4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்! | 4 years in Production, 400 hours of footage...'Wild Karnataka' teaser is here!

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (21/02/2019)

கடைசி தொடர்பு:13:50 (21/02/2019)

4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்!

உலகில் எங்கும் காணப்படாத பல்லுயிர்களுக்கு வாழ்விடமாக இருக்கிறது இந்தியா. அதிலும் முக்கியமாக நமது மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருக்கும் உயிர்கள் சற்றே ஸ்பெஷல். யானைகள் தொடங்கி புலிகள் வரை உலகில் எங்கும் காணாத அளவில் உயிர்கள் இங்கு வாழ்கின்றன. இந்த மலைத்தொடர்களைப் பெரிதளவில் கொண்டிருக்கும் கர்நாடக மாநிலத்தின் உயிர்களின் சிறப்புகள் குறித்து  `வைல்ட் கர்நாடகா' என்ற தலைப்பில் ஒரு வைல்ட்லைஃப் டாக்குமெண்டரி படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் டீசர் இப்போது யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

கர்நாடக சிறுத்தை

UltraHD 4K-ல் நான்கு வருடங்கள் படமாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவணப்படம். மொத்தமாக 400 மணிநேர காட்சிகள் (footage) இந்த படத்துக்காக படம்பிடிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் வனத்துறை இதை இணைந்து தயாரித்துள்ளது. அமோகவர்ஷா, கல்யாண் வர்மா, சரத் சாம்பதி, விஜய் மோகன் ராஜ் ஆகியோர் சேர்ந்து இந்த ஆவணப்படத்தை எடுத்து முடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் கர்நாடக மாநிலத்தில் வாழும் விலங்குகளின் வாழ்வியலும், அதன் குணநலன்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வியப்புக்குள்ளாகும் காட்சிகளைக் கொண்டிருக்கும் இந்த டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

டேவிட்

சர் டேவிட் அட்டன்ப்ரோவ்

இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக உலகப் புகழ்பெற்ற இயற்கையியலாளர் சர் டேவிட் அட்டன்ப்ரோவ் இந்த ஆவணப்படத்துக்குக் குரல் கொடுத்துள்ளார். பிபிசியின் பல பிரபல வைல்ட்லைஃப் டாக்குமெண்டரிகளில் கேட்கும் குரல் இவருடையதுதான். இவரின் வர்ணனைக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்தப் படத்தின் வேலைகளுக்காகக் கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார் அவர். 

`வைல்ட் கர்நாடகா' மார்ச் 3-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close