Published:Updated:

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!
காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

இந்த வார ஆனந்த விகடன்: https://bit.ly/2N7gCnw

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

``ஜெயலலிதாவுடனான உங்கள் நட்பு பற்றி..."

``... அப்போது நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்தது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்ய ஜெயலலிதா என்னை அழைத்தார். தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்தேன். பிறகு ஆந்திர அரசியலில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாட்டு அரசியலில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும், அரசியல் பிரச்னைகள் முதல் தன் உடல்நிலை பாதிப்புகள் வரை ஜெயலலிதா அம்மா என்னிடம் மனம்விட்டுப் பேசுவார்.  

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

சொத்துக்குவிப்பு வழக்குப் பிரச்னையால், அவர் பதவியை இழந்த நேரம். 'ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்த நம்பிக்கையான ஒருவரை எதிர்பார்க்கிறேன். அ.தி.மு.க-வில் இணைந்து பணியாற்றுங்கள்' என எனக்கு அழைப்பு விடுத்தார் அம்மா. 'தெலங்கானாவுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில் நான் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது' எனச் சொன்னேன். அதைக் கனிவுடன் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகே, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். நான் இருக்க வேண்டிய இடத்தில்தான், ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்."

- தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல் வரை நடிகை விஜயசாந்தி பேசியது எல்லாமே அவரது சண்டைக் காட்சிகளைப்போல அதிரிபுதிரி அதிரடிதான். குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அ.தி.மு.க-வின் தற்போதைய போக்கு குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். ``என்னை முதல்வராக்க நினைத்தார் ஜெயலலிதா!" எனும் விஜயசாந்தியின் பேட்டி கவனத்துக்குரியது.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

தங்களது 16வது திருமண நாளை, உறவும் நட்பும், கட்சியின் உடன் பிறப்புகளும் சூழ, கேக் வெட்டிக் கொண்டாடியபடி, தனது காதல் மனைவியைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் பி.டி.பழனிவேல் தியாகராஜன். தி.மு.க., தகவல் தொழில் நுட்பப் பிரிவின் செயலாளரும், மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.பழனிவேல் தியாகராஜன்தான், அந்தக் காதல் கணவர். நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பி.டி.ராஜனின் பேரன், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் எனப் பெருமை மிகு பாரம்பர்யத்துக்குச் சொந்தக்காரர். இவரின் மனைவி, மார்கரேட், ஓர் அமெரிக்கப்பெண். இப்போது அவரது பெயர் மார்கரேட் மீனாட்சி.

- ``அமெரிக்கா என்றாலே நமக்கு ஒத்துவராத கலாசாரம் கொண்டவர்கள் என்ற எண்ணம், நம் நாட்டவரிடம் உள்ளது. அங்கேயும் நம்மைப் போலவே குடும்பம், உறவுகள் என அன்பு பாசத்துடன் வாழும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். மார்கரேட்டிடம் பேசும்போதுதான், அதைப் புரிந்துகொண்டேன்!'' என்று பகிரும் பி.டி.பழனிவேல் தியாகராஜனின் காதல் அனுபவங்களை 'அமெரிக்க மீனாட்சி!' எனும் ஸ்பெஷல் ஸ்டோரியில் வாசிக்கலாம்.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

ப.சிதம்பரத்தின் விசுவாசியானதால்தான் தங்களுக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டது; அதனால், சிதம்பரத்தின் விருப்பப்படியே, உங்களது நடவடிக்கைகள் இருக்குமென்று சொல்கிறார்களே?

``முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் யாரும், யாருடைய ஆளாகவும் இருக்க முடியாது. நான் மாணவனாக இருக்கும்போதே, ப.சிதம்பரத்தின் அரசியல் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டவன். தலைவர் மூப்பனாரால் வசீகரிக்கப்பட்டவன். இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி என எல்லோருமே எனக்கு மிக முக்கியமானவர்கள், நண்பர்கள். அந்த வகையில் அவர்கள்மீது நல்ல அபிப்ராயம் உண்டு. அதற்காக அவர்களின் ஆள் என்று எனக்கு முத்திரை குத்த வேண்டியதில்லை. அதை அவர்களும் விரும்ப மாட்டார்கள்."  

- நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டிருக்கிறார். ``காங்கிரஸில் கோஷ்டி அரசியல் இல்லை!" எனும் அவரது பேட்டியில், அவரையும் தமிழக காங்கிரஸையும் நிச்சயம் புரிந்துகொள்ளலாம். மேலும் படிக்க க்ளிக் செய்க...
  

