சென்னையில் ஜாவா, டெய்ம்லர் இந்தியாவின் சாதனை... மோட்டார் அப்டேட்ஸ்! | Jawa in Chennai, Daimler India Achieves BreakEven... Motor Updates!

வெளியிடப்பட்ட நேரம்: 07:47 (17/02/2019)

கடைசி தொடர்பு:07:47 (17/02/2019)

சென்னையில் ஜாவா, டெய்ம்லர் இந்தியாவின் சாதனை... மோட்டார் அப்டேட்ஸ்!

அமெரிக்கா, இந்தோனேஷியா, ஜப்பான், ஜெர்மனி வரிசையில் டெய்ம்லருக்கு இந்தியா 5-வது பெரிய டிரக் சந்தையாக இருக்கிறது.

ஜாவா... கடந்த 2018-ம் ஆண்டில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பைக்குக்காக, சென்னையில் மூன்று புதிய டீலர்ஷிப்களைத் தொடங்கியிருக்கிறது க்ளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம். அடையார் (Phoenix Motors), குரோம்பேட்டை (Ultimate Motors), அண்ணாநகர் (JMB Motor World LLP) மற்றும் நந்தனத்திலும் ஒரு டீலர்ஷிப் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. எனவே, வரும் 22-ம் தேதிக்குள் ஜாவாவுக்காக இந்தியாவில் 54 டீலர்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது. 100 டீலர்கள் என்ற இலக்கை நோக்கி அசுரவேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் க்ளாசிக் லெஜெண்ட்ஸ், பைக்குகளின் டெலிவரி அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கும் என தகவல் வந்திருக்கிறது.

ஜாவா - Ashish Joshi

மேலும், ஆன்லைனில் இந்த பைக்குக்கான புக்கிங் முடிந்திருந்தாலும் (செப்டம்பர் 2019 வரை Soldout), டீலர்களில் புக்கிங் ஏற்றுக்கொள்ளப்படும் (5,000 ரூபாய்). ஒரு நாளைக்கு ஒரு ஷிஃப்ட் (200 பைக்குகள்) என்றளவில் இயங்குகிறது, பிதாம்பூரில் அமைந்திருக்கும் பைக் தொழிற்சாலை. முதல் ஆண்டில் 90 ஆயிரம் பைக்குகளை விற்பனை செய்ய க்ளாசிக் லெஜெண்ட்ஸ் திட்டமிட்டிருக்கிறது. பின்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன்கூடிய ஜாவா சீரிஸ் பைக்குகள், வழக்கமான மாடல்களைவிட 8,942 ரூபாய் கூடுதல் விலையில் வந்தது தெரிந்ததே.

டெய்ம்லர் இந்தியா - Satyakam Arya

2018-ம் நிதியாண்டில், பொருளாதார அளவில் Break-Even (வர்த்தகத்தில் செலவுக்கு இணையாக லாபம்) அடைந்து அசத்தியிருக்கிறது டெய்ம்லர் இந்தியா. கடந்த ஜூன் 2012-ல் பாரத் பென்ஸ் டிரக்குகளை (9-49 டன் ரேஞ்ச்) நம் நாட்டில் அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், இந்தச் சாதனையை விரைவாகவே (5.8 ஆண்டுகள்) எட்டியிருக்கிறது. கனரக வாகனங்கள் பிரிவில் கடந்தாண்டில் ஐரோப்பிய நிறுவனங்கள் (MAN, Scania) பின்தங்கிய நிலையில், இது குறிப்பிடத்தக்க நிகழ்வுதான்! மேலும் கடந்தாண்டில் 22,532 டிரக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து, விற்பனையில் 35% வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது டெய்ம்லர் இந்தியா.

டிரக்குகளின் ஏற்றுமதியும் 8 சதவிகிதம் அதிகரித்து, 7,034 டிரக்குகள் என்றளவில் இருக்கிறது. தவிர, இந்த நிறுவனத்தின் சார்பில் நம் நாட்டில் 48 புதிய TouchPoints தொடங்கப்பட்டு, மொத்த TouchPoint-களின் எண்ணிக்கை 182-ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்கா, இந்தோனேஷியா, ஜப்பான், ஜெர்மனி வரிசையில் டெய்ம்லருக்கு இந்தியா 5-வது பெரிய டிரக் சந்தையாக இருக்கிறது. 

DICV - Bharat Benz

``பலவித தேவைகளுக்கு ஏற்ற வாகனங்கள் மற்றும் பரந்துவிரிந்த டீலர் நெட்வொர்க்தான், இந்த வெற்றிக்குக் காரணம். வரும் நிதியாண்டில், புதிய அறிமுகங்கள் - அதற்கு ஏற்றபடியாக அதிக டீலர்கள் (2X) - Digitalisation ஆகியவை எங்களின் இலக்காக இருக்கும்'' என்றார், டெய்ம்லர் இந்தியாவின் புதிய CEO & நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கும் சத்யகம் ஆர்யா. வாடிக்கையாளர் சேவையை முழுக்க டிஜிட்டல்மயமாக்க இருப்பதுடன், ஒவ்வொரு 100கிமீ-க்கும் ஒரு டீலர்ஷிப் இருக்கும்படியும், புதிய Axle Load விதிகள் (முன்பைவிட 25-30% அதிக எடை) மற்றும் BS-6 மாசு விதிகளின்படி டிரக்குகளை மேம்படுத்தவும், எலெக்ட்ரிக் டிரக்குகளை அறிமுகப்படுத்தவும் டெய்ம்லர் இந்தியா திட்டமிட்டிருக்கிறது.

செப்டம்பர் 2018-ல் 1 லட்சம் டிரக்குகள் உற்பத்தி (உள்நாட்டில்) மற்றும் 20 ஆயிரம் டிரக்குகள் ஏற்றுமதி (50 நாடுகளுக்கு) என இரு விஷயங்களை நம் நாட்டில் இந்த நிறுவனம் சாதித்திருந்தது. 95% Localised பாரத் பென்ஸ் டிரக்குகளுக்கு, தமிழகத்தில் மட்டுமே 16 டீலர்கள் இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close