெச்சோம்."

- `தூங்காவனம்' படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா, விக்ரமை வைத்து `கடாரம் கொண்டான்' படத்தை எடுத்திருக்கிறார். டப்பிங் வேலைகளில் பிஸியாக இருந்தவர் உடனான இந்த சிறப்புப் பேட்டியில் படம் உருவாகும் விதம் குறித்து மட்டுமின்றி கமல்ஹாசன் பற்றிய பல தகவல்களை அளித்திருக்கிறார். 'விக்ரம் நடிக்க கமல் போட்ட கண்டிஷன்! - 'கடாரம் கொண்டான்' சீக்ரெட்...' எனும் பேட்டியைத் தவறவிடாதீர்கள். 

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

"வருமான வரிக்கான உச்சவரம்பைக் கூட்டியிருப்பது, நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்பைக் கூட்டும். மேலும், வங்கி, போஸ்ட் ஆபீஸ்  சேமிப்புக் கணக்கிற்கான TDS பிடித்தம் லிமிட்டைக் கூட்டியிருப்பது, இரண்டு வீடு வரை சொந்தப் பயன்பாட்டிற்கு வைத்திருப்பவர்களுக்கு வரிவிலக்கு, வீட்டு வாடகையின் மூலமாக வரும் வருமானத்திற்கு TDS பிடித்தத்திற்கான உச்ச வரம்பை உயர்த்தியுள்ளது போன்றவை வரவேற்பு பெறும். ஐந்தாண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதைக் கடைசிநேரத்தில் பட்ஜெட்டில் சேர்த்துள்ளது மத்திய அரசு."

"தேர்தல் காலத்தில் இடைநிலை பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும் என்றே  அரசியலமைப்பு சொல்கிறது. ஆனால், அதில் எந்தெந்த அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று வரையறுக்கவில்லை. அதை மத்திய பி.ஜே.பி அரசு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டது."

- "இது பட்ஜெட் அல்ல, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை", " இது மக்களின் நலன் காக்கும் பட்ஜெட்" - இரண்டுவிதமான குரல்கள் எழுகின்றன மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் மோடி அரசின் கடைசி அஸ்திரம் குறித்த முக்கியமான அலசல்தான் 'பட்ஜெட் - கடைசி அஸ்திரம் கை கொடுக்குமா?'

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

* ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைப் படிப்பதற்குக்கூட சிரமப்படுவதாகச் சில ஆய்வுகள் வந்துள்ளன? இதைத் தீர்ப்பதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?

> "அரசுப்பள்ளிகளில் பொதுவாகவே வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள குழந்தைகள்தான் அதிகம் சேர்கின்றனர். அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கப்பட்டாலும் சமூகச் சூழலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் இதுபோன்ற சிறு குறைகள் இருக்கவே செய்கின்றன. அதைப் போக்குவதற்கான முயற்சிகளையும் அரசு ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளும்."

* "ஒருபுறம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தப்போவதாகச் சொல்கிறீர்கள். இன்னொருபுறம் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக அல்லது அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?"

> "ஒரு பள்ளியைக்கூட மூடுகின்ற நோக்கம் அரசுக்கு இல்லை. இரண்டு மாணவர்கள் படிக்கின்ற பள்ளிகள்கூட இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத்தான் அரசு மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர்களுக்கும் அது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்."

தமிழக அமைச்சர்களில் நல்ல பெயர் உள்ள மிகச்சிலரில் ஒருவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். ஆசிரியர்கள் போராட்டம், கல்வித்தரம், அ.தி.மு.க.வின் இன்றைய நிலை என்று பல விஷயங்கள் குறித்து அவர் அளித்த "90 சதவிகிதம் வெல்வோம்!" எனும் சிறப்பு நேர்காணல் கவனத்துக்குரியது. 

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

`நான் உணர்ந்து, மெய் சிலிர்த்து வணங்கி மகிழும் தெய்வம் ராஜா சார்" என்றார் விஜய் சேதுபதி. கார்த்தி பேசும்போது "வெளிநாடெல்லாம் போனா ராப், பாப், ரெகே என்ன ஜானர் பாட்டு கேட்பீங்கன்னு கேட்பாங்க. எங்களுக்கெல்லாம் இளையராஜாங்கற ஒரே ஜானர்தான்னு சொல்லுவேன். என் மனைவி கர்ப்பிணியா இருக்கறப்ப, உங்களோட ஒரு லைவ் கான்செர்ட் நடந்தது. அப்ப 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி'ல அந்த ஆரம்ப வயலின்கள் வாசிச்சாங்க. என் பொண்ணு வயத்துல எட்டி உதைச்சிருக்கா. அதை என் மனைவி சொல்றப்ப அத்தனை சந்தோஷப்பட்டேன்" என்றார்.

- தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நிகழ்த்திய 'இளையராஜா 75' விழாவின் முதல்நாள், இளையராஜா பாடல்களுக்கு, நடனக்கலைஞர்கள் சங்கம் சார்பில் திரைக்கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், தினேஷ் மாஸ்டரின் நடன அமைப்பில் நடந்தது. இரண்டாம் நாள் ராஜா ரசிகர்களுக்கான திருநாள். இளையராஜாவின் இன்னிசையால் இரவும் நிலவும் நனைந்தன. அந்த ஈரத் துளிகளைத் தந்திருக்கிறது 'இசையில் நனைந்ததம்மா!' எனும் பதிவு. 

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

* "அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத்தை அப்பா கேரக்டர்ல நடிக்க வைக்கிற ஐடியா எப்படி வந்தது?" 

> "கதைப்படி, அப்பாவான அவரும், மகனான நானும் அரசியலில் இருப்போம். அப்பா கேரக்டர்ல இவர் நடிச்சா நல்லா இருக்கும்னு நான்தான் நினைச்சேன். கதையைக் கேட்டவர், உடனே சரின்னு சொல்லிட்டார். ரொம்ப ஜாலியான நபர் நாஞ்சில் சார். ஷூட்டிங் ஸ்பாட்ல நான் அவரைத் தம்பின்னுதான் கூப்பிடுவேன். அவர் என்னை, 'மகனே'ன்னு கூப்பிடுவார். படத்துல, அழகு மெய்யப்பன் என்ற கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவர் கேரக்டர் எப்படி இருக்கும்ங்கிறது சர்ப்ரைஸ். அவர்கிட்ட அடிக்கடி, 'படம் வந்தா, யாருக்கு என்ன நடக்குதோ இல்லையோ... தமிழ் சினிமாவுல முக்கியமான ஆளா நீங்க வந்திடுவீங்க'ன்னு சொல்வேன். குறைந்தபட்சம், இந்தப் படம் ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு ஒரு 20 படங்களாவது அவருக்கு வரும்."

- ஒரு படத்துக்கான கதையை எழுதலாம்னு எனக்கு நம்பிக்கை வந்தது அப்போதான். இன்றைய அரசியல் சூழலைப் பார்த்து எல்லோருக்குமே கோபம், வெறுப்பு, விரக்தி இருக்கு. அதையெல்லாம் என் கதையில கொண்டுவந்தேன். அதுதான், 'எல்.கே.ஜி' ஆகியிருக்கு என்று கூறும் ஆர்.ஜே.பாலாஜி தனது படம் உருவான விதம் குறித்து "தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களே..." எனும் பேட்டியில் சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

திராவிடர் கழகத்தில் இருந்தபோதே நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு அண்ணாமீது ஏதோ மனவருத்தம். அண்ணாவின் சாத்விகப் பண்பு, கலகக்காரரான ராதாவுக்குப் பிடிக்காமல்போயிருக்கலாம்.  அண்ணாவைத் 'தளபதி' என்று அழைப்பது திராவிடர் கழக வழக்கம். ஒரு நாடகத்தில் கருணாநிதியுடன் நடிக்கும்போது, "தளபதி, தளபதி என்கிறீர்களே, எத்தனை போர்களைச் சந்தித்திருக்கிறார் உங்கள் தளபதி?" என்று கேட்டார் ராதா. அது ஸ்க்ரிப்டிலேயே இல்லாத வசனம். திடீரென்று கேட்டதால் திகைத்துப் போகாமல், '`உறையில் இருந்தாலும் வாளுக்கு வாள் என்றுதான் பெயர். மீட்டப்படாவிட்டாலும் வீணைக்கு வீணை என்றுதான் பெயர்" என்று சாமர்த்தியமாகச் சமாளித்தார் கருணாநிதி. ஒருகட்டத்தில் 'அறிஞர் கருணாநிதி வசனம் எழுதிய நாடகம்' என்றே நாடகம் ஒன்றுக்கு விளம்பரம் செய்தார் எம்.ஆர்.ராதா. 'அறிஞர்' என்ற பட்டத்தைக் கருணாநிதி ஏற்காததால் 'கலைஞர்' என்று பட்டம் வழங்கினார். பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்து சென்றபோது, 'அண்ணாவின் அவசரப்புத்தி' என்று ஒரு புத்தகத்தைச் சுடச்சுடத் தயார் செய்து, அதை அண்ணாவிடமே கொண்டுபோய்க் கொடுத்தார் நடிகவேள். அண்ணாவும் அதைப் பெருந்தன்மையாக வாங்கிக்கொண்டார். நடிகவேளின் துணிச்சலையும் அண்ணாவின் அரசியல் நாகரிகத்தையும் இன்று நினைத்துப்பார்க்க முடியுமா? 

