Published:Updated:

இப்படித்தான் ஏ.சி. வாங்கணும்! #EssentialSummerTips

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இப்படித்தான் ஏ.சி. வாங்கணும்! #EssentialSummerTips
இப்படித்தான் ஏ.சி. வாங்கணும்! #EssentialSummerTips

இப்படித்தான் ஏ.சி. வாங்கணும்! #EssentialSummerTips

வெயில்காலத்தின் உதயமான மார்ச் மாத துவக்கத்தில் இருக்கிறோம், இப்போதே உச்சி வெயில் நச்சு காட்ட ஆரம்பித்துவிட்டது. இனி பருத்தி ஆடைகள், சன் ஸ்க்ரீன், கூலிங் கிளாஸ், சர்பத்/சோடா/தண்ணீர் என படை பலத்துடன் வெயிலை எதிர்கொள்ள ஆயத்தமாவது முக்கியம். பகலில் இப்படி, இரவிலாவது கொஞ்சம் இதம் காணலாம் என வீட்டுப் பக்கம் ஒதுங்கினாலும் பகல் வெயில் உஷ்ணத்தை கிரகித்திருந்த வீட்டுச் சுவர்கள் மெல்ல மெல்ல அவற்றை வெளிவிடும், அனலில் தூக்கம் பறிபோகும், நம் நிம்மதியும் சேர்ந்துதான்! இதைச் சமாளிக்க வீட்டுக்கு ஏ.சி மாட்ட/மாற்ற இதுவே சரியான நேரம், சமர்த்தாக ஏ.சி வாங்கி உபயோகிப்பது எப்படி? 

இப்படித்தான் ஏ.சி. வாங்கணும்! #EssentialSummerTips

நீங்கள் அறியவேண்டியவை...

* டன்னேஜ் (Tonnage) - அறையின் அளவைப் பொறுத்து எத்தனை டன் ஏசி வாங்கலாம் என முடிவு செய்யவும். 100 - 120 சதுர அடி அளவுள்ள அறைக்கு 1 டன் ஏசியும், 120 - 180 சதுர அடி அளவுள்ள அறைக்கு 1.5 டன் ஏசியும், 180 - 240 சதுர அடி அறைக்கு 2 டன் ஏசி கச்சிதமான பொருத்தமாகும்.

* ஸ்டார் ரேட்டிங் - ஏசிக்கு 5 ஸ்டார் இருந்தால், அது குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் என அர்த்தம். ஆனால் நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே ஏ.சி பயன்பாடு எனும்பட்சத்தில் தாராளமாக 3 ஸ்டார் ஏசியை வாங்கிப் பணத்தை மிச்சப்படுத்தலாம். 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் ஏசியை பயன்படுத்தும்போது நல்ல குளிர்ச்சி கிடைப்பதோடு மின்சார பயன்பாடும் குறைவாக இருக்கும்.

* கம்ப்ரெஸ்ஸர் - ஏசியின் இதயம் கம்ப்ரெஸ்ஸர். கம்ப்ரெஸ்ஸருக்கு அதிக வருட வாரண்டி தரும் பிராண்டுகளை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

* பிராண்ட் - நம்பிக்கையான பிராண்டுகளை தேர்வு செய்வதன் மூலம் நீண்ட நாள் உழைக்கும் ஏசியை வாங்கமுடியும். அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதனம் இது என்பதால் மலிவான பிராண்ட்களை வாங்குவது நல்லதல்ல. ஏசி நன்றாக ஓடினாலும், வருடத்துக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும், எனவே, எந்த பிராண்ட் நல்ல சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டெக்னீஷியன்களைக் கொண்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

* விலை - மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றி எந்த ஏசி நமக்கு சரியானது என முடிவுசெய்தபின் ஓரளவுக்கு அந்த செக்மண்ட்டின் விலையை தீர்மானித்துவிட முடியும். விழாக்காலங்கள், ஸ்டாக் கழிவுகள், ஸ்பெஷல் சம்மர் சேல் போன்ற நேரங்களில் தள்ளுபடியில் ஏசி-க்களை வாங்கலாம். மொத்தமாக பணம் செலுத்தி வாங்க இயலாதவர்கள், சுலப மாதத்தவணை தரும் கடைகளில் ஏசி வாங்கலாம்.

அசத்தும் "Panasonic 1.2 டன் ஏசி"

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஜப்பானின் Panasonic நிறுவனம் 1.2 டன் KU 15VKYF, புத்தம்புது மாடல் 3 ஸ்டார் ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது. 1 டன் ஏசி-க்களைக் காட்டிலும் 20% அதிக கூலிங் மற்றும் ஆற்றலில் சிறந்து விளங்குகிறது இந்த Panasonic ஏசி, ஆனால், இதன் விலையோ கிட்டத்தட்ட 1 டன் ஏசியின் விலைதான்! இதே ரேஞ்சில் 4.20kW கூலிங் கெப்பாசிட்டி கொண்ட ஒரே ஏசியும்இதுதான். பிற ஏசிக்களில் இருக்கும் மாமூலான வசதிகளைத்தாண்டி இந்த ஸ்கோர் செய்யும் இடம் - ஏர் பியூரிஃபிகேஷன். PM 2.5 ஃபில்டர், Catechin ஃபில்டர் மற்றும் Ag க்ளீன் ஃபில்டர் என மூன்றடுக்கு காற்று வடிகட்டிகள் காற்றை சன்னமாக தூய்மைப்படுத்தி வெளியிடுகின்றன.  Panasonic நிறுவனத்தின் நம்பகமான Matsushita பிராண்ட் கம்ப்ரெஸ்ஸர் பத்து வருட வாரண்டியுடன் கிடைப்பதும் பெரும் அனுகூலம்!

இப்படித்தான் ஏ.சி. வாங்கணும்! #EssentialSummerTips

எங்கே வாங்கலாம்?

இப்போதைக்கு Panasonic KU 15VKYF 1.2 டன் ஏசியை பிரத்தியேகமாக 'Darling Electronics' நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் கிளைகள் கொண்ட வீட்டு உபயோகப் பொருள்களை விற்கும் நிறுவனமான Darling Electronics ஆரம்ப விற்பனை சலுகையாக 22% சதவிகித தள்ளுபடியை வழங்குகிறது. ரூ. 47,400 மதிப்புள்ள ஏசியை, இப்போது ரூ. 36,990க்கு வாங்கலாம். வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் & ரூ.1500 மதிப்புள்ள இன்ஸ்டாலேஷன் சேவையை இலவசமாக வழங்குவதோடு, 24 - 48 மணி நேரத்துக்குள் ஏசியை உங்கள் வீட்டில் பொருத்தித் தருகிறது Darling.

மாதத் தவணையில் வாங்க விரும்புவோர் ரூ.9,000/- மட்டும் முன்பணமாக செலுத்தி இப்போதே Panasonic 1.2 டன் ஏசியை வாங்கலாம், மாதத்தவணையாக ரூ.2000 செலுத்தினால் போதுமானது. வெயில்காலத்தை ஒரு கை பார்க்க Panasonic ஏசியை வாங்க நினைக்கிறீர்களா? மேலும் தகவல்களுக்கு, கீழ்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆஃபரைப் பெறலாம்!

விவரங்களைப் பெற

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு