Published:Updated:

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்
விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

'கனிமொழியின் சீட் தேமுதிகவுக்கு!'

“...ஸ்டாலினுக்கு போன்செய்துள்ளார் திருநாவுக்கரசர். ‘விஜயகாந்த் எந்த முடிவும் எடுக்காமல் திறந்த மனதுடன் உள்ளார். அவரை நீங்கள் சந்தித்தால் நமது அணிக்கு வந்துவிடுவார்’ என்று சொல்லியுள்ளார். அதற்குப் பிறகே இந்தச் சந்திப்பு நடந்தது.”

“இருவரும் என்ன பேசினார்களாம்?”

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

“ஸ்டாலின் தரப்பிலிருந்து நேரடியாக, ‘உங்கள் கோரிக்கை என்ன?’ என்று கேட்கப்பட்டுள்ளது. உடனே, ‘ஆறு ப்ளஸ் ஒரு ராஜ்யசபா’ என்று பதில் வந்துள்ளது. ஸ்டாலின் தரப்போ, ‘மூன்று சீட் தர முடியும். அதேநேரம் தேர்தல் செலவுகளை வேறு வழிகளில் ஏற்பாடு செய்துகொடுப்போம்’ என்று சொல்லப்பட்டதாம். பதிலுக்கு விஜயகாந்த் தரப்பில், ‘ராஜ்யசபா அவசியம் வேண்டும். எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராஜ்யசபாவுக்குத் தேர்வுசெய்யப்பட்டால்தான் எதிர்காலத்தில் லாபி செய்ய முடியும்’ என்று வெளிப்படையாகவே ஸ்டாலினிடம் கேட்கப்பட்டதாம். சில நொடிகள் யோசித்த ஸ்டாலின், ‘கனிமொழியின் ராஜ்யசபா சீட்டை உங்களுக்கு ஒதுக்குகிறோம்’ என்று கேரண்டி கொடுத்திருக்கிறார்...”

- பல மாதங்களாகப் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் மீண்டும் துருப்புசீட்டாக மாறியிருக்கிறது. அந்தக் கட்சி எப்படியும் அ.தி.மு.க கூட்டணிக்குள் வந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இன்னும் விஜயகாந்த் தரப்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ‘மதில் மேல் பூனை’ நிலை. தேமுதிகவை வளைக்க மேற்கொள்ளப்படும் வேலைகள் மட்டுமின்றி, திமுக கூட்டணியிலும் அதிமுக கூட்டணியிலும் நடந்து வரும் உள்விவகாரங்களை 'கனிமொழி சீட் உங்களுக்கு! - கேப்டனுக்கு ஸ்டாலின் கேரண்டி' எனும் தலைப்பில் அள்ளித் தந்திருக்கும் ஜூனியர் விகடனின் மிஸ்டர் கழுகு பகுதியை முழுமையாக வாசிக்க: https://bit.ly/2T06jbj

> ஜூனியர் விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://bit.ly/2Vql83D

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://bit.ly/2Xq2Z7I

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

முகிலனை காவல் துறை கடத்தியதா?

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் மாயமாகி பத்து நாள்களுக்கும் மேலாகிவிட்டன. அதற்கு அவரது சொந்தப் பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இதனால், அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான தீவைப்புச் சம்பவத்தில் போலீஸ் உயரதிகாரிகளுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களுடன் ஆவணப்படம் ஒன்றை முகிலன் வெளியிட்டார். அதை வெளியிட்ட மறுநாளிலிருந்து அவர் மர்மமான முறையில் மாயமானார். அவர் போலீஸாரால் கடத்தப்பட்டார் என்று முகிலன் தரப்பினரும், தனிப்பட்ட காரணங்களால் தலைமறைவாகியிருக்கலாம் என்று போலீஸ் தரப்பிலிருந்தும் தகவல்கள் வருகின்றன. 

முகிலனின் மனைவி பூங்கொடியோ, “அரசும் ஸ்டெர்லைட் நிறுவனத்தினரும்தான் என் கணவரை ஏதோ செஞ்சிருக்காங்க. ஆனா, சில பேரு என் கணவர் சொந்தப்பிரச்னை காரணமா தலைமறைவா இருக்குறதா சொல்றாங்க. சிலர் என் கணவருடன் வேலை பார்த்துக்கொண்டே, ஆலை நிர்வாகத்திடமிருந்து பணம்பெற்றுக்கொண்டு அவருக்கு எதிரா செயல்படுறாங்க. இதை என்னால ஆணித்தரமா சொல்லமுடியும். சொந்தப் பிரச்னைக்காக ஓடி ஒளிகிற கோழை என் கணவர் அல்ல” என்றார்.