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

``சீரியல்ல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சப்போ, ஃப்ரெண்ட்ஸாதான் பேச ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் ஒருநாள் நான் சஞ்சீவ்கிட்ட புரபோஸ் பண்ணினேன். அவன் உடனே 'ஓகே' சொல்லிட்டான். என்னோட ரசிகர்களும், சஞ்சீவின் ரசிகைகளும் எங்க லவ் மேல க்யூட்டா கோபப்படுவாங்க. ஆனா, பொதுவான ரசிகர்கள், 'ஜோடியா நீங்க சூப்பர்'னு வாழ்த்துறாங்க. மொத்தத்துல நாங்க ரெண்டு பேரும் செம ஹேப்பி!'' என்ற ஆல்யாவின் சந்தோஷத்தை ரசித்தபடி பேசுகிறார், சஞ்சீவ்.

``ரெண்டு பேரும் பயங்கரமான சாப்பாட்டுப் பிரியர்கள். அதனால நாங்க போற அவுட்டிங், விதவிதமான ரெஸ்டாரென்ட்டுகள்தான். எனக்கு சமைக்கத் தெரியாது. சஞ்சீவ் சூப்பரா சமைப்பான். கார் டிக்கியிலேயே ஒரு குட்டி கிச்சன் வெச்சிருப்பான். நான் ஏதாச்சும் வேணும்னு கேட்டுட்டா, ஆன் தி ஸ்பாட் சமைச்சுக் கொடுத்துடுவான். ஆனா, ஸோ சேட்... இப்போ ரெண்டு பேருமே டயட்ல இருக்கோம்'' என்று சோக எமோஜி காட்டுகிறார் ஆல்யா.

- விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `ராஜா ராணி' தொடரில் 'கார்த்திக் - செம்பா'வாகக் காதல் செய்யும் சஞ்சீவ், ஆல்யா மானஸா, ரியல் லைஃபிலும் செம க்யூட் ஜோடி. அவர்களின் அனுபவப் பகிர்வே 'பாப்புகுட்டீஸ்!' எனும் காதல் ஸ்பெஷல் ஆர்ட்டிகிள். மேலும் படிக்க க்ளிக் செய்க...

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

> நீங்கள் மோடியை மட்டும் எதிர்ப்பதாகவே சித்திரிக்கப்படுகிறதே?

"மோடி யாருங்க... என் சித்தப்பாவா, மாமாவா,  எங்களுக்குள் பங்காளிச் சண்டையா? அவர் நாட்டு மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று சொல்லி வந்தவர், குஜராத்தில் இருந்துவந்த மாடலே இவர்தான் என்று இப்போதுதான் தெரிகிறது. ஊர் ஊராகச் சுற்றுகிறார். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தபோது, கடவுள் கொடுத்த சாபம் என்கிறார். இதையே அவரது தொகுதியில் இப்படி ஒரு விபத்து நடந்தபோது நீலிக்கண்ணீர் விடுகிறார். ஜி.எஸ்.டி, டிமானிடைசேஷன் என்று எந்தக் கேள்வி கேட்டாலும் இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் மௌனமாக இருக்கும் ஒரே தலைவர் மோடி மட்டும்தான். மாட்டை எடுத்துக்கிட்டு மனுஷனை விட்டுட்டவரை எதிர்க்கத்தானே செய்வேன்?"

> இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் பிரகாஷ்ராஜை ஈர்க்கவில்லையா?

"...காமராஜர் இருந்தார், அவரைப்போல ஒரு தலைவர் உருவாக முடியுமா? கலைஞர் இருந்தார், அவர் ஒரு நூற்றாண்டின் தலைவர். அதுபோன்ற வலிமையான தலைவர்கள் நிகழ்காலத்தில் இல்லை என்பதுதான் நிஜம்."

> பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறதே?

``தமிழகம் பெரியார் மண். மதவாதத்தைத் திணிக்கப் பார்க்கும் யாரையும் பெரியார்மண் தூக்கியெறியும்."

- நல்ல நடிகர் என்ற முகத்துடன் 'கருத்துரிமைக்காகக் குரல் கொடுக்கும் கலைஞன்' என்ற அடையாளமும் இப்போது பிரகாஷ்ராஜுக்கு. குரல் மட்டும் கொடுக்காமல் சுயேச்சை வேட்பாளராகக் களம் காணவும் தொடங்கிவிட்டார். தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்த அவர் அளித்த விரிவான நேர்காணல்தான்: ``மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்!" - சமகால இந்திய அரசியலின் கோணங்களே இந்தப் பேட்டியின் சிறப்பம்சம். மேலும் படிக்க க்ளிக் செய்க...

