கூகுளை விமர்சித்த பீட்டா... வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! | PETA criticises google doodle for Steve Irwin and faces backlash from twitterattis

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (25/02/2019)

கடைசி தொடர்பு:18:25 (25/02/2019)

கூகுளை விமர்சித்த பீட்டா... வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

பிரபல விலங்குகள் ஆர்வலரும், டி.வி பிரபலமுமான ஸ்டீவ் இர்வினின் 57-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, கூகுள் டூடுல் ஒன்றை தங்களது முகப்புப் பக்கத்தில் வைத்திருந்தது. கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, ஆஸ்திரேலிய கடற்பகுதியில் 'ஆபத்தான கடல் விலங்கினங்கள்' பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது, கொட்டும் திருக்கைமீன் (stingray)  மார்பில் கொட்டியதில், மரணத்தைத் தழுவினார் இர்வின். கூகுளின் இந்தப் பதிவைப் பார்த்த PETA (People for the Ethical Treatment of Animals) அமைப்பு, இதை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தது.

கூகுள் ஸ்டீவ் இர்வின்

"ஸ்டீவ் ஒரு திருக்கைமீனை துன்புறுத்தியதால் இறந்தார். குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டே முதலைக்கு உணவிட்டவர். தம்ள் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த மிருகங்களுடன் மல்லுக்கட்டினார். கூகுளின் இந்தப் பதிவு,  ஓர் ஆபத்தான செய்தியை விட்டுச்செல்லும். விலங்குகளை அதன் இருப்பிடங்களில் அப்படியே விட்டுச்செல்ல வேண்டும்" என்று பதிவிட்டது. மேலும், அவர் ஒரு விலங்கு ஆர்வலர் போல் நடந்துகொள்ளவில்லை எனச் சரமாரியாக ட்வீட் செய்தது. 

ஸ்டீவ்

இந்த ட்வீட், நெட்டிசன் பலரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது பணியைப் பற்றி புரியாமல், எப்படி விமர்சிக்கலாம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். அவர், பல உயிர்களைப் பாதுகாத்துள்ளார். பல லட்சம் மக்களுக்கு அரிய விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். விலங்குகளைப் பாதுகாக்கும் அமைப்பு என்பதால், இன்னொருவரை என்ன வேண்டுமென்றாலும் கூறுவதா என்று ஒருவர் கேட்டிருந்தார்.

PETA

PETA-வின் ஆதரவாளர்களே பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்புகளுக்கு PETA 'ஸ்டீவ் இர்வின் செய்த காரியங்களை மக்கள் இன்னும் நன்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close