Published:Updated:

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!
விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!
விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

`எங்கள் தேசபக்தியைக் கொச்சைப்படுத்தாதீர்!'

ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடந்த இந்தச் சமயத்தில், தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறீர்களே, நியாயம்தானா?

``தாக்குதலின் காரணமாக, நாடே பதற்றத்தில் இருந்தபோது, எங்களுடைய கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் அஞ்சலி நிகழ்ச்சிகளாக மாற்றினோம். ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சியைக் கூட ரத்து செய்திருக்கிறோம். நாட்டுக்காக உயிர் துறந்த ஜவான்கள் வீட்டுக்குச் சென்று உணர்வுபூர்வமாக ஆறுதல் தெரிவித்து வந்தோம். பி.ஜே.பி என்ன செய்தாலும் தவறாகவே பார்க்கிறார்கள். எங்கள் தேசபக்தியைக் கொச்சைப்படுத்தாதீர்கள்."

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

அ.தி.மு.க-வை மிரட்டிதான் கூட்டணிக்குப் பணிய வைத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?

``நாங்கள் நட்பு ரீதியாகவே அ.தி.மு.க–வுடன் பழகி வருகிறோம். அ.தி.மு.க–வை மிரட்ட வேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. மோடி சொன்னதாகச் சொல்லித்தான், எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்தார். அதில் உங்களுக்கு என்ன பிரச்னை? மூத்த தலைவர் என்ற முறையில் ஆலோசனை சொல்வதுகூடத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால் என்னதான் செய்வது?

- அ.தி.மு.க கூட்டணியில் ஐந்து சீட்டுகள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் தமிழிசை செளந்தரராஜன். வழக்கமாகவே பா.ஜ.க மீது விமர்சனங்கள் அதிகம். தேர்தல் நேரத்தில் அது இன்னும் அதிகம். எல்லா விதமான கேள்விகளையும் எதிர்கொண்ட தமிழிசையின் ```சமீபகாலமாக அ.தி.மு.க நல்லாட்சி நடத்துகிறது!" எனும் ஆனந்த விகடன் பேட்டியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க..

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!


ஓரங்கட்டப்படுகிறாரா தம்பிதுரை?

``பி.ஜே.பி-க்கு எதிராக அ.தி.மு.க-வின் தம்பிதுரை, கடுமையான விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்துவந்தார். அது, பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய குடைச்சலாக இருந்தது. எனவே, அ.தி.மு.க தலைமை மூலம் நெருக்கடி கொடுத்தும், பி.ஜே.பி-க்கு எதிரான தாக்குதலை தம்பிதுரை குறைக்கவில்லை. எனவே, அவரை ஆஃப் செய்யவே கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்குமாறு, சின்னதம்பிக்கு பி.ஜே.பி அறிவுறுத்தியதாகத் தகவல் பரவியது. `குட்கா வழக்கு விவகாரம் புஸ்வானமாகும்' என்று விஜயபாஸ்கருக்கு பி.ஜே.பி தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டு, அதற்குக் கைமாறாக சின்னதம்பியை சீட் கேட்க வைத்திருக்கிறார்கள்..." 

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

- தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கும் விவகாரம் கரூர் அரசியல் வட்டாரத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது. தங்களைக் கடுமையாக விமர்சனம் செய்துவந்த தம்பிதுரைக்கு செக் வைக்கவே, தம்பிதுரையின் தொகுதியான கரூரில் சின்னதம்பியை சீட் கேட்டுப் பணம் கட்டுமாறு அ.தி.மு.க தலைமை மூலமாக பி.ஜே.பி வலியுறுத்தியது என்ற தகவல் கரூரில் பரபரக்கிறது. இது தொடர்பான பின்னணி மற்றும் உள்ளரசியலை விவரிக்கும் `களமிறங்கும் விஜயபாஸ்கரின் தந்தை... ஓரங்கட்டப்படுகிறாரா தம்பிதுரை?' ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு!

