ஆக்வா லெஹெங்கா சோலி, சோக்கர், சாண்ட்பாலி காதணி..! சௌந்தர்யா திருமண காஸ்ட்யூம்ஸ் | From Rajini dance to Kajol appearance at Soundarya Vishagan wedding

வெளியிடப்பட்ட நேரம்: 14:17 (13/02/2019)

கடைசி தொடர்பு:14:17 (13/02/2019)

ஆக்வா லெஹெங்கா சோலி, சோக்கர், சாண்ட்பாலி காதணி..! சௌந்தர்யா திருமண காஸ்ட்யூம்ஸ்

ஆக்வா லெஹெங்கா சோலி, சோக்கர், சாண்ட்பாலி காதணி..! சௌந்தர்யா திருமண காஸ்ட்யூம்ஸ்

கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் நிரம்பி வழிந்துகொண்டிருப்பது ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் மறுமணப் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள்தாம். தொழிலதிபரும் திரைப்பட நடிகருமான விசாகனை, பிப்ரவரி 11-ம் தேதி கரம் பிடித்தார் சௌந்தர்யா. ப்ரீ வெட்டிங் ரிசப்ஷன், மெஹெந்தி, திருமண வரவேற்பு என இவர்களின் திருமணக் கொண்டாட்டத்தின் ஹைலைட்ஸ் இங்கே...

சௌந்தர்யா

இவர்களின் `கலகல' திருமண நிகழ்வு, சுமங்கலி பூஜையோடு தொடங்கியது. அதைத் தொடர்ந்து இரு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட சங்கீத் மற்றும் மெஹெந்தி விழா நடைபெற்றது. இதில் ஆக்வா நீல நிறத்தில் கற்கள் பதித்த லெஹெங்கா சோலி, அதற்கு மேட்சான சோக்கர் மற்றும் டாங்கலர் காதணியில் மிளிர்ந்தார் சௌந்தர்யா. மணமகன் விசாகன், வேஷ்டி மற்றும் பிரவுன் நிறச் சட்டை உடுத்தி எளிமையான தோற்றத்தில் இருந்தார். இந்த நிகழ்வின் முக்கியமான ஹைலைட்ஸ் இரண்டு. மருதாணியிட்ட கையை தன் மகன் வேத்க்கு சௌந்தர்யா காண்பிக்கும் புகைப்படம் மற்றும் `ஒருவன் ஒருவன் முதலாளி...' பாடலுக்கு ரஜினிகாந்த் நடனமாடும் காணொலி இரண்டும் செம வைரல்.

SOundarya with Aniruth

மாப்பிள்ளை அழைப்புச் சடங்குக்குச் சிவப்பு மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர்கொண்ட பச்சை நிறப் புடவை, `மாங்காய்' டிசைன் நெக்லஸ், முத்துகள் பதித்த நீண்ட ஆரம், அதற்கு மேட்சான சாண்ட்பாலி வகை காதணி மற்றும் நெத்திச்சூடி பொருத்தி பக்கா தமிழ்ப்பெண் தோற்றத்தில் மிகவும் அழகாக இருந்தார் சௌந்தர்யா.

Pre Wedding Reception

`ப்ரீ வெட்டிங் ரிசப்ஷன்' ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக நீலம், தங்கம் மற்றும் ஆரஞ்சு நிற காம்பினேஷனில் பட்டுப்புடவையைத் தேர்வுசெய்திருந்தார் சௌந்தர்யா. மணமகன், வெள்ளை வேஷ்டி-சட்டையைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரும் பச்சை நிறப் புடவையைத் தேர்வுசெய்திருந்தனர். இதில் சூப்பர்ஸ்டாரின் சாய்ஸ், வெள்ளை நிற குர்தா பைஜாமா.

Wedding

முகூர்த்த மேளதாளங்கள் முழங்க, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை நிறைய மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது லீலா பேலஸ். முன்னணி இந்திய ஆடை வடிவமைப்பாளர்களான அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா இருவரின் கைவண்ணத்தில் உருவான கனமான கற்கள் பதித்த பிங்க் நிற புடவை அதற்கு மேட்சாக வெள்ளைக் கற்கள் பதித்த நெக்லஸ், ஆரம், காதணி, மாத்தாப்பட்டி மற்றும் வளையல் போன்றவற்றை அணிந்து ஜொலித்தார் மணப்பெண். சகோதரி ஐஸ்வர்யா மணமேடைக்கு அழைத்து வர, நீல நிற அடர்ந்த பார்டர் வேஷ்டி-சட்டையில் மணப்பெண்ணை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார் விசாகன்.

EPS and Stalin

இவர்களின் திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின், அழகிரி, சு.திருநாவுக்கரசர், வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகள், கமல்ஹாசன், கே.எஸ்.ரவிகுமார், மணிரத்னம், ராகவா லாரன்ஸ், வைரமுத்து, மதன் கார்க்கி, மோகன் பாபு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

Kajol

திருமணத்தைத் தொடர்ந்து திரைப்பட நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்ட பிரமாண்ட கலர்ஃபுல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. அதிக வேலைப்பாடுகள் நிறைந்த சிவப்பு லெஹெங்கா சோலி, கனமான சோக்கர், காதணி, நெத்திச்சூடி, எளிமையான சிகை அலங்காரம் என மிளிர்ந்தார் சௌந்தர்யா. கறுப்பு-வெள்ளை வெஸ்டர்ன் சூட்டில் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் விசாகன். சௌந்தர்யா இயக்கத்தில் வெளியான `VIP-2' திரைப்படத்தில் நடித்த கஜோல் கலந்துகொண்டது இந்நிகழ்வின் `கியூட் மொமென்ட்'களில் ஒன்று.

மேலும், முகேஷ் மற்றும் நீட்டா அம்பானி, ஆடை வடிவமைப்பாளர் சிட்னி ஸ்லேடன், லக்ஷ்மி மஞ்சு, ஆண்ட்ரியா, அதீதி ராவ் ஹைதரி, பிரபு, அவரின் மகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


டிரெண்டிங் @ விகடன்