Published:Updated:

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'
விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'
விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

யுத்த சத்தம்! - உண்மை என்ன?

சர்வதேச அளவில் உற்றுக் கவனிக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பரத் தாக்குதல் விவகாரத்தில், வெளிவராத சில விஷயங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து பேசும் மத்திய உளவுத் துறையின் அதிகாரிகள் சிலர், ``இந்திய விமானப் படையின் தாக்குதல், மொத்தம் ஏழு பேருக்கு மட்டுமே தெரிந்து நடைபெற்றது. தேசம் முழுவதும் பாராட்டப்பட்டாலும், இந்தத் தாக்குதலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை" என்கிறார்கள்.  

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை நடத்திய துல்லியத் தாக்குதலில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்திய அரசு இதுவரை இதை உறுதிசெய்யவில்லை.

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

"...ஜெய்ஷ்-இ-முகமதுவின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயிற்சி மையங்கள் குறித்த தகவல்கள் இந்திய உளவு நிறுவனமான 'ரா'விடம் கேட்கப்பட்டன. மறுபுறம், இஸ்ரோவிடம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி மையங்கள் தொடர்பாக சாட்டிலைட் படங்கள் பெறப்பட்டன. அதன்பிறகு, பிப்ரவரி 18-ம் தேதி இரவு பிரதமர் மோடியின் வீட்டில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முப்படைத் தளபதிகள், 'ரா' உயர் அதிகாரி, ஐ.பி தலைவர் உட்பட ஏழு பேர் மட்டுமே கலந்துகொண்டனர். அப்போது பிரதமர், 'ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது சாத்தியமா?' என முப்படைத் தளபதிகளிடம் கருத்து கேட்டுள்ளார்..." 

- இதையொட்டி மேலும் பல தகவல்களைத் தரும் ஜூனியர் விகடனின் 'யுத்த சத்தம்! - உண்மை என்ன?' எனும் கவர் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

யுத்தமும் ரத்தமும் வேண்டுமா?

> ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தி சில நாள்களில் வீழ்த்திவிடும் அளவுக்கு பாகிஸ்தான் சிறிய தேசம் அல்ல. இரண்டு நாடுகளுக்கு இடையிலான எல்லையும் சிக்கலானது. பனிமலைகளும் அடர்காடுகளும் கொண்ட இந்த எல்லையில் நடக்கும் சண்டை பல மாதங்கள்கூட நீடிக்கலாம். அது மீளமுடியாத பொருளாதாரச் சுமையை ஏற்படுத்திவிடும். ஒரு வெள்ளம் வந்தாலே பால் பாக்கெட்டும் மெழுகுவத்தியும்கூட கிடைக்கப்பெறாத ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டில் வாழ்ந்துகொண்டு 'போர்... போர்' என்று சிலிர்ப்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனம்.

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

> அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரண்டு தேசங்களுக்கு இடையே நேரடிப் போர் இதுவரை ஏற்பட்டதில்லை. அப்படி ஒரு போர் நடந்தால், அது ஆயுத வியாபாரிகளின் மோதலாகவே உருவெடுக்கும்...

- உலகின் கொந்தளிப்பான எல்லைக்கோடுகளில் ஒன்று மீண்டும் ஒருமுறை பதற்றத்தில் பற்றி எரிகிறது. யுத்தங்களால் ஒருபோதும் தீர்வுகள் கிடைக்காது. இப்போது மறுபடியும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன போர் மேகங்கள். போரைத் தீர்மானிக்கும் இருவேறு சக்திகளாக மோடியும் இம்ரான்கானும் எதிரெதிர் துருவங்களில் நிற்கிறார்கள். இரு நாடுகளிலும் வாழும் 155 கோடி மக்களின் எதிர்காலம் இவர்கள் இருவரின் கைகளில் சிக்கியிருக்கிறது. இந்திய விமானப் படை ஒருங்கிணைந்து நிகழ்த்திய வான்வழித் தாக்குதல் முக்கியத்துவம் பெறும் விதங்களையும், இந்தியா போர் தொடுக்க வேண்டுமா? அதனால் சாதகங்கள் என்ன, பாதகங்கள் என்ன என்று அலசலையும் தரும் ஜூனியர் விகடனின் 'யுத்தமும் ரத்தமும் வேண்டாம்... சமாதானக் கதவு திறக்கட்டும்!' எனும் கட்டுரையை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

தே.மு.தி.க-வின் 'வேறு' எதிர்பார்ப்புகள்!

``சீட்டு, நோட்டு இதைத்தவிர ஆளுங்கட்சியிடம் வேறு ஏதாவது எதிர்பார்க்கிறார்களா?''

