`முரட்டு சிங்கிள்களே ஒன்று கூடுங்கள்!' - ஆஃபர்களை அள்ளி வீசும் சென்னை பிரியாணி கடைகள் | In Chennai two hotels Celebrate Lovers Day By Giving Biryani to Single Boys

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (14/02/2019)

கடைசி தொடர்பு:12:17 (14/02/2019)

`முரட்டு சிங்கிள்களே ஒன்று கூடுங்கள்!' - ஆஃபர்களை அள்ளி வீசும் சென்னை பிரியாணி கடைகள்

பிப்ரவரி -14.  இன்றைய தினம் வாட்ஸ்அப்-புக்குள்  நுழைந்தால், நண்பர்கள் பலரும் 'ஸ்டேட்டஸில் ரயில்' விட்டிருப்பார்கள். காதலர் தினத்தன்று பலரும் பல திட்டமிடல்களுடன் இருப்பர். பூங்காக்கள், திரையரங்குகள், மால்கள்  என ஒவ்வோர் இடமும் இன்றைய தினம், காதலும் காதல் சார்ந்த இடமுமாகவே காட்சியளிக்கும். சமூக வலைதளங்களிலும் காதல் கவிதைகள், ஸ்டேட்டஸ்கள் ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் சிங்கிள் மற்றும் முரட்டு சிங்கிள்களின் மீம்களும் நிரம்பிக்கிடக்கின்றன. இந்தக் காதலர் தினத்தை சிங்கிள்ஸுக்கான தினமாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன, சில ஹோட்டல்கள். 

1. மதராஸி பிரியாணி: சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் கேளம்பாக்கத்தில் உள்ள இந்தக் கடையில், மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை 'முரட்டு சிங்கிள்களுக்கு' ஃப்ரீ பிரியாணி என அறிவிப்பு விடுத்துள்ளார்கள்.

பிரியாணி

2. தொப்பி வாப்பா பிரியாணி: சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடையும் சிங்கிள்ஸுக்கு இலவச பிரியாணி தருவதாகத் தெரிவித்துள்ளது. சாரி கமிட்டட் & மேரிட் எனத் தெரிவித்து விளம்பரப்படுத்தியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் என்பது கண்டிஷன்.

பிரியாணி

'சிங்கள்தான் கெத்து' என முரட்டு சிங்கிளாக வாழ்பவர்களுக்கு இது, காதலர் தினத்துக்கான ஒரு கிஃப்ட்.  ஆனால், நான் சிங்கிள் எனச் சொல்லிவிட்டு, கமிட்டட் வாழ்க்கை வாழும் அசகாய சூரன்களை இந்த ஹோட்டல்கள் கண்டுபிடிக்குமா என்பதுதான் தெரியவில்லை.

இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் பேசியபோது, ``ஜோடியாக இல்லாமல் சிங்கிளாக வருவபவர்களுக்கு மட்டுமே இலவச பிரியாணி, நண்பர்களோடு வரலாம்'' என்றார்கள் மதராஸி பிரியாணி கடைக்காரர்கள். ஒருவேளை காதலி இருப்பதை மறைத்துவிட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு, " நான் முரட்டு சிங்கிள்"  என ஒரு செல்ஃபி எடுத்து பேஸ்புக் இல்லாவிட்டால், இன்ஸ்டாவில் பதிவிட்ட பிறகுதான் பிரியாணி. எனவே பிரியாணிக்கு ஆசைபப்பட்டு எந்த கமிட்டடும் அதை செய்ய மாட்டார்கள் என்கிறார்கள்.