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

``லஸ்ட்?!''

``லவ் ஓகே... உங்க லஸ்ட் எப்படி?'' - கேட்டோம்.

``லவ்னா, லஸ்ட்டும் இருக்கும்தானே? ஆனா, இந்த அன்புக்கு இவர் தகுதியானவரான்னு எடைபார்க்க எங்களுக்குத் தெரியும். எங்களைப் பார்த்துக்கவும் எங்களுக்குத் தெரியும்'' என்கிறார்கள் கேர்ள்ஸ். ``அஹெம்'' என்கிறார்கள் பாய்ஸ்.

``லவ்வை ஏத்துக்கலைன்னா ஆசிட் வீசுறது, கத்தியால குத்துறது...'' என்று நாம் முடிக்கும் முன் வருகிறது பதில், ``அது வன்முறை, வெறிங்க... அதுக்குக் காதல்னு பெயர் சொல்றதே தப்பு'' என்கிறார்கள் கோபத்துடன்.   

- இன்றைய இளைய தலைமுறை 'பிரேக் அப்'புக்குப் பிறகு ஒரு ரோடு ட்ரிப் அடித்து, தங்களுக்குத் தாங்களே ரெஃப்ரஷ் பட்டன் தட்டிக்கொள்கிறார்கள். காதல் மனதிலிருந்து மூளைக்கு இடம் பெயர்ந்துவிட்டதா? உணர்வுகள், இன்டலெக்சுவல் பரிணாமம் அடைந்துவிட்டனவா? இருபதுகளில் இருக்கிறவர்களிடமே கேட்டோம். ``நோ ஊர், பேர் என்றால் வீ ஆர் ரெடி'' என்றவர்கள், மில்லினியல் காதல் பற்றி இதயம் திறந்தார்கள். அந்த ஸ்பெஷல் ஸ்டோரிதான் `காலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...' காதலையும் உளவியலையும் அறியலாம் இங்கே. மேலும் படிக்க க்ளிக் செய்க...

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

> காங்கிரஸ் மீதான 'குடும்பக்கட்சி' குற்றச்சாட்டு இன்னும் வலுவாகுமே..?

``இது இந்தியாவுக்குப் புதிதல்ல.  பிரியங்கா, காங்கிரஸ் கட்சிக்காகத் தொடர்ந்து உழைத்துவருபவர். ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், வேறு கட்சிக்கா செல்வார்கள்?"

> மேக்கேதாட்டூ வேண்டும் என்று கர்நாடகாவிலும், வேண்டாம் என்று தமிழகத்திலும் சொல்லும் காங்கிரஸுடன் தி.மு.க கூட்டணி வைப்பது முரணாக இருக்காதா?

``காங்கிரஸ் மட்டுமல்ல, பி.ஜே.பி-யும் அதே நிலைப் பாட்டில்தான் உள்ளது. மாநில நலனை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. சபரிமலை, இட ஒதுக்கீடு, மேக்கேதாட்டூ, காவிரி நதிநீர்ப் பிரச்னை என மாநிலத்துக்கு மாநிலம் கள நிலவரம் மாறுபடும். தமிழகத்தில் எங்கள் நிலை என்னவென்பதைத் தெரிந்துதான் தி.மு.க எங்களோடு கூட்டணி வைத்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இரு மாநிலங்களுக்கும் பொதுவான சுமுக முடிவு எடுக்கப்படும்."

- பரபரப்பும் விறுவிறுப்புமாகத் தான் செய்திகளில்அடிபட்டுக்கொண்டிருந்தார் திருநாவுக்கரசர். ஆனால், திடீரென்று வந்த 'தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாற்றம்' என்று வந்த செய்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்த, திருநாவுக்கரசர் நமக்கு அளித்துள்ள ``அதை ஆராய விரும்பவில்லை!" எனும் சிறப்புப் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் படிக்க க்ளிக் செய்க...

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

> கண்ணே கலைமானே'யில் உதயநிதி யார்?"