- இந்த ஆண்டோடு அண்ணா மறைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. அரைநூற்றாண்டு கடந்தும் அண்ணா என்னும் மகத்தான ஆளுமையை நினைவுகூர்வதற்கு  முக்கியமான காரணம், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதற்குமே அண்ணா உருவாக்கித் தந்த அரசியல் கொடைகள் அவசியமானவை என்பதுதான். வியப்பூட்டும் பல தகவல்களுடனும் பார்வையுடனும் தரப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரை: 'காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்'.

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

சாதனா... பேரன்பின் நாடி நரம்புகளில் பாய்ந்தோடி உயிரூட்டும் ரத்தம்.  படம் முழுவதும் ஒரேமாதிரியான உடல்மொழிதான். இந்தச் சவாலை அழகாய் எதிர்கொண்டு, நம் உணர்வு நரம்புகளைக் கிளர்த்திவிடும் அற்புத நடிப்பு சாதனாவுடையது. 

'எதுக்குன்னு கேட்டுட்டுப் போங்க சார்!' என்ற ஒற்றைவரி வசனமும் அந்த ஒரு காட்சியும் போதும் அஞ்சலி ஒரு நடிப்பு ராட்சசி என்பதை நிரூபிக்க! தமிழ்சினிமாவிற்கு இன்னொரு அஞ்சலியையும் பேரன்பு மூலம் பரிசளித்திருக்கிறார் ராம். திருநங்கை மீராவாக வரும் அஞ்சலி அமீர் திருத்தமான தேர்வு! கண்களில் சோகமும் உதட்டில் சிரிப்புமாய் அவ்வளவு பாந்தம்! சமுத்திரக்கனி, பாவெல் நவகீதன், 'பூ' ராமு போன்றவர்களும் தேவையுணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

- 'பேரன்பு' விமர்சனத்தை விரிவாகவே தீட்டியிருக்கிறது விகடன் விமர்சனக் குழு. இப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள், உங்கள் பார்வைக்கேற்ப புருவங்களை உயர்த்தக் கூடும். 

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

பீட்டர் ஜான்சனாக ஜி.வி.பிரகாஷ். படத்துக்காக மிருதங்கம் கற்றுக்கொண்டதில் ஆரம்பித்து 'பீட்டர் பீட்டை ஏத்து' என தர லோக்கல் கேரக்டரில் நடித்ததுவரை வெரைட்டியில் பின்னுகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ராஜீவ் மேனன், ஆழமான ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்தது பாராட்டத்தகுந்தது. ஆனால், ஒரு தனியார் மியூசிக் ஷோவில் ஜெயிப்பதே வெற்றி என்றாகிடுமா என்ற கேள்வி எழுகிறது. 'இசைக்கு சாதியில்லை' என்று சொல்ல முயலும் படத்தில் 'இசையைத் தீர்மானிப்பதே குறிப்பிட்ட சாதிதான்', 'இந்த சங்கீதம்தான் கிளாசிக்' என்பது அடிப்படை நோக்கத்துக்கு எதிரான நெருடல். 

- 'சர்வம் தாளமயம்' படத்துக்கு கச்சிதமான விமர்சனமும், உரிய மதிப்பெண்களையும் வழங்கியிருக்கிறது விகடன் விமர்சனக் குழு. 

பெருந்துயர் முதல் பேரன்பு வரை: 6 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 அம்சங்கள்!

சுந்தர்.சி படத்தின் ஆடல் பாடல் நடிகைகளாக இதில் கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ். இருவர் பேசும் வசனங்களைவிடவும் அவர்களின் ஆடைகள் குறைவு. சீனியர் நடிகர்களாக பிரபுவும், சுமனும் ஆங்காங்கே வருகிறார்கள்.  யோகிபாபு, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், `நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் சுந்தர்.சி படத்தின் இத்யாதி காமெடி நடிகர்கள் என அதே டிராமா செட்டோடு நடிகர்கள் வந்துபோகிறார்கள். அதில் யோகி பாபு மட்டும் தான் காமெடியில் பாஸ் மார்க் வாங்குகிறார். மற்றவர்கள் காமெடிக் காட்சிகளுக்கே பாப்கார்ன் வாங்க ரசிகர்களை வெளியே தள்ளுகிறார்கள்...

- 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு சுருக்கமான விமர்சனத்தை நறுக்கென தந்திருக்கிறது விகடன் விமர்சனக் குழு. ஆனால், அந்தப் படத்துக்கான மதிப்பெண்கள்? 

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2GgwPpS