100 ஆண்டுகளாக அழிந்ததாகக் கருதப்பட்ட ஆமை...திடீரெனத் தோன்றிய அதிசயம்! | Tortoise considered extinct for more than 100 years suddenly appears in Galapagos islands

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (22/02/2019)

கடைசி தொடர்பு:18:00 (22/02/2019)

100 ஆண்டுகளாக அழிந்ததாகக் கருதப்பட்ட ஆமை...திடீரெனத் தோன்றிய அதிசயம்!

கடைசியாக 1906-ல் பார்க்கப்பட்டு அழிந்ததாகக் கருதப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆமை ஒன்று திடீரெனத் தற்போது தோன்றிய அதிசயம் ஈகுவடார்நாட்டில் நடந்துள்ளது. இந்த நாட்டைச் சேர்ந்த கலபோகஸ் தீவு பெரிய ஆமைகள் பலவற்றின் பிறப்பிடமாக இருக்கிறது. இந்தத் தீவுகளுள் ஒன்றாக பெர்னான்டினா தீவுகளைச் சேர்ந்த `Fernandina Giant Tortoise' இனத்தைச் சேர்ந்த பெண் ஆமை ஒன்று அந்தத் தீவில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் வயது எப்படியும் 100 க்கு மேல் இருக்கும் என ஈகுவடார் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

ஆமை

சமீபத்தில் இந்தத் தீவுகள் அனைத்திலும் Giant Tortoise Restoration Initiative (GTRI) என்னும் திட்டம் இந்த அரசால் செயல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆமைகளைக் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில்தான் இந்த அதிசய ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தத் திட்டத்தின் தலைவர் வாஷிங்டன் டப்பியா மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள இதன் மரபணு சோதனை செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இந்த ஆமை தனியாக இல்லை, இந்த இனத்தைச் சேர்ந்த இன்னும் சில ஆமைகளின் தடங்கள் இருப்பதாகவும் அங்கு இருக்கும் குழு தெரிவிக்கிறது. இதன் கண்டுபிடிப்பு இந்தக் குழுவிற்குப் புது உற்சாகத்தை அளித்துள்ளது.

ஆமை அதிசயம்

ஒரு காலத்தில் உணவிற்காகவும், இதிலிருந்து கிடைக்கும் எண்ணெய்க்காகவும் மனிதர்களால் அதிக அளவில் இந்த ஆமைகள் கொல்லப்பட்டன. அதனால்தான் இவை அழிவைச் சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close