``கமலக்கண்ணன், சின்ன வயசுலயே அம்மாவை இழந்த பையன். பி.எஸ்ஸி விவசாயம் படிச்சிட்டு நிறைய வேலை வாய்ப்புகள் இருந்தும் 'என் கிராமத்துல  இயற்கை விவசாயம் பண்ணுவேன்'னு  வாழும்  இளைஞன். பாட்டி சொல்லைத் தட்டாத அந்தப் பையன், திடீர்னு ஒருநாள், `ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்'னு வந்து நிக்கிறான். அந்தப் பாட்டி தன் பேரனின் காதலை ஏத்துக்கிட்டாங்களா இல்லையா என்பதுதான் 'கண்ணே கலைமானே' கதை.

> "தி.மு.க நடத்தும் நிகழ்ச்சிகள்ல அடிக்கடி உங்களைப் பார்க்க முடிகிறது. தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து நீங்களும் முழுநேர அரசியல்வாதி ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே?"

"...சினிமாவில் இருக்கிறதால அந்த இடத்தில் எனக்கு ஒரு முக்கியத்துவம் தந்துடுறாங்க. அதையும் தவிர்க்கப்பார்க்கிறேன். தஞ்சாவூர்ல மாவட்டச் செயலாளர் கூட்டம். அதில் என் போட்டோவுடன் ஒரு ஃப்ளெக்ஸ் கட்டியிருந்தாங்க. அதை அவங்க செஞ்சிருக்கக் கூடாது. நண்பர்கள் சுட்டிக்காட்டியதும் `அது தவறு'ன்னு சொல்லி சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளருக்கு போன் பண்ணி என் வருத்தத்தைத் தெரிவிச்சேன். அப்பா இந்த நிலைமைக்கு வர இத்தனை வருட உழைப்பு தேவைப்பட்டிருக்கு. அதை அவ்வளவு சாதாரணமா நினைச்சுக்க மாட்டேன். நடிகன் என்பதால் நம்மை எளிதா ஏத்துப்பாங்கன்னு நினைக்கமாட்டேன். கீழ்மட்டம் வரை இறங்கி வேலை செய்யணும். அதை மட்டும் மனசுல வெச்சிருக்கேன்..."

-  ஒருபக்கம் சினிமாவிலும் மறுபக்கம் அரசியலிலும் பிஸியாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் தனது 'உதயநிதியும் ஓர் உடன்பிறப்புதான்!' எனும் சிறப்புப் பேட்டியில் நிறையவே பகிர்ந்திருக்கிறார். மேலும் படிக்க க்ளிக் செய்க...

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

``அவருக்கு சொந்த ஊரு புதுக்கோட்டை பக்கத்துல கலபம் கிராமம். நான் திண்டுக்கல் பொண்ணு. அவரும் நானும் கிராமத் திருவிழா மேடைக் கச்சேரிகள்ல சேர்ந்து பாடி, பேசிப் பழகி, காதலிக்க ஆரம்பிச்ச கதையைப் பல இடங்கள்ல சொல்லியிருக்கோம். ஆனா, என் காதலை நான் உணர்ந்த அந்தத் தருணம், மறக்க முடியாதது'' என்று ஆரம்பித்தார் ராஜலட்சுமி.

``அவரோட தங்கச்சிதான் என்கிட்ட வந்து, 'எங்க அண்ணன் உங்களை லவ் பண்றார்... கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?'ன்னு கேட்டாங்க. என் குடும்பச்சூழல் காரணமா நான் மறுத்துட்டேன். ஆனாலும்..."

- சின்னத்திரையில் புகழ்பெற்ற மக்களிசைப் பாடகர்கள் செந்தில், ராஜலட்சுமி இப்போது பெரியதிரையிலும் பிஸி. கையில் ஒன்று, மடியில் ஒன்று என்று குழந்தைகள் விளையாடினாலும், காதல் குறையவில்லை இந்த ஜோடிக்கு. இவர்களது காதல் அனுபவமே 'தங்கச்சிதான் காதல் தூதுவர்!' எனும் ஸ்டோரி.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

`தில்லுக்கு துட்டு - 2' படத்தின் பெரும்பலம், வசனங்கள். ரைமிங், டைமிங் கவுன்டர்களால் நிரம்பிவழிகிறது. காட்சிகளாகவும் பல இடங்கள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. ஸ்பூஃப் ஏரியாக்களில் இப்படிக்கா போய், அப்படிக்கா வந்திருக்கிறார் இயக்குநர் ராம்பாலா. 