``ஆமாம்! ஏற்கெனவே மேம்பாலத்துக்காக விஜயகாந்த் மண்டபம் பாதி இடிக்கப்பட்டது. இப்போது மெட்ரோ திட்டத்துக்காக மீ்ண்டும் மண்டபத்தில் கைவைக்கப்போவதாகத் தகவல் வெளியானது. அதை நிறுத்த வேண்டும் என பிரேமலதா தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரியில் விஜயகாந்துக்கு நெருங்கிய உறவினரின் மருத்துவக் கல்லூரி ஒன்று உள்ளது. அந்தக் கல்லூரியில் உள்ள சிக்கலை மத்திய அரசு தீர்த்துவைக்க வேண்டும் என்று பிரேமலதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறும் பட்சத்தில் அந்தப்பக்கமே தே.மு.தி.க தாவும். இதையெல்லாம் தெரிந்தே, `வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்' என்று ஸ்டாலின் சொல்லி விட்டாராம்.''

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

``தே.மு.தி.க வந்துவிடும் என்ற கணக்கில்தான் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறுத்தி வைத்தது தி.மு.க தலைமை. தே.மு.தி.க வரவில்லை என்று தெரிந்துவிட்டால், மார்ச் முதல் வாரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்து, தொகுதியை அறிவித்துவிடுவார்கள். 

ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குக் கேட்டதுபோலவே இரட்டைத் தொகுதிகள் கிடைக்கலாம். ஆனால், எந்தத் தொகுதியை ஒதுக்குவது என்பதில் பெரும் முட்டல் மோதல் நடக்கும். இப்போதே நாகர்கோவில் தொகுதிக்கு தி.மு.க–காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மல்லுக்கட்டு தொடங்கிவிட்டது. இதேபோல பல தொகுதிகளில் பிரச்னை இருக்கிறது!''

- மக்களவைத் தேர்தல் தொடர்பான 'உள்' விவகாரங்களும், 'உள்'குத்துகளும் அடுக்கப்பட்டிருக்கும் 'மிஸ்டர் கழுகு' பகுதியை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

`நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா? - நீதிபதிகள் காட்டம்

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

`நிர்மலாதேவியின் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றவேண்டும்' என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்த சுகந்தி, ``நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்பது விசாரிக்கப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி தரப்பில் முறையாக விசாரிக்காமல் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதையெல்லாம் குறிப்பிட்டுத்தான், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும். அதுவரை, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டுமென்று கோரினோம். அந்த வழக்கில், தற்போது நல்ல உத்தரவு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்றார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர், ``நிர்மலாதேவி வழக்கில், சி.பி.சி.ஐ.டி விசாரணை திருப்தியாக இல்லை. கொலைக் குற்றவாளிகளுக்குக்கூட ஜாமீன் கொடுக்கும்போது, நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் வழங்கவில்லை? தொடர்ந்து அவரை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் என்ன சூப்பர் குற்றவாளியா?" என கேள்விகளை அடுக்கியிருக்கிறார்கள். விரைவில் இன்னொரு 'பிரேக்கிங் நியூஸ்' கிடைக்கக் கூடிய இந்த வழக்கு குறித்த 'நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா? - நீதிபதிகள் காட்டம்' எனும் ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை வாசிக்க

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

குழந்தைகளிடம் பேசுங்கள்... பேசுவதைக் கேளுங்கள்!

அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியருக்கான மூன்று காரணங்கள். 

* பெற்றோரிடம் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை.

* சொல்வதைக் கேட்க ஆளில்லாமல் போவது. 

* பிரச்னையைத் தீர்க்க உதவாமல், பிறர் தன்னையே குற்றம்சாட்டுவது.

இந்தக் குழந்தைகளை எப்படி அணுகுவது?

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

நம் கவனத்தை ஈர்க்கத்தான் குழந்தை இப்படியெல்லாம் செய்கிறது என்று பெற்றோருக்குத் தெரிந்தால், கோபப்படக் கூடாது. என்ன பிரச்னை என்று கண்டறிய வேண்டும். திறந்த மனதுடன் குழந்தைகளிடம் பேச வேண்டும். 

மிரட்டுவது, குற்றம்சாட்டுவது போன்ற தொனியில் பேசக் கூடாது. `வா... உன் பிரச்னையை இருவரும் சேர்ந்து தீர்ப்போம்' என்று ஆதரவு தரும்விதத்தில் பேச வேண்டும். இதனால், பெற்றோர் மீது குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்; எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார்கள். அதைத் தீர்க்க வேண்டும் என்ற அவசியம்கூட ஏற்படாது... 

- அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர் என்றால் என்ன, அது ஏன் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது, தடுக்க என்ன செய்யலாம் என்பதற்கு முழுமையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் டாக்டர் விகடனின் 'குழந்தைகளிடம் பேசுங்கள்... பேசுவதைக் கேளுங்கள்!' என்ற கவர் ஸ்டோரியை முழுமையாக படித்து பயன்பெற

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

போட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்?