இந்தச் சூழலில் பலதரப்புகளில் விசாரித்து, இதுவரையிலான நிலவரத்தைச் சொல்லும் ஜூனியர் விகடனின் 'முகிலனுக்கு என்ன ஆனது? - தலைமறைவானாரா? காவல் துறை கடத்தியதா?' எனும் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

>  ஜூனியர் விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க க்ளிக் செய்க...

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://bit.ly/2Xq2Z7I

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

நடிகர் விஜய் பெயரைச் சொல்லி மாமூல்!

திருவண்ணாமலை, தியாகி அண்ணாமலை நகர்ப் பகுதியில் உள்ளது அரசு உழவர் சந்தை. 1999-ல் தொடங்கப்பட்ட இந்த உழவர் சந்தை வளாகத்தில் 107 கடைகள் உள்ளன. தினமும் ஐந்து லட்ச ரூபாய் அளவுக்கு, காய்கறி வியாபாரம் நடக்கிறது. 64 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இங்கு கடைபோடுகிறார்கள். அந்த விவசாயிகள்தான், ‘விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பாரதிதாசன், மாமூல் கேட்டு எங்களை மிரட்டுகிறார்’ எனப் புகார் வாசிக்கிறார்கள்.

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

நம்மிடம் பேசிய சில விவசாயிகள், “உழவர் சந்தையில் கடைபோடுற விவசாயிகளை மிரட்டி, வாராவாரம் மாமூல் வாங்குவதுதான் பாரதிதாசனோட வேலை. இதுக்காக அடியாள்களையும் வெச்சுருக்கார். மாமூல் கொடுக்க மறுத்தா கடையைக் காலி பண்ணிடுவேன்னு அடியாள்கள் மிரட்டுறாங்க. அதற்குப் பயந்து மாமூல் கொடுக்க வேண்டியதாயிருக்கு. வார மாமூல் தவிர விஜய் பிறந்தநாளுக்கும், விஜய் படம் ரிலீஸாகுறப்பவும் விஜய்க்கு கட் அவுட் வைக்கப் பணம் கேட்டு மிரட்டுறாங்க. எந்தக் கோயில்ல திருவிழா நடந்தாலும் நோட்டைத் தூக்கிட்டு வந்து டொனேஷன் கேட்டு மிரட்டுறாங்க. சந்தையில கூழ் விற்பனை செய்ற பாட்டிகிட்டகூட மிரட்டி மாமூல் வாங்குறாங்க” என்றனர். 

- இதுகுறித்து களத்தில் விசாரித்து ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள 'நடிகர் விஜய் பெயரைச் சொல்லி மாமூல்... - புலம்பும் விவசாயிகள்!' எனும் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க: https://bit.ly/2GORjGv

>  ஜூனியர் விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:   https://bit.ly/2Vql83D

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://bit.ly/2Xq2Z7I

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

விருந்தில் கரைந்த பகை!

அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஏற்பட்டு கணிசமான தொகுதிகளைப் பெற்றதைவிட, அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் தங்களுக்குமான 13 ஆண்டுப் பகை, முடிவை எட்டியதற்காக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது பா.ம.க.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு எடப்பாடி பழனிசாமியிடம் ராமதாஸ், “தைலாபுரம் தோட்டத்தில் உங்கள் முன்னிலையிலேயே அன்புமணி - சி.வி.சண்முகம் சமாதானச் சந்திப்பு நிகழ வேண்டும். அப்போதுதான் இரு தரப்பு தொண்டர்களும் சமாதானமடைந்து வேலைப் பார்ப்பார்கள்” என்றாராம். அதன் அடிப்படையில் நிகழ்ந்ததுதான், தைலாபுரம் தோட்டத்துச் சந்திப்பு.

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

விருந்தில் கேசரி, பாயசத்துடன் 21 வகை சைவ உணவு வகைகள் தயார் செய்யப் பட்டிருந்தன. முதல்வரும் அமைச்சர்களும் சுமார் ஒருமணி நேரம் விருந்தைச் சாப்பிட்டுச் சிறப்பித்தார்கள். 

