கே.டி.எம்-க்குப் போட்டியாக CFMoto 250NK... என்ன எதிர்பார்க்கலாம்?! | CFMoto 250NK Spotted on Indian Roads.... To Rival KTM Duke!

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (28/02/2019)

கடைசி தொடர்பு:18:43 (28/02/2019)

கே.டி.எம்-க்குப் போட்டியாக CFMoto 250NK... என்ன எதிர்பார்க்கலாம்?!

250NK பற்றி CFMoto நிறுவனத்திடம் கேட்டால், `Perfect for the Urban Commuter or Learner Rider' என உடனடியாகப் பதில்வருகிறது.

CFMoto 250NK... சர்வதேச பைக் சந்தைகளில் ஏற்கெனவே அறிமுகமான இந்த நேக்கட் பைக், விரைவில் இந்தியாவில் டயர் பதிக்கவிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இதன் விலை 3,990 டாலர்! இந்திய மதிப்பில் 2.01 லட்சம் ரூபாய்! இந்த பைக் தெலங்கானாவில் டெஸ்ட்டிங்கில் இருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், ஒசூரைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான நித்திஷ்.

கேடிஎம் டியூக் 250, ஹோண்டா CB300R, பஜாஜ் டொமினார் 400 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக 250NK வெளிவரலாம் எனத் தகவல். `CFMoto... இந்தச் சீன பிராண்ட் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!' என்கிறீர்களா... ஆம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Eider Motors எனும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, நம் ஊரின் போட்டிமிகுந்த டூ-வீலர் சந்தையில் ஸ்கூட்டர், பைக் எனப் பல ஆப்ஷன்களுடன் களமிறங்கியது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென இந்தியக் கூட்டாளி நிதிநெருக்கடியால் மூடுவிழா கண்டதுடன், மோசடி வழக்கில் Eider Motors-ன் நிறுவனர், அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். 

CFMoto

250NK பற்றி CFMoto நிறுவனத்திடம் கேட்டால், ``Perfect for the Urban Commuter or Learner Rider'' என உடனடியாகப் பதில்வருகிறது. இந்த நேக்கட் பைக் இந்தியாவில் டெஸ்ட் செய்யப்படுவதால், ஒருவேளை புதிய கூட்டணியுடன் CFMoto மீண்டும் அறிமுகமாகும் முடிவில் இருக்கிறதா என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. 250NK என்ற பெயருக்கு ஏற்ப, இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 249சிசி - சிங்கிள் சிலிண்டர் - DOHC - 4 வால்வ் - லிக்விட் கூல்டு - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆகியவற்றைக்கொண்டிருக்கும் இன்ஜின், ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 26.5bhp@9,000rpm பவர் மற்றும் 2.2kgm@7,500rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 250NK பைக்கின் டாப் ஸ்பீடு 128கிமீ என்கிறது CFMoto. டிரெல்லிஸ் ஃப்ரேமில் இன்ஜின் தவிர, USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் சேர்க்கப்பட்டிருக்கிறது. முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 245மிமீ டிஸ்க் என பிரேக்ஸ் இடம்பெற்றுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் உண்டு. 

250NK

கட்டுமஸ்தான 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைக்கொண்டிருக்கும் CFMoto 250NK பைக்கின் சீட் உயரம் 795மிமீ - வீல்பேஸ் 1,360மிமீ - எடை 151 கிலோ. ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, அசப்பில் கேடிஎம் டியூக் சீரிஸ் பைக்குகளை நினைவுபடுத்தும்படியான டிசைனைக்கொண்டிருந்தாலும், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் - வலதுபுறத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பு - ஸ்டார் வடிவ ஸ்போக்குகளைக்கொண்ட அலாய் வீல்கள் எனச் சின்னச் சின்ன வித்தியாசங்கள் 250NK பைக்கில் தெரிகின்றன. ஆனால், டியூக் போலவே ஹெட்லைட் - இண்டிகேட்டர்கள் - டெயில் லைட் என அனைத்தும் LED மயமாக இருப்பதுடன், TFT டிஸ்பிளே உடனான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருப்பது செம! மேலும், இன்ஜினுக்கு அடியே எக்ஸாஸ்ட் - ஸ்ப்ளிட் சீட் - Machined ஸ்விங்ஆர்ம் - பின்பக்க Tyre Hugger - அலாய் Foot Pegs - Backlit ஸ்விட்ச்கள் எனப் பல ஒற்றுமைகள் தெரிகின்றன. First In Class சிறப்பம்சமாக, Rain - Sport என டிரைவிங் மோடுகள் இருப்பது பெரிய பிளஸ். பைக்கின் விலை 2.2 லட்சமாக இருக்கலாம்!

KTM Duke, CB300R, Dominar 400

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close