Published:Updated:

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!
உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

இந்த வார ஆனந்த விகடன்: https://bit.ly/2XdtE7E

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

அதிர்ச்சி, அழுகை, ஆத்திரம்...இப்போது ஒட்டுமொத்த தேசத்தின் உணர்வுகள் இவைதான். காஷ்மீர், புல்வாமா பகுதியில் நம் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், நம் தேசத்தின் இறையாண்மைமீது தொடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதல் என்பதை உணர்ந்து கலங்கி நிற்கிறோம்...

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

ராணுவ வீரர்களின் உயிரை பலிவாங்கி, பயங்கரவாதம் மீண்டும் தன் கோரமுகத்தை காஷ்மீரில் காட்டியுள்ளது இந்தியர்களின் நாட்டுப்பற்றையும் ஒற்றுமை உணர்வையும் அதிகப்படுத்தியுள்ளது. 'இந்தத் தாக்குதல் இந்திய ராணுவத்தையும் இந்திய மக்களின் மனஉறுதியையும் சீர்குலைத்துவிடும்' என்று பயங்கரவாதிகள் நினைத்திருக்கலாம். ஆனால், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு மனஉறுதியுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான தங்கள் உணர்வுகளை இந்தியர்கள் அனைவரும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றனர். இதுதான் இந்தியா, இவர்கள்தான் இந்தியர்கள்!

- உணர்வுபூர்வமாக செதுக்கப்பட்டிருக்கும் 'தேம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்!' எனும் கவர் ஸ்டோரி கவனத்துக்குரியது. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

*

துர்கா (தலைவருக்குத் தலைவி): மருமகளாக கோபாலபுரம் வீட்டுக்குள் இவர் வந்த சில நாள்களில், 'மிசா' கைதியாக சிறைக்குள் சென்ற ஸ்டாலின், பல சித்திரவதைகளை அனுபவித்து, 'அரசியல்வாதியாக' வெளியே வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஸ்டாலினுக்குப் பக்கபலம் என்றால் அது துர்கா ஸ்டாலின்தான். 

சபரீசன் (மீண்டும் ஒரு மனசாட்சி): கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் அவரின் மருமகன் முரசொலி மாறன். இப்போது ஸ்டாலினின் மனசாட்சியாக மாறியிருக்கிறார் சபரீசன். தி.மு.க-வில் எந்தப் பொறுப்பும் இல்லாமலே சகல செல்வாக்குடன் விளங்குகிறார் சபரீசன்.

உதயநிதி (கழகத்தின் கதாநாயகன்): கருணாநிதி குடும்பத்திலிருந்து மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியாக வரும் வாய்ப்புள்ளவர். அரசியலில் நேரடியாக எந்தப் பொறுப்புக்கும் வராமல் இருந்தாலும் ஸ்டாலினைச் சுற்றி நிற்கும் இளைஞர் பட்டாளத்தின் கதாநாயகன் இவர்.

சுனில் (மாஸ்டர் மைன்ட்): ஸ்டாலினுக்கு மட்டுமல்ல இன்றைய தி.மு.க- வுக்கும் மாஸ்டர் மைண்டு இவர். சபரீசன் மூலம் ஸ்டாலினுக்கு அறிமுகமான தொழில்நுட்ப வல்லுநர்.

தினேஷ் (நிழல்): ஸ்டாலினின் நிழலாக வரும் அவரின் உதவியாளர். புதிதாக திருமணமான இளைஞர். இவரும் ஓ.எம்.ஜி.குழுமத்தில் பணியாற்றி அதிலிருந்து ஸ்டாலினின் உதவியாளராக புரமோஷன் பெற்றுள்ளார். 

