அமெரிக்க நிகழ்ச்சியில் பியானோவில் வெளுத்துக்கட்டிய சென்னை சிறுவன்!#Viral | This Chennai kid is trending worldwide for his keyboard skills

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (15/02/2019)

கடைசி தொடர்பு:22:30 (15/02/2019)

அமெரிக்க நிகழ்ச்சியில் பியானோவில் வெளுத்துக்கட்டிய சென்னை சிறுவன்!#Viral

"The World's Best" என்னும் அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்று இப்போது உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகி வருகிறான் லிடியன் நாதஸ்வரன் என்னும் இந்திய சிறுவன். நிகழ்ச்சியில் பங்குபெற்ற அவன் முதலில் 'The Flight of the bumblebee' என்னும் புகழ்பெற்ற இசையை வாசிக்கத் தொடங்கினான். இது வாசிப்பதற்குச் சற்றே கடினமான இசை என்று பலரும் கூறுவர். லிடியன் இந்த இசையை அசால்ட்டாக வாசிக்கத் தொடங்கியபோதே அரங்கில் இருந்த பாதி பேர் அவனின் திறமையை மெய்ம்மறந்து ரசிக்கத்தொடங்கிவிட்டனர்.

சிறுவன் லிடியன்

ஆனால், அத்துடன் அவன் நிறுத்தவில்லை. டெம்போவை ஏற்றச் சொல்லி விநாடிக்கு 208 பீட்ஸில் அந்த இசையை வாசிக்கத் தொடங்கினான். இப்போது மொத்த அரங்கும் அவனின் வாசிப்புத் திறன் கண்டு மிரண்டுபோனது. அப்போதும் அவன் நிறுத்தவில்லை ``என்னால் சராசரியாக மனிதர்கள் வாசிப்பதைவிட இரண்டு மடங்கு வேகமாக வாசிக்கமுடியும்" என கூறி நிமிடத்துக்கு 325 பீட்ஸ் என வேகத்தை செட் செய்து வாசித்து முடிக்க அரங்கம் முழுவதும் கரவொலியால் அதிர்ந்தது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த லிடியனின் தந்தை பெருமிதத்தின் மிகுதியால் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இந்த விடியோவை அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜேம்ஸ் கார்டென் வியப்புடன் பகிர இதை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர் அனிருத் தொடங்கி பல பிரபலங்கள் தங்கள் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். வெங்கட் பிரபு இது தன் நண்பர் சதீஷின் மகன்தான் என்றும் லிடியன் நம்ம சென்னை பையன் என்றும் ட்விட்டரில் பெருமிதம் கொண்டார். உலகம் முழுவதும் ஹார்ட்களை தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கும் லிடியனுக்கு வாழ்த்துகள்!

ட்விட்டர் ஷேர்ஸ்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close