ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650-ஐ இயக்கும் சாஃப்ட்வேர் இதுதான்! | Simulation software is the success for Royal Enfield Interceptor

வெளியிடப்பட்ட நேரம்: 08:01 (08/02/2019)

கடைசி தொடர்பு:14:07 (08/02/2019)

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650-ஐ இயக்கும் சாஃப்ட்வேர் இதுதான்!

டுவது, தாவுவது, மிதப்பது, பறப்பது என எந்த வகை வாகனமாக இருந்தாலும் சரி அதை டிசைன் செய்யப் பயன்படுத்தும் கேட்டயா, சாலிட்வொர்க்ஸ் போன்ற மென்பொருள்களின் தயாரிப்பாளர்கள்தான் டஸோ சிஸ்டம்ஸ் (Dassault Systemes). இந்நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக 3D எக்ஸ்பீரியன்ஸ் சென்ட்டரை சென்னையில் திறந்துள்ளது. உலகிலேயே மொத்தம் 5 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள்தான் உள்ளன. அதில் சென்னையும் ஒன்று. இதன் திறப்பு விழாவுக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் CAD & CAE துறைத்தலைவர் ராட் கைல்ஸ் வந்திருந்தார்.

3D Experience centre in chennai

``ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் விற்பனைக்குக் கொண்டுவந்த இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜீடி 650 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற காரணம், இந்த பைக் பல சாஃப்ட்வேர் உதவியுடன் அதிகப்படியாக சிமுலேஷன் செய்யப்பட்டதுதான்’’ என்றார். இந்த பைக்குகளை உருவாக்க Simpack, Abaqus, FE-SAFE, iSight, TOSCA போன்ற சாஃப்ட்வேர்களும், FED, CFD, Acoustic போன்ற சிமுலேஷன் முறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார்

இந்தியாவில் டிஸோ சிஸ்டத்தின் சிமுலா எனும் சிமுலேஷன் சாஃப்ட்வேர் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் மூலம் ஒரு பொருள் ஸ்கெட்ச் டிசைனில் இருந்து ப்ரோட்டோடைப் ஆகும் வரை என்னென்ன சாஃப்ட்வேர்கள் பயன்படுத்தப்படுகிறது, எலெக்ட்ரிக் கார்களை டிசைன் செய்யாவதற்கான பிரத்தியேக சாஃப்ட்வேர்கள் என்னென்ன போன்றவற்றைக் காட்சிப்படுத்துகிறார்கள். சிமுலேஷன் முறையில் எப்படி வாகனத்தை மேம்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குகிறார்கள்.

டஸோ சிஸ்டம் இந்தியாவின் தலைவர் சாம்சன் காவ், ``மேக் இன் இந்தியாதான் தற்போது டிரெண்டில் இருக்கிறது. எதிர்காலத்துக்குத் தயாராக இருக்கிறோமா என்பதுதான், இந்தியா சந்திக்கும் பிரச்னை. இந்தியாவில் உருவாகும் பிரச்னைகளுக்கு இந்தியாவில்தான் தீர்வு இருக்கிறது. இங்கு இருக்கும் இன்ஜினீயர்கள்தான் தீர்வுகளை உருவாக்குகிறார்கள். விர்ச்சுவல் ப்ரோட்டோடைப்பிங் தற்போது வேகமான வளர்ந்துவருகிறது. Trial & Error முறை சிமுலேஷன் மூலம் குறைக்கப்படுகிறது. ப்ரோட்டோடைப் இல்லாத ஒரு எதிர்காலத்தைத்தான் பல நிறுவனங்கள் மனதில் வைத்திருக்கிறார்கள். நேரடியான வாகனங்களை டெஸ்ட் செய்வது குறைந்துவருகிறது’’ என்றார்.

Sylvain Laurent, Executive Vice-President, Dassault Systemes/ Rod Giles / Samson Khaou

மேலும், மின்சார வாகன (EV) தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா போன்ற வளரும் நாடுகள் எங்கு வேறுபடுகிறது என்ற கேள்விக்கு, ``இந்தியாவில் டேட்டாதான் பெரிய பிரச்னை. மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் மக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து அவர்களுக்குச் சிறப்பான அனுபவத்தை எப்படித் தருவது என்பதை யோசிக்க வேண்டும். இந்தியாவில் தற்போது மிகக் குறைவான மக்கள் மின்சார வாகனத்தைப் பயன்படுத்த முன்வருவதற்கான ஒரே காரணம், சுற்றுச்சூழல். அவர்கள் தங்கள் வாகனத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள், சிட்டியில் எந்த மாதிரியான சிரமங்கள் உண்டு என்பதை முதலில் சேமிக்க வேண்டும். இந்த டேட்டாவை வைத்துதான் இந்தியாவுக்கான சரியான மின்சார வாகனத்தை உருவாக்க முடியும்’’ என்றார்.

டஸோ சிஸ்டம்ஸ்

சமீபகாலமாக வாகனங்களின் வாழ்நாள் குறைந்துவருகிறது. சிமுலேஷன் போன்ற அதீத தொழில்நுட்பங்கள் இருந்தும் வாகனங்களின் வாழ்நாள் குறைவதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு சிமுலேஷன் துறையின் தலைவர் பவேஷ் குமார் பதில் அளித்தார்.

``இதற்குக் காரணம் டிசைனர்களுக்கு பொறுமை இருப்பதில்லை. ஒரு பொருளை டிசைன் செய்துவிட்டு அதை சிமுலேஷன் சாஃப்ட்வேர்கள் உதவியுடன் பலமுறை சோதித்து டிசைனில் இருக்கும் குறைகளை சரி செய்துவிடுகிறார்கள். அது தயாரிப்புக்குப் போகும்போது அந்தப் பாகத்தின் ஃபெயிலியர் குறைவாக இருக்கும். ஆனால், இந்த சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி ஒரு டிசைனை மேம்படுத்தும்போதுதான் அதன் வாழ்நாள் அதிகரிக்கும். சாஃப்ட்வேர் தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது என்பதைவிட இது டிசைனர்கள் கையில்தான் இதற்கான பதில் உண்டு’’ என்றார்.


டிரெண்டிங் @ விகடன்