- இது டீசர்தான். தந்தை கருணாநிதி இருந்தவரை தலைமையின் வழிகாட்டுதலிலும் நிழலிலும் வளர்ந்தவர் ஸ்டாலின். தலைவர் ஆனபிறகு அவரின் நிழல்களாக, நிகழ்காலப் பயணிகளாக இருப்பவர்களின் பின்புலத்தை அடுக்குகிறது 'ஸ்டாலினின் நிகழ்கால நிழல்கள்!' எனும் ஸ்பெஷல் ஸ்டோரி.  மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

மாநில சபாநாயகருக்கே தெரியாமல், நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிரண் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்ததும், `சுத்தத்தைக் கடைப்பிடிக்காத கிராமங்களுக்கு இனிமேல் அரிசி, பருப்பு கிடையாது' என்று அறிவித்ததும், மக்களாட்சியின் அடிப்படையையே தகர்க்கும் நடவடிக்கைகள். அந்த மாநிலத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத ஒருவர், அந்த மாநில மக்களைக் கட்டுப்படுத்துவது, மக்களின் அடிப்படை உரிமைகள் மீதான நேரடிப்போர். டெல்லியிலும் அதே கதைதான். அனில் பைஜலோடு சண்டையிடவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரம் சரியாக இருக்கிறது. அப்புறம் எப்படி மக்கள்பணி ஆற்றுவார் மனிதர்?

மாநில சுயாட்சிக்கான குரல் ஓங்கி ஒலிக்கும் தமிழ்நாட்டிலோ, `ஆய்வு' எனும் பெயரில் ஆளுநர் போடும் ஆட்டங்கள் அத்துமீறிப் போகின்றன. ஜெயலலிதாமீது ஊழல் வழக்கு தொடுக்க அனுமதியளித்த சென்னா ரெட்டியையும் தமிழ்நாடு பார்த்திருக்கிறது. ஜெயிலுக்குப்போகக் காத்திருந்த ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்த பாத்திமா பீவியையும் தமிழ்நாடு மறக்கவில்லை. இவர்களிலிருந்து மாறுபட்டு எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக இருக்கிறார் புரோஹித். 

- "ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்ற அறிஞர் அண்ணாவின் கேள்விக்கு, ஆயுசு அறுபது. ஆனால், இன்னமும் ஆட்டுத்தாடிகளுடன் மல்லுக்கட்டி வருகிறார்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள். இதுகுறித்த விரிவான பார்வைதான் 'அத்துமீறுகிறதா ஆளுநர்கள் ஆதிக்கம்?' எனும் சிறப்புக் கட்டுரை. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

`` 'உலக சினிமா' என்பது தமிழில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாக இருக்கிறது. உண்மையில் உலகசினிமா என்றால் என்ன?''

``வணிகம் மற்றும் பார்வையாளருக்கான சமரசம் ஏதுமற்று, எடுக்க நினைத்த கதையை, சம்பவத்தை சினிமாக் கலைக்கு நேர்மையாக உருவாக்குவது 'உலக சினிமா' என்பது என் பார்வை. நமக்கு ஒரு நல்ல பிரெஞ்சு சினிமா உலக சினிமா என்றால், ஒரு பிரெஞ்சுப் பார்வையாளனுக்கு ஒரு நல்ல தமிழ் சினிமா 'உலக சினிமா!' 

`` 'டூலெட்' பார்க்க வரும் பார்வையாளர்கள் என்ன மாதிரியான எதிர்பார்ப்போடு திரையரங்குக்கு வரலாம்?'' 

``எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாருங்கள். நமது இயல்பான வாழ்க்கையைத்தான் சினிமாவாக எடுத்திருக்கிறேன். ஒரு பார்வையாளர் படத்துக்காகச் செலவளிக்கும் ஒன்றரை மணி நேரம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவேன். அதை அர்த்தமுள்ள பொழுதாக நீங்கள் ஏற்கும்படியான ஒரு சினிமாவை எடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்."