- 2006 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் சி.வி.சண்முகமும், பா.ம.க சார்பில் கருணாநிதி என்பவரும் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால், சி.வி.சண்முகத்தின் வீட்டுக்குள் நுழைந்த மர்மக் கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது. இதில் சி.வி.சண்முகம் காரின் கீழ் படுத்துத் தப்பிவிட, அவரின் மைத்துனர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். ‘என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டது ராமதாஸும், அன்புமணியும்தான்’ என்று நேரடியாகவே குற்றம்சாட்டினார் சி.வி.சண்முகம். சி.பி.ஐ வரை சென்ற அந்த வழக்கிலிருந்து ராமதாஸ் மற்றும் அன்புமணி பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் தைலாபுரம் விருந்து முக்கியத்துவம் பெறுகிறது. அந்த விருந்தில் நடந்தவற்றை விசாரித்து, ஜூனியர் விகடன் விவரித்திருக்கும் 'தைலாபுரம் விருந்தில் கரைந்த சி.வி.சண்முகம்' என்ற செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க: https://bit.ly/2XtwmWH

>  ஜூனியர் விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:   https://bit.ly/2Vql83D

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://bit.ly/2Xq2Z7I

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

காமமும் கற்று மற!

பொதுவாகவே, ஆண்களுக்கு விரைவில் உணர்ச்சி உண்டாகி, விரைப்பு ஏற்பட்டுவிடும். மோகமும் விரைவாகத் தீர்ந்துவிடும். பெண்கள் நிலையோ அப்படியே தலைகீழ். தாமதமாக உணர்ச்சி தூண்டப்படும்; உச்சமும் தாமதப்படும். இதைச் சமன் செய்ய, செக்ஸ் முன் விளையாட்டுகள் (Foreplays) அவசியம். விரைப்புத் தன்மை குறைவால், உச்சம் தொடுவதற்கு முன்னரே ஆண் செயல்படாமல், உறவு பாதியில் தடைப்பட்டால் தாம்பத்யம் கசந்துவிடும்.

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

உடல் சார்ந்தது, மனம் சார்ந்தது என இரு காரணங்களால் விரைப்புத் தன்மை குறைபாடு உண்டாகலாம். தகுந்த பரிசோதனைகள் மூலம் அதைக் கண்டறிந்து, சிகிச்சையளித்தால் குணப்படுத்திவிடலாம். செல்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதைச் சரிசெய்யலாம். அளவுக்கு மீறிய மது, புகைபிடித்தல், டெஸ்டோஸ்டீரான் குறைபாடுகள், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் தொடர்பான நோய்களாலும், அவற்றுக்காகச் சாப்பிடும் மருந்துகளாலும் விரைப்புக் குறைபாடு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 

- ஆண்களின் விரைப்புத் தன்மை குறித்த தவறான புரிதல்களைத் தகர்த்து, உரிய விழிப்பு உணர்வை தரும் டாக்டர் விகடனின் 'காமமும் கற்று மற!' தொடர் பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

> டாக்டர் விகடன்  இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:   https://bit.ly/2E4jA8s

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://bit.ly/2Xq2Z7I

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனத்துக்கு...

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின், பொதுமக்கள் கைவசம் இருந்த பணம் வங்கியின் இருப்பாக மாறியது. வங்கித் துறையில் வந்து சேர்ந்த பணம், ஒட்டுமொத்தக் கடன் சந்தையில், வட்டி விகிதத்தைப் பெருமளவு குறைத்தது. ஒட்டுமொத்தக் கடன் சந்தையில் கடன் பெறும் தகுதியுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கும், தரநிர்ணயம் பெற்ற பெரு நிறுவனங்களுக்கும், குறைந்த வட்டியில் கடன் கிடைத்தது. இதனால் கடன் சுமை பெருமளவு குறைந்தது. லாபமும் உயர்ந்தது.

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

ஆனால், சமீப காலமாக, பொதுமக்கள் வங்கி இருப்பை ரொக்கமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டதும், கடன் சந்தையில் பணத் தட்டுப்பாடு ஏற்பட முக்கியக் காரணமாக அமைந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம், மத்திய மாநில அரசாங்கங்கள் அதிகமாகக் கடன் வாங்கியது, ரூபாய் மதிப்பு குறைவைத் தடுப்பதற்காக மத்திய ரிசர்வ் வங்கி சந்தையில் டாலர்களை விற்பனை செய்தது போன்ற காரணிகளும் நிதிச் சந்தையில் பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தின. பணத் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக மத்திய வங்கி மேற்கொண்ட சந்தை நடவடிக்கைகள் (Buy Back) தற்காலிகத் தீர்வை மட்டுமே தரமுடிந்தது....

- நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு நிதி முடிவுகள் வெளியாவது ஏறக்குறைய முடிவுக்கு வந்திருக்கிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஏராளமான நிறுவனங்கள் அதிகமான விற்பனையைப் பெற்றிருந்தாலும், குறைவான லாபத்தை அல்லது இழப்பையே சந்தித்திருக்கின்றன. இதனால் அந்த நிறுவனப் பங்குகளின் விலையும் சந்தையில் சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிறுவனங்களின் திடீர் தடுமாற்றத்திற்கான காரணங்களை துறை வாரியாக அலசுகிறது 'மூன்றாம் காலாண்டு... கம்பெனிகளின் குறையும் லாபம்... சந்தை இன்னும் இறங்குமா?' எனும் நாணயம் விகடன் கவர் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க....

> நாணயம் விகடன்  இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:   https://bit.ly/2H5zbHZ

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://bit.ly/2Xq2Z7I

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

கடைசி நேர வரிச் சேமிப்பு... உஷார்!  

சிலருக்கு வருமான வரியை சேமிக்க முதலீடு செய்ய போதுமான தொகை கையில் இருக்காது. அதுபோன்றவர்களுக்கு ஏஜென்ட்டுகள் நமக்குத் தெரிந்தவர் இருக்கிறார், குறைவான வட்டிதான், கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி, கடன் வாங்க வைத்து முதலீடு செய்ய வைப்பதும் நடக்கிறது. வேறு சிலர், ஏற்கெனவே யூலிப் பாலிசி எடுத்திருப்பார்கள். அதில், பகுதித் தொகையை எடுக்கும் வசதி இருக்கிறது. அதனை எடுத்து அதே பாலிசியில் டாப்அப் செய்யும்போது வரிச் சலுகை கிடைக்கும். 

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

இப்படிச் செய்வதில் தவறு இல்லை. இதற்குப் பதில், இந்தத் தொகையை கொண்டு புதிய யூலிப் பாலிசிக்கு பிரீமியம் கட்டுவதாக இருந்தால் பாலிசி எடுப்பவருக்கு லாபகரமாக இருக்காது. அது ஏஜென்ட்டுக்குதான் லாபமாக இருக்கும். இதுபோன்ற சூழலைத் தவிர்த்துவிடலாம்.

- நம்மில் பெரும்பாலோர் வருமான வரியைச் சேமிப்பதற்கான முதலீட்டை பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் யோசிக்க ஆரம்பிக்கிறோம். கடைசி நேரத்தில் செய்யப்படும் முதலீடுகளில் பல தவறாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது. இதைத் தவிர்ப்பதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்குகிறது 'கடைசி நேர வரிச் சேமிப்பு... பதற்றம்... சிக்கல்... உஷார்!' எனும் நாணயம் விகடன் சிறப்பு கைடன்ஸ் கட்டுரை முழுமையாக வாசிக்க: https://bit.ly/2T1kop1

> நாணயம் விகடன்  இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:   https://bit.ly/2H5zbHZ

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://bit.ly/2Xq2Z7I

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

சிவராத்திரியில் கண்விழித்து பூஜிப்பது ஏன்?

உலகின் ஜீவாத்மாக்கள், பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவோடு எப்போதும் எங்கும் தொடர்பில் இருக்கின்றன. குறிப்பாக  உடலின் அத்தனை ஆதார சக்கரங்களும் விழித்துக் கொள்ள...  ஆன்ம சக்தி இறை சக்தியோடு எழுச்சியுடன் இணைய உகந்த காலம் சிவராத்திரி என்கின்றன ஞானநூல்கள். ஆகவே,   அந்தப் புண்ணிய தருணமான சிவராத்திரி இரவில் தூங்காமல்  விழித்திருக்க வேண்டும் என்கிறார்கள், அனுபவித்து உணர்ந்த ஆன்மிகச் சான்றோர்கள். படுத்திருக்கும் நிலையில் ஆதார சக்தியின் இருப்பிடமான முதுகுத்தண்டு மண்ணில் கிடந்தால், ஜீவசக்தி விழித்துக்கொள்ளாது. ஆகவே, அன்று முழுவதும் அமர்ந்திருக்க வேண்டுமாம். 

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

`படுக்காமல் அமர்ந்திருக்கவேண்டும்’ என்று வெறுமனே கூறினால், சொல்பேச்சு கேட்காது மனித மனம். ஆகவேதான், `சிவலிங்க பூஜை செய் நன்மை உண்டாகும்’ என்று கூறி, சிவராத்திரி புண்ணிய தினத்தில் சகல உயிர்களையும் விழித்திருக்க வழிவகை செய்திருக்கிறார்கள் முன்னோர்கள். ஆம், உன்னதமான வரத்தைப் பெற உயர்வானதொரு வழிகாட்டலைச் சொல்லியிருக்கிறார்கள் என்றே கருதவேண்டும். தத்துவங்கள் கதைகளாகச் சொல்லப் பட்டன. பாற்கடல் கடையப்பட்ட சிவராத்திரியில் சிவனைப் பூஜித்தால் அமுத நிலை வாய்க்கும் - ஆயுள் பெருகும், சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது புராணங்கள் சொல்லும் தகவல்.

- இதுபோலவே மகா சிவராத்திரியின் தத்துவம், ஏகாம்பரநல்லூரில் வழிபாடு ஏன்?, வழிபாட்டின் சிறப்பம்சங்கள் என சிவராத்திரியின் அத்தனை அம்சங்களை அள்ளி வழங்கும் சக்தி விகடனின் 'ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்!' எனும் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

> சக்தி விகடன்  இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:   https://bit.ly/2VnidIN

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://bit.ly/2Xq2Z7I

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

ஃப்ளாஷ்பேக்: மனைவி சொல்லே மந்திரம்!

கடந்த ஒரு மாத காலமாக அனைத்துக் கட்சிகளுக்கும் அல்வா கொடுத்துவந்த விஜயகாந்த், 'அத்தனைக்கும் விடையை உளுந்தூர்பேட்டையில் வைத்துச் சொல்வேன். அதுவரை காத்திருங்கள்’ என்றார். உளுந்தூர்பேட்டை மாநாடும் வந்தது. பேச மைக் பிடித்ததில் இருந்தே வாட்ச் பார்க்க ஆரம்பித்தார். ''10 மணிக்குள் பேசி முடிக்க வேண்டும். இல்லையென்றால் போலீஸ் வழக்கு போட்டுவிடுவார்கள். என் சினிமா வாழ்க்கையில் அதிகப்படியான தடவை போலீஸ் அதிகாரியாகத்தான் நடித்தேன். அதற்காக இப்போது வெட்கப்படுகிறேன்; வேதனைப்படுகிறேன். இந்த மாதிரி நடந்துகொள்வதற்குப் பதில், அவர்கள் தூக்கு போட்டுச் சாகலாம்'' என்று போலீஸாரை சாபம் விடுவதற்காகவே மாநாடு நடத்தியவரைப் போல, 10 நிமிடத்துக்கு ஒரு முறை அவர்களைக் கொட்டியபடியே இருந்தார்.

விகடன் போஸ்ட்: துருப்புச்சீட்டு தேமுதிக, முகிலன் மாயம், விஜய் பெயரில் மாமூல்

'கூட்டணி வெச்சுப் போட்டியிடலாமா?’ என்று கேட்டார். கும்பல் கத்தியது. அடுத்து, 'தனியாகப் போட்டியிடலாமா?’ என்று கேட்டார். கும்பல் இன்னும் கூடுதலாக கத்தியது. ''பாருங்க! இதுக்குதான் அதிகமாக் கைதட்டுறாங்க... எல்லாரும் பாருங்க'' என்று கூட்டத்தைப் பார்த்துக் கைகாட்டினார். 'எல்லாரும் தனியாத்தான் நிற்கணும்னு சொல்றாங்க’ என்று சொல்லிக்கொண்ட விஜயகாந்த், அடுத்து உஷார் ஆனார். ''ஆனால் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அவங்க ஏத்துப்பாங்க'' என்று சொல்லிவிட்டு, ''எல்லோரும் அமைதியாக வீட்டுக்குப் போங்க. பாதுகாப்பாக போய்ச் சேருங்க'' என்று அனைவரையும் வழி அனுப்பிவைத்தார்.

இப்படி ஒரு காட்சியை விஜயகாந்த் அரங்கேற்றிக்கொண்டு இருந்தபோது, அவரது மனைவியும் கட்சியின் வழிகாட்டுநருமான பிரேமலதா, அமைதியாகச் சிரித்தபடி விஜயகாந்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணி வைத்துப் போட்டியிடுவதா என்று கருத்துச் சொல்லும் அதிகாரம், மேடையில் இருப்பவர்களுக்கு இல்லை போலும். அனைவருமே அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களில் சிலர் வேட்பாளர்கள் ஆகலாம் என்பதால் பயத்தோடும் காணப்பட்டார்கள்...

- தற்போது தேமுதிக எந்தப் பக்கம் சாயும் எனும் மில்லியன் டாலர் கேள்வி நம்மைக் குடைந்துவரும் சூழலில் 2014 மக்களவைத் தேர்தல் காலத்துக்குச் சென்று, ஆனந்த விகடனில் வெளியான 'மனைவி சொல்லே மந்திரம்!' எனும் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

> ஆனந்த விகடன்  இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:   https://bit.ly/2GVIzxI

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://bit.ly/2Xq2Z7I