கமாடிட்டி (மெட்டல் அண்ட் ஆயில்)! | commodity (metal & oil)

வெளியிடப்பட்ட நேரம்: 00:09 (10/02/2019)

கடைசி தொடர்பு:00:09 (10/02/2019)

கமாடிட்டி (மெட்டல் அண்ட் ஆயில்)!

வெள்ளியும், தங்கத்தை போலவே சென்ற வாரம் முழுவதும், ஒரு ரீ-டிரேஸ்மென்ட் இறக்கத்தில் இருந்தது. அதேநேரம், சென்ற வாரத்தின் கடைசி நாளான வெள்ளி அன்று, வலிமையான மேலே திரும்ப முயற்சிக்கலாம்.

arulrajan

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் மினி

தங்கத்தின் நகர்வை தனிப்பட்ட முறையில் பார்த்தால், ஒரு வலிமையான ஏற்றத்தில் இருப்பதுபோல்தான் உள்ளது. ஜனவரி மாதத்தின் இரண்டாம் தடைநிலையான 32400-ஐ தாண்டி ஏற ஆரம்பித்தபோது, அது வலிமையான அப் டிரென்ட்டுக்கு மாறியது.  அதன் பிறகு, பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகபட்ச புள்ளியாக 33367-ஐ தொட்டு பின் இறங்க ஆரம்பித்தது. பொதுவாக இந்த ஏற்றத்தின் இறக்கத்தை ரீ-டிரேஸ்மென்ட் என்று அழைப்போம். அதாவது, இது ஏற்றத்தில் இறக்கம் என்று அர்த்தம். இந்த இறக்கம் முடிவுக்கு வரும்போது ஏற்றம் தொடரும் என்றும் அர்த்தம். 

சென்ற வாரம் சொன்னது…
‘தங்கம் வலிமையாக ஏறிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் 33030 என்பது உடனடி ஆதரவாகவும், மேலே 33350 என்பது உடனடி தடைநிலையாகவும் உள்ளது.’
சென்ற வாரம் தடைநிலையான 33030-ஐ உடைத்து தங்கம் பலமாக ஏற ஆரம்பித்துள்ளது. இந்த ஏற்றம் 33367 வரை தொடர்ந்தது.  ஆனால், அதன் பிறகு, வாரம் முழுவதும் இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. ஆனால் 08.02.19 வெள்ளி அன்று பங்குச் சந்தை பலமான இறக்கத்தை சந்தித்தது.  இதனால், தங்கம் ஏறுமுகமாக மாறலாம்.

இனி என்ன நடக்கலாம்?
தங்கம் தொடர்ந்து ஐந்து நாட்களாக இறங்கி வந்துள்ள வேளையில், 32860 என்ற எல்லை ஃபிபனோசி விகிதத்தில் 38.2% ஆகும்.  எனவே, இந்த எல்லை ஆதரவாக இருக்கலாம். மேலே 33250 என்பது உடனடி தடைநிலை ஆகும்.

வெள்ளி

வெள்ளி மினி
வெள்ளியும், தங்கத்தை போலவே சென்ற வாரம் முழுவதும், ஒரு ரீ-டிரேஸ்மென்ட் இறக்கத்தில் இருந்தது. அதேநேரம், சென்ற வாரத்தின் கடைசி நாளான வெள்ளி அன்று, வலிமையான மேலே திரும்ப முயற்சிக்கலாம்.

சென்ற வாரம் சொன்னது…
‘வெள்ளி தற்போது 39780 என்ற எல்லையை முக்கிய ஆதரவாக உள்ளது. மேலே 40690-ஐ உடைத்தால் கணிசமான ஏற்றம் வரலாம்.’
வெள்ளி கடந்த வாரம் நாம் கொடுத்து இருந்த தடைநிலையான 40690-ஐ தாண்டி ஏறி 40800 வரை சென்று பின் வலிமையாக தடுக்கப்பட்டு இறங்க ஆரம்பித்தது. சென்ற வாரம் ஒவ்வொரு நாளுமே படிப்படியாக இறங்கினாலும், கடைசியில் நாம் கொடுத்து இருந்த ஆதரவு எல்லையான 39780 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு, மீண்டும் மேலே எழ முயற்சிக்கிறது.

இனி என்ன செய்யலாம்? 
வெள்ளி தற்போது 39780 என்ற ஆதரவை எடுத்து ஏறினால், முதல் தடைநிலையாக 40350-ல் தடுக்கப்படலாம். அதை தாண்டினால், அடுத்த தடைநிலை 40800 ஆகும்.

கச்சா எண்ணெய் மினி
சென்ற வாரம் சொன்னது…
‘கச்சா எண்ணெய் தற்போது 3955-ஐ தடைநிலையாக கொண்டுள்ளது. கீழே 3730 என்பதை உடனடி ஆதரவாகவும் கொண்டுள்ளது.’ 
கச்சா எண்ணெய்,  நாம் கொடுத்து இருந்த தடை நிலையான 3955-ஐ தாண்டி ஏறி, உச்சமாக 4012-ஐ தொட்டபின் இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் சற்றே வலிமையாக மாறியது.  நாம் கொடுத்து இருந்த ஆதரவு எல்லையான 3730-ஐ நோக்கி நகர்ந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?
கச்சா எண்ணெய் நன்கு இறங்கிய நிலையில் 3666 முக்கிய ஆதரவு ஆகும். மேலே தடைநிலை 3840 ஆகும்.

காப்பர் மினி 
காப்பர் அக்டோபர் 2018-ல் உச்சமாக 475.20-ஐ தொட்ட பிறகு, ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வந்தது. இந்த இறக்கம் ஜனவரி 2019ன் முதல் வாரம் வரை தொடரந்து குறைந்தபட்ச புள்ளியாக 397.40 -ஐ தொட்டது.  அதன் பின் டிரென்ட் ரிவர்ஷல் நடந்து தற்போது ஏறுமுகமாக மாறி உள்ளது.

இனி என்ன செய்யலாம்?
காப்பர் மினி, நன்கு ஏறிய நிலையில் 453 என்பது உடனடி தடைநிலை ஆகும்.  கீழே 436 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.

பிவட் டேபிள்

பிவட் டேபிள்