- 100 சர்வதேசத் திரையிடல்கள், 30-க்கும் மேற்பட்ட முக்கிய விருதுகள், விருதுக்கான 80 முன்மொழிவுகள், சிறந்த தமிழ்ப்படத்துக்கான 'தேசிய விருது' எனத் தனது முதல் திரைப்படம் பெற்றிருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியாக இருக்கிறார் இயக்குநர் செழியன்... அவருடனான ``கலை நேர்மைதான் உலக சினிமா!" எனும் சிறப்புப் பேட்டி, சினிமா மீதான நம் பார்வையையே மாற்றக் கூடும்.  மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

சென்ற வாரம் செய்திகளிலும் விவாதங்களிலும் அதிகம் இடம்பெற்ற பெயர்களில் ஒன்று ம.ஆ.சிநேகா. 'சாதி, மதமற்றவர்' என்று சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதாலேயே கவனம் குவித்தவர். பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும்போது, `சாதி, மதம் குறிப்பிட விருப்பமில்லை' என்று எழுதுவதற்கான உரிமை தமிழகப் பெற்றோர்களுக்கு உண்டு. ஆனால் 'சாதி, மதமற்றவர்' என்று ஒருவருக்குச் சான்றிதழ் அளிக்கப்படுவது இதுதான் முதல்முறை.   

சிநேகாவின் இந்த முற்போக்கு முடிவுக்குக் காரணம், அவரின் குடும்பப் பின்னணி. தாய் மணிமொழி, தந்தை ஆனந்த கிருஷ்ணன் இருவருமே சாதி, மதத்தில் நம்பிக்கையற்ற முற்போக்காளர்கள். மூன்று மகள்கள். மூவருக்குமே வெவ்வேறு மதப்பெயர்கள். சிறுவயதிலிருந்தே தாய்ப்பாலுடன் சாதியுணர்வை ஊட்டி வளர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் சிநேகாவின் தாய் மணிமொழி, ஓர் அபூர்வ அம்மா. 

- எப்படியோ சாதி, மத ஒழிப்பைத் தமிழ்ச் சமூகத்தில் பேசுபொருளாய் மாற்றியிருக்கும் சிநேகாவின் நேர்காணலுடன், இந்த அணுகுமுறை இடஒதுக்கீட்டை பாதிக்குமா? என்பதையும் சேர்த்து தந்திருக்கிறது 'என் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை!' எனும் ஆர்ட்டிகிள்.  மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டை சமீபத்தில் கொண்டாடியது, தமிழக அரசு. எம்.ஜி.ஆர் என்ற பெயர் புழங்குகிற இடத்திலெல்லாம் மறக்காமல் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர், நம்பியார். 1917-ல் எம்.ஜி.ஆர் பிறக்க, 1919-ல் பிறந்தார், எம்.என். நம்பியார். 2019 அவர் பிறந்த நூறாவது ஆண்டு. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தகித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், கேரளாவின் சபரிமலையில், 'மகா குருசாமி' எம்.என்.நம்பியார் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் சில நாள்களுக்கு முன் தொடங்கின. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியிருந்த நம்பியாரின் இளைய மகன் மோகன் நம்பியாரை, சென்னை கோபாலபுரத்தில், நம்பியார் வசித்த வீட்டில் சந்தித்தபோது...

``அப்பா குறித்த நினைவுகளைச் சொல்லுங்கள்..."

``ரோல் மாடல் அப்பா. பிள்ளைங்களை அவர் கடுமையா பேசவேண்டிய சூழலை நாங்க அவருக்குக் கொடுக்கமாட்டோம். மீறி சில சமயம் அப்படிப் பேசிட்டா, கொஞ்ச நேரத்திலேயே அந்தச் சூழலை மறக்கடிக்க, ஜோக் சொல்லி எல்லோரையும் கலகலப்பாக்கிடுவார்.   

``எம்.ஜி.ஆர் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்?"

``அப்பா அம்மாவைப் பொண்ணு பார்க்கப் போனப்போ, கூடவே போனராம் எம்.ஜி.ஆர். கல்யாணத்துல அப்பாவுக்கு மாப்பிள்ளைத் தோழனா இருந்திருக்கார். நாங்க சின்னப் பசங்களா இருந்தப்போ அவரை `பொல்லாத மாமா'ன்னுதான் கூப்பிடுவோம். ஏன்னா, வீட்டுக்கு வர்றப்போ போறப்போ எல்லாம் கொஞ்சம் கண்டிப்பார்."  

