Published:Updated:

`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்!'-காஷ்மீரிகளைப் பாதுகாத்த சீக்கியர்கள்

`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்!'-காஷ்மீரிகளைப் பாதுகாத்த சீக்கியர்கள்
`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்!'-காஷ்மீரிகளைப் பாதுகாத்த சீக்கியர்கள்

நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர். உயிர்நீத்த துணை ராணுவ வீரர்களுக்காக நாடே கண்ணீர் வடிக்கிறது. அதற்குக் காரணமான தீவிரவாத அமைப்புக்கு எதிராக நாட்டு மக்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது ஒருபுறம் இருக்கத் தாக்குதலுக்கு காரணமான ஆதில் அகமது காஷ்மீரி என்பதால் வடமாநிலங்களில் வாழும் காஷ்மீரி மக்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இது தீவிரவாத பிரச்னை என்று பாராமல் இனவாத பிரச்னையாக திசைதிருப்பி நாட்டின் பல்வேறு இடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீரி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறார்கள். 

`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்!'-காஷ்மீரிகளைப் பாதுகாத்த சீக்கியர்கள்

குறிப்பாக டேராடூன், டெல்லி உள்ளிட்ட இடங்களில் காஷ்மீரிகளை அனுமதிக்க மறுத்தனர். தாக்குதல் நடந்த 14-ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் உள்ள காஷ்மீரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கெல்லாம் சான்றாக ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் `காஷ்மீரிகள் தங்குவதற்கு அனுமதி இல்லை' என நோட்டீஸ் ஒட்டினர். இதேபோல் பல இடங்களில் அம்மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வணிகர்கள் துரத்தப்பட்டனர். திடீரென துரத்தப்பட்டதால் காஷ்மீர் மக்கள் வட மாநிலங்களில் நிர்க்கதியாக நிற்கத் தொடங்கினர். என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அவர்களுக்கு உதவி செய்து நெகிழவைத்துள்ளனர் பஞ்சாபிகள். 

`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்!'-காஷ்மீரிகளைப் பாதுகாத்த சீக்கியர்கள்

காஷ்மீரிகளுக்கு எதிரான வன்முறைகளை அறிந்த பஞ்சாபி மக்கள் நிர்வகித்து வரும் தனியார் தொண்டு நிறுவனம் 'கல்சா உதவி மையம்' அவர்களுக்கு உதவுவதற்காகக் களமிறங்கியது. வடமாநில தெருக்களில் நிர்க்கதியாக நின்ற காஷ்மீரிகளை இரவு, பகல் பாராமல் ஒன்றிணைத்தது. பெண்கள், மாணவர்கள், வணிகர்கள் என வன்முறைகளை எதிர்கொண்ட ஒருவரையும் விடாமல் ஒன்றிணைத்தது இந்தக் குழு. தனிநபர் முதல் குழுக்கள் என ஒட்டுமொத்த பஞ்சாபி மக்களும் அவர்களுக்குத் துணையாக நின்றனர். 

`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்!'-காஷ்மீரிகளைப் பாதுகாத்த சீக்கியர்கள்

அவர்களை ஆங்காங்கே உள்ள குருத்வாராக்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கவைத்து அங்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை வழங்கியதுடன், அவர்களை எல்லாம் காஷ்மீருக்கும், தங்கள் சொந்த மாநிலமான பஞ்சாபுக்கும் அனுப்பி வைத்தனர். 12 பேருந்துகளில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தவிர மேலும் சிலர் ஆங்காங்கே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்!'-காஷ்மீரிகளைப் பாதுகாத்த சீக்கியர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் தங்கியுள்ள காஷ்மீர் மாணவர்களுக்காகச் சீக்கியர்கள் இரவு முழுவதும் பாதுகாப்புக்காக இருந்தனர். சீக்கியர்களின் இந்த உதவிகளுக்கு வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன. காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முஃப்தி, ஓமர் அப்துல்லா மற்றும் சில தலைவர்கள் சீக்கியர்களின் நடவடிக்கையை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்!'-காஷ்மீரிகளைப் பாதுகாத்த சீக்கியர்கள்

``நட்ட நடு ராத்திரியில் எங்களைத் துரத்தியதும் நாங்கள் அந்நியர்களைப் போல உணர்ந்தோம். இது எங்கள் நாடு. நாங்களும் இந்தியர்கள் தான். அப்படி இருந்தும் ஏன் எங்கள் மீது வன்முறைகளை ஏவிவிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. இனி எங்களுக்காக இந்த நாட்டில் யாராவது இருக்கிறார்கள் என்றால் அது சீக்கியர்கள்தான்" என டெல்லி கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் வேதனையுடன் கூறிவிட்டு காஷ்மீர் சென்றனர்.