'உலகமெங்கும் வெள்ள பாதிப்புகள் 15 மடங்காக உயர்வு'- அதிரவைக்கும் ஐ.பி.பி.ஆர் அறிக்கை! | Environment faces multiple crisis all around the world

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (16/02/2019)

கடைசி தொடர்பு:07:00 (16/02/2019)

'உலகமெங்கும் வெள்ள பாதிப்புகள் 15 மடங்காக உயர்வு'- அதிரவைக்கும் ஐ.பி.பி.ஆர் அறிக்கை!

மனிதர்களின் செயல்பாடுகள், சமுதாயத்தையும் உலக பொருளாதாரத்தையும் மொத்தமாகச் சீர்குலைக்கும் அளவுக்கு ஆபத்தாக உள்ளதாகத் தெரிவிக்கிறது, புது கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனத்தின் ஐ.பி.பி.ஆர் அமைப்பின் அறிக்கை. இதற்குப் பல காரணங்களை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்.

காடுகள்

காலநிலை மாற்றம், பல்லுயிர்கள் அழிந்து போதல், மண் அரிப்பு, காடுகள் அழிப்பு, மற்றும் பெருங்கடல்களில் அமில தன்மை அதிகரித்தல் ஆகியவை குறித்து எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். விஞ்ஞானிகள் சொன்ன இந்தக் காரணங்கள் தான் சுற்றுச்சூழலை அழிவின் பாதைக்கு திருப்புவதாகவும் ஆபத்தான நிலைக்குக் கொண்டு சென்றதாகவும் ஐ.பி.பி.ஆர்-ன் அறிக்கை தெரிவிக்கிறது.

 இந்த சுற்றுச்சூழல் சீரழிவு மனித வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது என்பதையும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இந்த சுற்றுச்சூழல் ஆபத்தின் தீவிரத்தை அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் உள்ளவர்களும் கவனிக்கத் தவறி விட்டதாக அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இந்த பேரழிவை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிவேகமாகக் குறைந்து வருகிறது.

வெள்ள

கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து உலகில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு 15 மடங்காகவும், தீவிரமான வெப்பநிலை 20 மடங்காகவும், காட்டுத்தீ சம்பவங்கள் ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள், விஞ்ஞானிகள்  பருவநிலை மாற்றம் குறித்து அதன் கொள்கை உருவாக்கும்போது விவாதிக்கப்படுகிறது. ஆனால் வேறு சில காரணங்கள் பெரிதாக கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள், விஞ்ஞானிகள்


[X] Close

[X] Close