கருணாஸ், தலைவர், முக்குலத்தோர் புலிப்படை: ``மத்திய பி.ஜே.பி அரசு தொடர்ந்து, தமிழர் நலனுக்கு எதிராகவே செயல்பட்டுவருகிறது. அதனால்தான் ஜெயலலிதா, இறக்கும்வரை பி.ஜே.பி-யை எதிர்த்தார். அந்த பி.ஜே.பி-யுடன் இப்போதைய அ.தி.மு.க அரசு கூட்டணி வைத்திருப்பது அம்மாவுக்குச் செய்யும் துரோகம்..."

தனியரசு, தலைவர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை: ``பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, பி.ஜே.பி போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்குப் பிரசாரம் செய்யமாட்டோம்..." 

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!


  
தமிமூன் அன்சாரி, தலைவர், மனித நேய ஜனநாயகக் கட்சி: ``தமிழர் நலன் என்ற கொள்கைக்கு எதிரான நிலையில் செயல்பட்டுவரும் பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க கூட்டுவைத்திருப்பது எங்களுக்குப் பேரதிர்ச்சிதான்..."

- தமிழகத்தில் அமைந்திருப்பது, 'பி.ஜே.பி கூட்டணியா... அ.தி.மு.க கூட்டணியா...' என்கிற கேள்விக்கே விடை தெரியவில்லை. இந்த நிலையில், `அ.தி.மு.க கூட்டணியிலேயே தொடர்வதா அல்லது வெளியேறுவதா...' என்று குழம்பித் தவிக்கின்றனர் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினரான கருணாஸ், தனியரசு, தமிமூன் அன்சாரி. சரி, என்ன சொல்கிறார்கள் இவர்கள்? ஜூனியர் விகடனிடம் பகிர்ந்த இவர்களது பார்வையை 'அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு! - குழப்பியடிக்கும் கூட்டணிக் கட்சிகள்' எனும் செய்திக் கட்டுரையில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

``திருந்தியவர்களுக்கு நன்றி!"

``இடைவெளியே இல்லாம, ஷூட்டிங்ல பிஸியா இருப்போம்னு என்னைக்காச்சும் நினைச்சிருக்கீங்களா?" 

``நான் நடிச்ச காட்சிகளுக்கு மக்கள் சிரிச்சு கை தட்டுறதைப் பார்த்திருக்கேன். 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தியேட்டர்ல பார்க்கிறப்போ, ஜெர்க் ஆகிட்டேன். காரணம், என் என்ட்ரிக்கு மொத்தத் தியேட்டரும் கை தட்டி, விசில் அடிச்சு என்ஜாய் பண்ணுனாங்க. 'ரைட்டு... மக்கள் நம்மளையும் கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனிமே ரொம்ப ஜாக்கிரதையா நடிக்கணும்'னு தோணுச்சு. என்னை இந்தளவுக்கு ரசிப்பாங்கன்னு நான் நினைச்சதில்லை. ஆனா, 15 வருடம் ஓடியாடி அலைஞ்சதுக்கு பதில் கிடைக்காம இருக்காதுன்னு நினைச்சிருக்கேன். அந்தப் பதில்தான், மக்களோட கைத்தட்டலா எனக்குக் கிடைக்குது." 

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

`` `பரியேறும் பெருமாள்' படம் பேசுன அரசியலை, நிஜ வாழ்க்கையோட தொடர்புபடுத்திப் பார்த்தீங்களா?" 

``அப்படியே கம்முனு போயிடணும்னு தோணுது. ஒண்ணு சொல்லி எல்லாமே சரியா நடந்தா, போராடலாம். இங்கேதான் எல்லாமே வேறமாதிரி இருக்கே! அதனால, அது எதிலும் நான் தலையிட மாட்டேன். அந்தப் படத்துல கதிர் கடைசியா, `நீங்க நீங்களா இருக்கிற வரைக்கும், நான் நாயாதான் இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கிற வரைக்கும் இங்கே எதுவும் மாறாது'ன்னு சொல்வார்ல, அதுதான் விஷயம். இதைப் பார்த்துட்டு யாராவது மாறியிருந்தா, அவங்களுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன்."  

- குறுகிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்கள். ஓடி ஓடி நடிக்கும் யோகி பாபுவின் விரிவான ஆனந்த விகடன் பேட்டியையும், நெட்டிசன்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த நறுக் பதில்களையும் வாசிக்க க்ளிக் செய்க....

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

அரசியலில் அமைச்சரின் பெண் வாரிசு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் தங்களின் வாரிசுகளை அரசியலில் களம் இறங்கி வருகின்றனர். இந்த வரிசையில் கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் மகன் பிரவீன், தந்தைக்கு உதவியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன், பிரவீனின் பிறந்த நாள் கட்சியினரால் கடலூர், பண்ருட்டி பகுதிகளில் நலத்திட்ட உதவிகளுடன் தடபுடலாகக் கொண்டாடப்பட்டது. கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட பிரவீன் பெயரில் கட்சிக்காரர்கள் பலர் விருப்ப மனு அளித்துள்ளனர். 

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாசிமகத் திருவிழாவில் கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை அமைச்சர் எம்.சி சம்பத்தின் மகள் திவ்யா தொடங்கி வைத்துள்ளார். ஏற்கெனவே அமைச்சரின் மகன் பிரவீன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், மகளின் இந்த அரசியல் பிரவேசம் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- இது மட்டுமா? `செங்கோட்டையனின் ஆசை என்ன?', `தினகரனின் ஆயுதம்', `ஓட்டு வாங்க மருத்துவக் குழு', `தேனியில் போட்டியிடுவாரா ஓ.பி.எஸ் மகன்?', `திருச்சி யாருக்கு?' என தேர்தல் களம் சார்ந்த சுவையான தகவல்களைத் தொகுத்துத் தரும் ஜூனியர் விகடனின் 'மினி மீல்ஸ்' பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

உறவுகள்... உணர்வுகள்...

`கணவர் என்னுடன் தாம்பத்ய உறவே வெச்சுக்கிறதில்லை', `மனைவி என்னைத் தவிர்க்கிறாள்' எனச் சொல்லிக்கொண்டு விவாகரத்து கோருபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அந்தக் கணவருக்கு ஆண்களிடம் மட்டும் ஈர்ப்பு இருக்கலாம். மனைவிக்குப் பெண்களிடம் மட்டும் ஈர்ப்பு இருக்கலாம். இந்த உறவு சமூகத்துக்குப் புறம்பானது என்று சொல்லப்பட்ட காலம் மாறிவிட்டது. இவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டியதில்லை. தன்பாலின ஈர்ப்பு என்பது இன்று பரவலாகப் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட ஈர்ப்பு உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி, திருமண பந்தத்துக்குள் தள்ளும்போது அவர்களுக்குள் உறவுச்சிக்கல் வரும்...

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

துணையைத் தாண்டிய வேறொருவருடன் உறவு ஏற்படுவதால் முடிவுக்கு வரும் திருமண உறவுகளின் எண்ணிக்கையும் இன்று அதிகரித்திருக்கின்றன. திருமண உறவு சரியாக அமையாதபட்சத்தில் அப்படி இன்னொருவருடன் உறவு ஏற்பட்டால், திருமண உறவிலிருந்து வெளியேறி விடுங்கள்.  அதே நேரம் அந்தத் தகாத உறவுதான் உங்கள் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்படவே காரணம் என்றால், அது நியாயமானதல்ல. தகாத உறவிலிருந்து உடனடியாக வெளியே வாருங்கள்...

- நாளுக்குநாள் விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பிரிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிற விஷயங்கள் அற்பத்தனமாக இருப்பதை, தான் சந்தித்த வழக்குகளின் உதாரணங்களோடு அவள் விகடன் மூலம் முன்வைக்கிறார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி. 'உறவுகள்... உணர்வுகள்...' முழுமையாக வாசிக்க முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

'சொந்த வீடு' கனவு நிஜமாகுமா?

