'ஓய்வெடு விண்கலமே, உனது பணி முடிந்தது' - விண்கலத்துக்கு விடை கொடுத்த நாசா | Nasa announce Opportunity Rover Mission on Mars Comes to End

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:07:00 (15/02/2019)

'ஓய்வெடு விண்கலமே, உனது பணி முடிந்தது' - விண்கலத்துக்கு விடை கொடுத்த நாசா

Opportunity விண்கலம்

செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலத்திற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது விடை கொடுத்திருக்கிறது நாசா. பல உலக நாடுகள் விண்கலங்களை செவ்வாயில் தரையிறக்கி ஆய்வு செய்து வருகின்றன. அது போல 8 ஜூலை 2003-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது Opportunity விண்கலம்.  ஐந்து மாத பயணத்துக்குப் பின்னர் 2004-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி செவ்வாயில் தரையிறங்கியது. Opportunity விண்கலம் குறுகிய காலத்துக்கு 90 நாள்கள் மட்டுமே செயல்படும் திட்டத்துடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் திட்டமிட்ட காலத்துக்குப் பின்னரும் செயல்பாட்டில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டது. மேலும் செவ்வாய் தொடர்பான தகவல்களையும், புகைப்படங்களையும் தொடர்ந்து பூமிக்கு அனுப்பிக் கொண்டே இருந்தது.

செவ்வாய்

முக்கியமாகச் செவ்வாயில் முன்னொரு காலத்தில் கடல்கள் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்களையும் கண்டறிந்தது. இந்த விண்கலம் செயல்பாட்டில் இருந்த வருடங்களில் 45 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செவ்வாயில் வீசிய கடும் புழுதிப்புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது Opportunity விண்கலம். இது சூரிய ஒளியால் கிடைக்கும் மின் சக்தி மூலமாக இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. புழுதிப்புயல் காரணமாக சோலார் தகடுகளில் தூசி படிந்ததால் விண்கலம் இயங்கத் தேவையான மின்சக்தி கிடைக்காமல் போனது. எனவே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பையும் இழந்தது.

நாசா

அதன்பிறகு அதனை உயிர்ப்பிக்கும் முயற்சியில் தொடர்ந்து நாசா ஈடுபட்டு வந்தது. ஆனால் அந்த முயற்சியில் முன்னேற்றம் இல்லாததால் கடந்த 13-ம் தேதி Opportunity விண்கலத்தின் பணி முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளது நாசா.
 


[X] Close

[X] Close