- நம்பியார் குறித்த அரியப்படாத பக்கங்களையும் புரட்டுகிறது ``அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!" எனும் சிறப்புப் பேட்டி.  மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

இன்று நினைத்தாலும் பதைபதைக்க வைக்கிறது... பிப்ரவரி 5, 2017 அன்று, போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் பாபுவின் ஆறு வயது மகள் ஹாசினிக்கு நேர்ந்த கொடூரம். அன்று தன் வயதுப் பிள்ளைகளுடன் பட்டாம்பூச்சியாய் விளையாடித் திரிந்தவளின் அடுத்த சில மணி நேரம் கோரமாய் நகர்ந்து முடிந்தது. ஹாசினி வசித்து வந்த அதே அப்பார்ட்மென்ட்டைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் தஷ்வந்த், அந்தக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து மாங்காடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு நடுவே எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இவ்வளவு கொடூரக் கொலையாளியை, தந்தைப்பாசத்தால் போராடி ஜாமீனில் மீட்டு வந்தார் தஷ்வந்த்தின் தந்தை சேகர். ஆனால், வெளியே வந்த தஷ்வந்த் அடுத்ததாக, தன் அம்மாவையும் கொன்றுவிட்டுத் தப்பி ஓடினான். மும்பையில் தலைமறைவாகியிருந்தவனை, குன்றத்தூர் காவல்நிலைய அதிகாரிகள் சிறப்புப்படை அமைத்துக் கண்டுபிடித்தனர். தஷ்வந்த் குற்றவாளி எனச் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உறுதிசெய்து தூக்குத் தண்டனை வழங்கியது. இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது மீண்டும் சேகர், தஷ்வந்த்தைச் சிறையிலிருந்து மீட்கப் போராடுகிறார் என்ற தகவல்கள் வந்ததும் அவரைத் தேடிச் சென்றபோது கிடைத்த தகவல்களும், சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகளின் தொகுப்புமே "அவன் வெளியில வரவே வேணாம்!" எனும் ஸ்பெஷல் ஸ்டோரி. மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

காதலிக்கும்போது, நிறைய சிறுகதைகள் எழுதுவாங்க தனா. ஒரு கதையில மனைவி வீட்டு வேலைகளையெல்லாம் முடிச்சுட்டு, தான் எழுதுன கதையை அம்மா, அப்பாவுக்குப் படிக்கச் சொல்லிட்டு, வேகமா கெளம்பிப் போவாங்க. போறது, ஒரு திரையரங்கம். அங்கே படம் முடியிறப்போ, 'எ பிலிம் பை பிரேம்குமார்'னு எழுத்துகள் ஓடும். ஆடியன்ஸ் உட்கார எக்ஸ்ட்ரா சீட் எல்லாம் போட்டிருப்பாங்க. அதையெல்லாம் பார்த்து, தனா சந்தோஷப்படுற மாதிரி அந்தக் கதை முடியும். இந்தக் கதையைப் படிக்கிறப்போ, 'நாம கேமராமேன் ஆக கஷ்டப்படுறோம். தனா, இயக்குநர்னு எழுதி சந்தோஷப்படுறாளே'ன்னு நினைச்சேன். ஆனா, தனா எழுதியது '96' மூலமா நடந்திடுச்சு" எனச் சொல்லி, தனாவைப் பார்க்கிறார் பிரேம். 

- மனைவி, தனலட்சுமி. மகள், சாலை வேதா. இவர்களுக்குத் துணையாகக் காலா, க்யூட்டி, டைகர், த்ரிஷா என ஒரு டஜன் பூனைகள். அன்பும் ஆனந்தமும் விளையாடுகிற வீடு அது. மனிதருக்கு இயற்கைதான் காதல் என நினைத்தால், இயற்கையான குணமே காதல்தான். பன்முகக் காதலனாக இருக்கிறார், ஒளிப்பதிவாளரும் '96' படத்தின் இயக்குநருமான பிரேம்குமார். அவர் உடனான `காதல் '96' ' எனும் நேர்காணல் கட்டுரை ஒரு மகிழ்வனுபவம். மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

