கேட்டரிங் சர்வீஸ்'னா சும்மாவா? #வெஜிட்டேரியன்_விருந்து | Good Food Catering Services.

வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (25/02/2019)

கடைசி தொடர்பு:17:22 (25/02/2019)

கேட்டரிங் சர்வீஸ்'னா சும்மாவா? #வெஜிட்டேரியன்_விருந்து

நீரின்றி அமையாது உலகு, சுவையான உணவின்றி அமையாது நம் கொண்டாட்டங்கள். திருமணம், நிச்சயதார்த்தம், வீடு குடி புகுதல், சீமந்தம், பிறந்தநாள்... இப்படி எந்த விழாவாக இருந்தாலும் உறவினர் மற்றும் நண்பர்களை எல்லாம் அழைத்து அவர்களின் வயிறும் மனமும் நிறைய சுவையான உணவு வகைகளை பரிமாறுவதே நம்முடைய விருந்தோம்பல் பாரம்பரியம். உணவு உண்ட திருப்திக்கு நிகரான திருப்தி உலகத்தில் இருக்கவே முடியாது. அதனால்தான் மனம் நிறைந்து மகிழ்ச்சி ததும்பும் நமது கொண்டாட்டங்களை முழுமைப்படுத்த உணவுகளையும் அனைவரோடும் நாம் பகிர்ந்துகொள்கிறோம்.

திருமணத்தில் மணப்பெண் மாப்பிள்ளை யார் என்பதற்கு பிறகு முக்கியத்துவம் பெறுவது என்னமோ கல்யாண வீட்டு சாப்பாடுதான்! 'எப்போ கல்யாண சாப்பாடு போடப்போற?' எனும் வழக்கிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியமுடியும். 'போன வாரம் ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், அங்க சாப்ட ஃப்ரூட் கேசரி டேஸ்ட் இன்னும் வாயிலேயே நிக்குது, வித்தியாசமா ஒரு பாயாசம் வச்சாங்க பாரு இன்னொரு டம்ப்ளர் கேட்டு வாங்கி சாப்டேன்', - நாம் எல்லோரும் சொல்வதுதான், இப்படி திருமண நிகழ்வின் பெருமையையே உயர்த்திப் பிடிக்கிறது உணவு. கல்யாண வீட்டின் பெருமையெல்லாம் உபசரிப்பில்தான் அடங்கியுள்ளது, அந்த உபசரிப்பின் உச்சம் தான் சுவையான உணவு!

கைகொடுக்கும் கேட்டரிங் சர்வீஸ்....

திருமணம், காது குத்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு நூற்றுக்கணக்கில் வரும் நபர்களுக்கு தனியாளாக நாம் சமைக்க முடியுமா? காலம் காலமாக நமக்கு உதவு வருகிறது கேட்டரிங் சர்வீஸ். நம் தேவையை அறிந்து, உணவு அயிட்டங்களுக்குத் தேவையான மளிகை சாமான்களை வாங்கி வந்து, ஒரு பக்கம் தடபுடலாய் விழா நடந்துகொண்டிருக்கும்போது இங்கே சமையல் தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். 'கெட்டிமேளம் கெட்டிமேளம்' எனும் ஒலிதான் கேட்டரிங் காரர்களுக்கு வர்க்கிங் அலாரம், தாலிகட்டியதும் மொத்த ஜனமும் உணவு உண்ண ஆஜராகிவிடும். அதற்கு அப்புறம் 'சாம்பார் எங்கப்பா, இங்க பொறியல் வை, அண்ணனுக்கு வத்தல் குழம்பு, பாப்பாவுக்கு பாயாசம் கொடு' ஒரே பரபரப்புதான்!

"திருமணத்துக்கு வந்தவர்கள் மனம் கோளாதவாறு கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் நடப்பது முக்கியம், அந்த வீட்டின் கவுரவமே இதில் அடங்கியிருக்கிறது. சுவையான உணவு, நேர்த்தியான சர்வீஸ், ஆட்கள் அதிகமாகிவிட்டால் அதற்கேற்ப அவசர சமையல் பிளான் B என எந்நேரமும் ஆயத்தமாய் இருக்கவேண்டிய பெரும் பொறுப்பு கேட்டரிங் நிறுவனங்களுக்கு உரியது", என்கிறார் குட் ஃபுட் கேட்டரிங் நிறுவனத்தின் இணை நிறுவனர் வசந்த்.

'குட் ஃபுட் கேட்டரிங்' படைக்கும் வெஜிட்டேரியன் விருந்து...

அனைத்து விதமான நிகழ்சிகளுக்கும் தரமான சைவ உணவுகளை நியாயமான விலையில் வழங்கும் சேவையாற்றிவருகிறது குட் ஃபுட் கேட்டரிங் நிறுவனம். சென்னை MGR நகர் பகுதியில் 'ஒன்லி வடா' என்கிற சிறிய ஓட்டலாக ஆரம்பித்த இந்தப் பயணத்தை குட் ஃபுட் கேட்டரிங் சர்வீஸ் ஆக உயர்த்தியுள்ளனர் குட் பாய்ஸான பிரகாஷ் மற்றும் வசந்த், இந்நிறுவனத்தின் இயக்குனர்கள். ஆயிரக்கணக்கான நபர்களுக்குக் கூட அசால்ட்டாக சமைத்து அசத்துகின்றது குட் ஃபுட். திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சமையல் நிபுணர்கள் இவர்கள் வசம், நிறுவனம் துவங்கிய சில வருடங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இவர்களின் சேவை.

சுவையான உணவு மட்டுமல்லாது, திருமணங்களில் விரும்பப்படும் பழ ஸ்டால், பஞ்சு மிட்டாய் ஸ்டால், ஐஸ் க்ரீம் ஸ்டால், ப்ரூட் அன்ட் வெஜிட்டபிள் டெக்கரேஷன் ஆகிய சேவையும் இவர்கள் வசம் உண்டு. 'உணவுக்கு குட் ஃபுட் புக் செஞ்சாச்சு' பிற விஷயங்களுக்கு எங்கே போவது என யோசிக்க வேண்டாம் பந்தல் அலங்காரம், போட்டோகிராபி, டிரான்ஸ்போர்டேஷன் என அனைத்து சேவைகளையும் வழங்குகின்றனர் குட் ஃபுட்.

உங்களின் எந்த வீட்டு விசேஷம் ஆனாலும், சுவையான வெஜிட்டேரியன் உணவு தேவைகளுக்கு குறைந்தது 24 மணி நேரத்துக்குள் ஆர்டர் கொடுத்தால் போதும், சூடான சுவையான உணவு 'டான்' என ஆஜராகிவிடும். இது தவிர கார்ப்பரேட் மீட்டிங்க்ஸ், கார்ப்பரேட் விழாக்களுக்கும் ஆர்டர்கள் தரலாம்! 

வரும் திருமண சீசனில் நல்ல சமையல் சர்வீஸ் தேடுபவறா நீங்கள்? குட் ஃபுட் கேட்டரிங் நிறுவனத்தின் சேவையைப் பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்...

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close