150 வகை பறவைகள்; 86 வகை பட்டாம்பூச்சிகள்... நம்புங்க, புதுச்சேரிலதான் இவ்வளவும் இருக்கு! | A Facebook group Puducherry, nature and wildlife forum captures photos of rare species birds

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (18/02/2019)

கடைசி தொடர்பு:15:30 (18/02/2019)

150 வகை பறவைகள்; 86 வகை பட்டாம்பூச்சிகள்... நம்புங்க, புதுச்சேரிலதான் இவ்வளவும் இருக்கு!

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் விவசாயிகளின் உழவுத் திருவிழா அண்மையில் நடந்துமுடிந்தது. இவ்விழாவில் பல்வேறு வகையான வண்ணப்பூக்களின் கண்காட்சி, புதுச்சேரி விவசாயிகளின் உழவு சந்தைகள் மற்றும் பாரம்பர்யமான கிராமிய உணவுகளின் ஸ்டால்கள் போன்றவை வைக்கப்பட்டன. அதில் ஒரு ஸ்டாலில் 'Puducherry nature and wildlife forum' என்ற ஃபேஸ்புக் குழுவின் உறுப்பினர்களால்  புதுச்சேரியில் எடுக்கப்பட்ட வன உயிரினங்களின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

புதுச்சேரியில் இருக்கும் பறவைகள்

இதைப்பற்றி அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் காந்தி சங்கர் கூறுகையில், ``புதுச்சேரினா எல்லாரும் பீச், பார்க், ஆரோவில் இதெல்லாம் மட்டும்தான்னு நினைச்சிட்டு இருக்காங்க. புதுச்சேரினா அதெல்லாம் மட்டும் இல்ல. புதுச்சேரில வன உயிரினங்களும் அதிக அளவுல இருக்கு. இதைப் பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வு உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே எங்கள் 'Puducherry nature and wildlife forum' என்ற ஃபேஸ்புக் குரூப். நாங்க கடந்த முன்று வருடமா புதுச்சேரியில் உள்ள வன உயிரினங்களோட கணக்கெடுப்பு நடத்திட்டு வர்றோம்.

Puducherry nature and wildlife forum குழு

இதுவரை எங்க கணக்கெடுப்பின்படி 150 வகையான பறவைகள், 86 வகையான பட்டாம்பூச்சிகள், பல அரியவகை பூக்கள் மற்றும் பல இதர வன உயிரினங்களை புதுச்சேரில படம் எடுத்திருக்கோம். இதுல இந்தியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சியான 'Southern birdwing' மற்றும் மிகவும் அரிய வகை பட்டாம்பூச்சியான "Plains Royal Blue"வும் அடங்கும். புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் 'Flamingo' , 'Pelican' மற்றும் 'Harrier' வகை பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. எங்க குரூப்ல மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டவங்க இருக்காங்க.

பறவைகளின் படங்கள்

அதுல வெறும்10 பேர் எடுத்த 60 புகைப்படங்கள் மட்டும்தான் மக்கள் பார்வைக்கு வச்சிருக்கோம். இது எங்க கணக்கெடுப்புல 20 சதவிகிதம் மட்டும்தான். Wildlife-ல புலி, சிங்கம் மட்டுமில்லாம பூ, புழு, பூச்சி, பறவை, விலங்குனு எல்லாமேதான் அடங்கும் என்பதை இந்தப் புகைப்படக் கண்காட்சி மூலமா மக்களுக்குத் தெரியப்படுத்துறோம். Wildlife photography-ல விருப்பம் இருக்கறவங்க தாராளமா எங்க குரூப்ல சேர்ந்து புதுச்சேரியில இருக்க வன உயிரினங்கள படம் எடுத்து பதிவேற்றம் செய்து தங்கள் பங்களிப்பை அளிக்கலாம். 'Butterflies of Pondicherry', 'Dragonflies of Pondicherry' போன்ற எங்களுடைய மற்ற குரூப்லயும் சேர்ந்து உங்கள் பங்களிப்பை அளிக்கலாம்"  என்று கூறினார்.


[X] Close

[X] Close