சொந்த வீட்டில் வசிக்கவேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்புதான். 'எலி வளையானாலும் தனி வளை' என்று சொல்வதுண்டு. தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஆனால், ஆசை இருந்தால் மட்டும் போதாது. அவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டுக்கான யோகம் அமையப் பெற்றிருக்க வேண்டும். 

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

கிரகங்களுக்கான வழிபாடுகளைச் செய்வதுபோல், பிறந்த ராசியின் அடிப்படையிலும் உரிய பரிகாரங்களைச் செய்தால் சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும். அவ்வகையில், ராசி ரீதியாக சொந்த வீடு அமைவதற்கான பரிகார வழிபாடுகளைக் குறித்துச் சொல்லும் சக்தி விகடனின் 'சொந்த வீடு கனவு நிஜமாகுமா?' எனும் ஜோதிட பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

விகடன் ஃப்ளாஷ்பேக்: (27/02/2014 ) "ஊருக்கு இளைச்சவன் தி.மு.க-காரன் மட்டும்தானா?" - துரைமுருகன் 

``உங்கக் கூட்டணியில் சேர்க்க விஜயகாந்தை நீங்க கூப்பிட்டுட்டே இருக்கீங்க. அந்தப் பக்கம் பா.ஜ.க-வும் முயற்சி பண்றாங்க. ஆனா, அவர் யாருக்கும் பிடி கொடுக்க மாட்டேங்கிறாரே?''

``ஒரு ஆட்டத்தை அதன் சட்ட திட்டங்களோட ஆடினா, 'அடுத்து இவர் இப்படித்தான் போவார். பந்தை இப்படித்தான் எடுப்பார்'னு நாம கணிக்கலாம். ஆனா, ஆட்டத்தை  ஆட்டமா  ஆடாம வேற மாதிரி ஆடினா நாம என்ன பண்றது? அப்படி ஆடறது ராஜதந்திரம்னு நினைக்கிறார் போல. அதை நாம ஏன் குறை சொல்லணும்?''

விகடன் போஸ்ட்: தமிழிசையின் பார்வை, அமைச்சரின் பெண் வாரிசு, யோகிபாபுவின் கருத்து!

'...தலைமையில் மட்டும் இல்லாமல் மாவட்டங்களிலும் வாரிசுகள் குறுநில மன்னர்களாவது நல்லதா?''

``இதே கேள்வியை டெல்லிக்குப் போய் இந்திரா காந்தி வீட்ல கேட்டுட்டு வாங்களேன். அவ்வளவு தூரம் போகணும்னு யோசிச்சா, இங்கே பக்கத்துலயே மூப்பனார் வீட்ல கேளுங்களேன். ஊருக்கு இளைச்சவன் தி.மு.க-காரன் மட்டும்தானா? அது ஏன் எங்களை மட்டும் விரட்டி விரட்டி இந்தக் கேள்வியைக் கேட்டுட்டே இருக்கீங்க?''

``வாரிசு அரசியல், தி.மு.க. என்ற கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் படைக்கிறதே... அதான் உங்ககிட்ட கேட்கிறோம்!''

``ம்ம்ம்... சப்ஜெக்ட்டுக்கு வந்துட்டீங்க. கேளுங்க... கேளுங்க. வேணாம்னா விடவா போறீங்க!'' என்று சிரிக்கிறார்.

- தற்போது சமூக வலைதளங்களில் 'மாஸ்' காட்டும் அரசியல் முகங்களில் துரைமுருகனுக்குத் தனி இடம் உண்டு. 2014 மக்களவைத் தேர்தல் காலத்தில் அவரது செயல்பாடுகளைத் தேடியபோது, ஆனந்த விகடனில் சிக்கியது அவரது அசத்தல் பேட்டி ஒன்று. 27/02/2014 தேதியிட்ட இதழில் வெளியான "குடும்பத்தைவிட கட்சிதான் பெருசு!" எனும் அந்தப் பேட்டியை முழுமையாக வாசிக்க