இதய நலம் காக்கும் நல்ல கொழுப்பு! | cholesterol that is good for health

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (15/02/2019)

கடைசி தொடர்பு:10:59 (18/02/2019)

இதய நலம் காக்கும் நல்ல கொழுப்பு!

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல சவால்களில் முக்கியமானது `மன அழுத்தம்'. வேலைப் பளு, புது வேலை, வேலையின்மை, நிதி பற்றாக்குறை, உறவில் விரிசல், அன்பானவர்களை இழப்பது போன்றவை மன அழுத்தத்தைத் தரக்கூடியது. மன அழுத்தம் இதய பாதிப்புக்கு வழி வகுக்கின்றது. மனச்சோர்வினால் cortisol மற்றும் adrenaline எனப்படும் ஹார்மோன்கள் அதிகப்படியாக சுரப்பதால், ரத்தக்குழாய்கள் பாதிப்படைந்து மாரடைப்பு ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை உண்டாக்குகிறது.

மன அழுத்தம் உள்ளவர்கள் அலுவல் முடிந்ததும் ஐஸ் கிரீம், சிப்ஸ் போன்ற அதிக இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பர். ஸ்ட்ரெஸ் ஹார்மோன் உற்பத்தி அனிச்சையாக இந்த உணவுகளை நம்மை நாடிச்செல்ல வைக்கிறது. இப்பழக்கம் கெட்டக் கொழுப்புக்களை அதிகரிக்கச் செய்து, அதிகப்படியான ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களை பாதிப்படையச் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுக்காக்க நல்ல கொழுப்புச்சத்து அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். Monounsaturated Fats எனப்படும் நல்ல கொழுப்புச் சத்து நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யில் காணப்படுகின்றன. அது நம் உடலில் கெட்டக் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கிறது. எனவே, டயட் என்கிற பெயரில் எண்ணெய்ப் பொருள்களை உண்பதை அறவே தவிர்ப்பதைவிட, நல்ல கொழுப்புச் சத்து நிறைந்த எண்ணெய்ப் பொருளை உண்ணுவது முக்கியம்.

நாம் பெரும்பாலும் உபயோகப்படுத்தும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், விளக்கெண்ணெய் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. குறிப்பாக நல்லெண்ணெய்யில் உள்ள சீசேமோல், இதயத்தின் ரத்தக்குழாய் தடித்தலை தடுத்து பலத்தைக் கொடுக்கிறது. இதயத்துக்கு மட்டுமல்லாமல் எலும்பை வலுவாக்க, ரத்த அழுத்தத்தைக் குறைக்க, புற்றுநோயில் இருந்து பாதுகாக்க, சர்க்கரை நோயைத் தடுக்க என எக்கச்சக்கமான நன்மைகளைக் கொண்டதாக நல்லெண்ணெய் விளங்குகிறது. இதனால் ஒட்டுமொத்த உடலும் சீராக, ஆரோக்கியமாக செயல்படும். 

சமையல் எண்ணெய் பயன்படுத்தும்போது முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட, தெள்ளத்தெளிந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதைவிட, நம் பாரம்பர்ய முறைப்படி மரச் செக்கில் ஆட்டி எடுத்த எண்ணெய்யைப் பயன்படுத்துதல் நன்மை பயக்கும். ரசாயனம் எதுவுமின்றி இயற்கையாக வடிகட்டும் முறை, மரச் செக்கு எண்ணெய்யில் சத்துகள் அதிகம் இருக்கக் காரணமாகும். செயற்கையாக் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களைத் தவிர்த்து, தொடர்ந்து இயற்கையான நல்லெண்ணெய்யை மட்டும் சமையலில் சேர்த்துவந்தவர்களின் ரத்த அழுத்தம் சீராவதை ஆய்வு மூலம் நிருபித்துள்ளனர் மருத்துவர்கள். எனவே, செக்கு எண்ணெய்யைப் பயன்படுத்தி நம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

செக்கோ:

நமது பாரம்பர்ய அடையாளங்களுள் ஒன்றான மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்களை பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது 'செக்கோ' நிறுவனம். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பொருள்களைக் கொண்டு செக்கோவின் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய்களைப் பிரித்தெடுக்கக் கருப்பட்டியை செக்கோ பயன்படுத்துகிறது. ரசாயனம் இல்லாமல் இயற்கையான முறையில் இவை தயாரிக்கப்படுகின்றன. ஊட்டச்சத்துடன், மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த எண்ணெய்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அல்லாமல் உலோக கேன்களில் அடைத்து விநியோகம் செய்யப்படுகின்றது. இதனால் தரமான, ஆரோக்கியமிக்க செக்கு எண்ணெய்களை செக்கோவிடம் இருந்து பெறலாம்

பாரம்பர்யத்தை மீட்கும் முயற்சியில் இறங்குவது நமது கடமை. அவ்வாறான முயற்சியாக, உங்களின் அன்பானவர்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள செக்கோ மரச்செக்கு எண்ணெய்யைப் பயன்படுத்துங்கள்.

மேலும் விவரங்களுக்கு...

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close