Published:Updated:

``எங்க வாழ்க்கையிலயே இதுதான் முதல்முறை!" - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் சக்கர நாற்காலிகளிலேயே அம்மனை தரிசிக்க வந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டாலும், போலீஸாரின் உதவியுடன் முதல்முறையாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வெளிப்பிராகாரம் வரை தங்களது இருசக்கர வாகனத்துடன் உள்ளே வர மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

``எங்க வாழ்க்கையிலயே இதுதான் முதல்முறை!" - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி

அந்தக் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜா பேசியபோது, `` மாவட்ட நிர்வாகத்திடம் எத்தனையோ முறை மனு கொடுத்தும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் சிறப்பு இருசக்கர வாகனத்துடன் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டுதான் இருந்தது. முதல்முறையாக இன்று மனிதாபிமானத்துடன் எங்களை உள்ளே அனுமதித்த போலீஸாருக்கும், எங்களுக்கு தக்க உதவிகள் செய்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற படிக்கட்டுகள் அமைப்பு தன்னார்வலர்களுக்கும் நன்றி. எங்களுக்கென தனியாக, 'மாற்றுத்திறனாளிகள் செல்லும் வழி' என்பதாக பாதை அமைத்துக் கொடுத்தால் பேருதவியாக இருக்கும் " என்றார்.

``எங்க வாழ்க்கையிலயே இதுதான் முதல்முறை!" - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி

சாலையில் தவழ்ந்து வந்து கொண்டிருந்த கால்களை இழந்த பெண்ணின் வைராக்கியமும் துணிச்சலும் அனைவருக்குள்ளும் நம்பிக்கையை விதைத்தது. `` எனக்கு விவரம் தெரிஞ்சு நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர்றது இதான் முதல்முறை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்களுக்கும் எல்லாரையும் மாதிரி நாலு இடம் பார்க்கணும்ன்னு ஆசை இருக்கும். ஏக்கப்படுவோம். ஆனா இன்னிக்குதானே அது நிறைவேறியிருக்கு. " என்கிறார் கண்களில் நெகிழ்ச்சியுடன்.

``எங்க வாழ்க்கையிலயே இதுதான் முதல்முறை!" - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ச்சி

மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் இந்த அசாத்திய முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், கோயிலில் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக தங்கள் சக்கர நாற்காலிகளில் ஏறி இறங்குவதற்கென சறுகலான பாதைகள் அமைக்கப்படாமல் இருந்ததால் சிரமத்துக்கு உள்ளாகினர். கோயில் நிர்வாகம் இவர்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளையும் கருத்தில் கொண்டு தக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருந்தது.

கண்டுகொள்ளுமா கோவில் நிர்வாகம்?