பெண்களின் உடலைக்கொண்டும், மூன்றாம் பாலினத்தவர்களை வைத்தும் செய்யும் காமெடிகளுக்கு கண்டனங்கள்.  18+ காமெடிகளும் வந்துபோகின்றன. ஒரு இடத்தில் சென்ஸார் போர்டையே ஏமாற்றியிருக்கிறார்கள். 

- விகடன் விமர்சனக் குழுவின் 'தில்லுக்கு துட்டு - 2' சினிமா விமர்சனம் கச்சிதமான பார்வையை முன்வைக்கிறது. மார்க்கையும் கவனிக்கத் தவறாதீர்கள்.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

``எங்களைச் சேர்த்துவெச்சது பெரியார்தான். ஆமா, ரெண்டுபேருக்கும் பெரியார் பிடிக்கும். நான்தான் முதலில் புரபோஸ் செஞ்சேன். ஆனா அவங்ககிட்ட இருந்து ஒரு பதிலும் வரலை. எங்க வீட்டில் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. `என்ன ஐடியாவில் இருக்கீங்க?'ன்னு அழுத்திக் கேட்கவும்தான் ஓகே சொன்னாங்க. ஆசிரியர் வீரமணி தலைமையில் 1979-ல் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்" என்கிறார் விடுதலை ராசேந்திரன். காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது என்பதுகூடப் பெரிய விஷயமில்லை. ஆனால் 'குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்' என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்ததுதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விஷயம். ``அதற்கும் பெரியார்தான் காரணம்" என்கிறார் ராஜேந்திரன். 

- காதல் என்பது சமயங்களில் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. ஆனால் பகுத்தறிவாளர்களுக்கும் காதல் வரும். அந்தக் காதல் அவர்களுக்கு மட்டும் நன்மை சேர்ப்பதில்லை, சமூகத்துக்கும் நன்மை சேர்த்துவிடுகிறது. அப்படிப்பட்ட பகுத்தறிவுக் காதலர்கள்தாம் பேராசிரியை சரசுவதியும் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரனும். அவர்களின் காதல் அனுபவமே 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்!' எனும் காதல் சிறப்புக் கட்டுரை. மேலும் படிக்க க்ளிக் செய்க...

காதலும் அரசியலும்: 9 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 12 அசத்தல்கள்!

விஜய் படத்தோட வாய்ப்பு எப்படி வந்தது?

`...சினிமாவுக்கு நடிக்க வந்து 'மதயானைக்கூட்டம்' படத்தோட ஷூட்டிங் கோயம்புத்தூர்ல நடந்துட்டிருந்தப்போ, விஜய் அண்ணாவுடைய படத்தை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கிறதுக்காக அடி, உதையெல்லாம் வாங்கி ரசிகர்கள் மத்தியிலே கத்திக்கிட்டு படம் பார்த்திருக்கேன். அப்படிப்பட்ட எனக்கு விஜய் அண்ணா படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது பெரிய வரம்தான். அதுவும் படத்துல முக்கியமான கேரக்டர் அட்லி அண்ணா கொடுத்திருக்கார். படத்தோட முதல் நாள் ஷூட்டிங்கின்போது விஜய் அண்ணா, என்னை `தம்பி'ன்னு அழைச்சு, அன்பா நிறைய விஷயங்கள் பேசினார்; வாழ்த்துகள் சொன்னார். விஜய் அண்ணா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள வந்துட்டாலே அந்த இடம் முழுக்க பாசிட்டிவ் வைப்ரேஷன்குள்ள போன மாதிரி இருக்கும். 

விஜய் அண்ணா முன்னைவிட இப்போ இன்னும் அழகா இருக்கார். ஸ்க்ரீனில் ஒரு விதமான மேஜிக் அவர் பண்றார். அதை கிட்ட இருந்து பாக்குறப்போ செமையா இருக்கு. ஒரு சின்னப் படபடப்பு அவரோடு நடிக்கிறப்போ எட்டிப்பார்த்துச்சு. அப்புறம் அவரே என்னை கூல் பண்ணிட்டார். என்னோட படங்களெல்லாம் பார்த்திருந்தார். அது பற்றியெல்லாம் நிறைய பேசினார்.''

- பலமுறை யோசித்து தெரிவு செய்த 'ஜடா', இணையத்தில் வெளியான 'சிகை' ஆகியவை மட்டுமின்றி யோகி பாபு முதல் விஜய் வரையிலான அனுபவங்களை 'யோகிபாபு கொடுத்த டிப்ஸ்!' எனும் சிறப்புப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் நடிகர் கதிர்.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2N5vN0x