இமயமலையைவிடப் பெரிய மலைத்தொடர்கள்? - வெளிச்சத்துக்கு வரும் ஆழ் உலகின் உண்மைகள் | Mountain ranges larger than Himalayas and andes found!

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (20/02/2019)

கடைசி தொடர்பு:20:15 (20/02/2019)

இமயமலையைவிடப் பெரிய மலைத்தொடர்கள்? - வெளிச்சத்துக்கு வரும் ஆழ் உலகின் உண்மைகள்

பூமியின் உள்கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றிய கண்டுபிடிப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. இதற்குக் காரணம் இன்னும் மேலே இருக்கும் பாறைப் படலங்களைக் கடந்து செயற்கைக்கோள் மூலம் படம்பிடிப்பது இன்றும் கடினமான விஷயமாகவே இருக்கிறது. சமீபத்தில் பொலிவியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அதிர்வுகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அடியில் மிகப்பெரிய மலைகளை 660 கிலோமீட்டர் ஆழத்தில் கண்டறிந்துள்ளனர். அதிர்வுகள் எப்படி பூமியினுள் நகர்கின்றன என்பதை நுணுக்கமாகப் பதிவிட்டுத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இமயமலை

வெண்பு வூ, சிடாவ் நீம், ஜெசிகா இர்விங் ஆகிய சீனா மற்றும் அமெரிக்கா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சியால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கண்டுபிடிப்பில் இந்த மலைத்தொடர்கள் இமயமலைத் தொடரை விட பெரியதாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இது பூமியின் மேல் மூடகத்திற்கும், கீழ் மூடகத்திற்கும் (Upper and lower mantle) இடையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதலாக எந்தத் தெளிவான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இதற்கு இன்னும் அதிக ரிக்டர் அளவில் ஆழமான ஒரு நிலநடுக்கம் ஏற்படவேண்டும். அது மட்டுமே இதை உறுதிப்படுத்தவும் மேலும் அதிக தகவல்கள் பெறவும் ஒரே வழி என்கின்றனர்.

பூமியின் மூடகம்

இப்போது இருக்கும் சீஸ்மொமீட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், கடந்த 20 வருடங்களில் இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும்தான் இந்தத் தகவல்களை பெறுவதற்கே காரணம். இன்னும் வரும்காலங்களில் ஆழ் உலகின் பல மாயங்கள் மேம்பட்ட சீஸ்மொகிராபியின் உதவியுடன் நீங்கும் என இந்த ஆராய்ச்சியாளர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close