பயணங்களின்போது, நகரங்களைக் கடந்து கிராமப்புறங்களில் இருக்கும் குடிசை உணவகங்களில் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா..? பலசமயங்களில் அது மிகச்சிறந்த தருணமாக அமைந்துவிடும். குளிர்சாதனப் பெட்டியில் உறைந்துபோகாத, அந்த மண்ணில் விளைந்து முகிழும் கறிகாய்களால் சமைத்து, கள்ளங்கபடமில்லாமல் பரிமாறுகிற தாய்மார்களின் அந்த அன்பில் கரைந்துபோவோம்.  

ஓமலூரிலிருந்து தாராமங்கலம் செல்லும் சாலையில், இந்திரா நகரில் இருக்கும் அழகப்பன் கிராமத்து உணவகத்தில் எனக்கு அப்படியொரு அனுபவம் வாய்த்தது. சாலையையொட்டி, கூரை வேயப்பட்ட சிறிய வீடு. முகப்பில் புகைபோக்கிக் குழாய் வைத்து மண் பூசப்பட்ட அடுப்புகள். நான்கைந்து அடுப்புகள் எரிந்தாலும் துளிப் புகை வெளியில் வரவில்லை. சிறப்பான கிராமத்துத் தொழில்நுட்பம். மாரியம்மா  பாட்டி, குழம்பில் வாகாக வெட்டிய மீன்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார். லட்சுமி பாட்டி கொதிக்கும் நீரில் கேழ்வரகு மாவைக் கொட்டி, கட்டிப்படாமல் புரசைக் கட்டையைப் போட்டு வேகவேகமாகக் கிளறிக்கொண்டிருக்கிறார். ராஜாமணி பாட்டி சாமைச்சோற்றை அகப்பையில் அளவெடுத்து கிண்ணங்களில் வைத்துக்கொண்டிருக்கிறார். உணவகத்தை நிர்வகிக்கும் ஆறு பெண்களில், உணவக உரிமையாளர் அமுதா மட்டும்தான் இளையவர்...

- எளிய மனிதர்கள்... எளிய உணவு... வயிறும் மனமும் தளும்பத் தளும்ப நிறைந்து விடுகின்றன. இளைஞர்கள் நம் நாட்டுப்புறச் சாப்பாட்டின் தனித்தன்மையை அறிய, கட்டாயம் ஒருமுறை இந்த உணவகத்துக்குச் செல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கிறது 'சோறு முக்கியம் பாஸ்!' தொடர் பகுதி.  மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

உணர்வுகளும் அரசியலும்: 7 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 10 தெறிப்புகள்!

* பலபேர் ஒரே ஒரு ராமாயணம்தான் இருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், தாய்லாந்து ராமாயணம், பௌத்த ராமாயணம், நாட்டுப்புற ராமாயணம் என்று பல ராமாயணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாத தகவல், `சேக்கிழார் எழுதிய சேக்கிழார் கம்ப ராமாயணம்' என்ற ஒன்று இருப்பது. இந்த அரிய உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த இலக்கிய ஆய்வாளர் அல்லவா எடப்பாடியார்!

- இதுவரை தமிழகத்தை ஆண்ட தமிழக முதல்வர்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு. 'எடப்பாடியெல்லாம் முதல்வர் ஆவார்' என்று தமிழக மக்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஏன், எடப்பாடி முதல்வராவார் என்று எடப்பாடியே கனவுகண்டிருக்க மாட்டார். எப்படியோ, அந்தக் கொடுங்கனவு நனவாகி இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. தான் முதல்வர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, பக்கம் பக்கமாக விளம்பரம் வெளியிட்டிருக்கிறார் எடப்பாடியார். இருந்தாலும் அவருக்குத் தன்னடக்கம் அதிகம். இதோ அவர் சொல்லாமல் விட்ட சில சாதனைகளைப் பட்டியலிடுகிறது 'வேதமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சி!' எனும் சிறப்பு அலசல். மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2GVIzxI