சிட்டியாக இருந்தாலும் சரி, அமேஸாக இருந்தாலும் சரி... ஹோண்டாவின் ஸ்டைலிங் மொழி ஒரே மாதிரிதான் இருக்கும். சிவிக் டிசைன் செய்யப்பட்டதும் இதே டிசைன் மொழியில்தான். என்றாலும், சிவிக்கைப் பொறுத்தவரை இதில் பல விஷயங்கள் புரட்சிகரமாகவும் ஸ்போர்ட்டியாகவும் இருக்கின்றன. 

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

குறிப்பாக, க்ரீஸ் கோடுகளைப் பார்த்தால் பழைய கோட்பாடுகளை உடைத்தெறிந்து விட்டு பல புதுமைகளை முயன்றிருக்கிறார்கள். ஹெட்லைட்ஸ் அமைப்பு கைத்தட்ட வைக்கிறது. வீல் ஆர்ச், அதன் கீழே இருக்கும் 17 இன்ச் அலாய்வீல் ஆகியவை, காரின் கம்பீரத்தைக் கூட்டுகின்றன. கூபே வடிவில் இருக்கும் காரின் பின்பக்கக் கூரை சரிந்த வாக்கில் வந்து டிக்கியுடன் சேரும் டிசைன் கவிதை! காரின் ஹெட்ரூம் பாதிக்கப்படாமல் இதைச் செய்திருப்பது தொழில் நேர்த்தி. ஆங்கில எழுத்தான C வடிவில் இருக்கும் டெயில் லைட்ஸ், காருக்குத் தனி அடையாளத்தைக் கொடுக்கின்றன...

- டொயோட்டா கரோலா ஆல்ட்டிஸ், ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலான்ட்ரா ஆகியவற்றுக்குப் போட்டியாகக் களம் இறங்க இருக்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக், என்னவெல்லாம் மாற்றங்களைக் கண்டிருக்கிறது என்பதை அலசி ஆராயும் 'போட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்?' எனும் மோட்டார் விகடனின் ஃபர்ஸ்ட் டிரைவ் பகுதியை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

அரசியல் சினிமாக்களும், சினிமாக்களின் அரசியலும்

`மெட்ராஸ்' வெற்றிக்குப் பிறகு, இரஞ்சித் படத்தில் ரஜினி நடிக்கிறார் என்றதும் 'வழக்கமான ரஜினி பிம்ப மாயையில் இரஞ்சித்தும் கரைந்துவிடுவார்' எனும் அனுமானங்கள் முன்வைக்கப்பட்டன. ஏனெனில், ரஜினி தன்னளவில் ஒரு சிறந்த நடிகர் என்றபோதும், அவரது படங்கள் மாற்று முயற்சிகளின் குரல்வளையை நெறித்த பெருவணிக சினிமாக்கள். மேலும், திரையிலும் திரைக்கு வெளியிலும் ரஜினி பேசிய அரசியல் அனைத்தும் பிராமணிய, இந்துத்துவ, ஆணாதிக்க அரசியலே என்பதால், `கபாலி' மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 'கபாலி'யில் ரஜினி படத்துக்கான கூறுகள் இருந்தன என்றாலும், அம்பேத்கரின் உடை அரசியல் குறித்த வசனம், சுயமரியாதைக்கான உரத்த குரல், விடுதலையைக் கோரும் பாடல் வரிகள் என இரஞ்சித்தின் படமாகவே அது அமைந்தது.

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

இப்போது இரஞ்சித் இரு வகையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. `` `தேவர் மகன்', 'சின்னக் கவுண்டர்' போல இரஞ்சித் எடுப்பதும் சாதிய சினிமாதான்'' என்ற கூக்குரல்கள் ஒருபுறம், ``இரஞ்சித் தன் படங்களில் பெரியாரைப் புறக்கணிக்கிறார்'' என்ற விமர்சனக் குரல்கள் மறுபுறம். இரஞ்சித் படங்களைச் சாதிய சினிமாக்கள் என்று குற்றம் சாட்டுவதைவிடவும் அபத்தமானது வேறொன்றுமில்லை. ஆனால், பெரியாரியர்களின் விமர்சனங்களுக்குப் பின்னால் ஓர் அரசியல் உரையாடல் இருந்தது...

- திராவிட இயக்கச் சினிமாக்களுக்குப் பிறகு, சமூக - அரசியல் பிரச்னைகளை மய்யப்படுத்திய சினிமாக்களை உருவாக்கியவர்களை முன்வைத்து விரிவான அலசலைத் தந்திருக்கும் விகடன் தடம் இதழின் 'அரசியல் சினிமாக்களும், சினிமாக்களின் அரசியலும்' எனும் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?' 

விகடன் ஃப்ளாஷ்பேக்(19.3.2014) :  `திராவிட கட்சிகள் புரூட்டஸ்கள்!' - காங். விளாசல்

``அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மாறி மாறி காங்கிரஸுக்குத் துரோகம் செய்கிறார்கள். நண்பனையே கொன்ற புரூட்டஸுக்கும் திராவிட கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. திராவிட கட்சிகள் நவீன புரூட்டஸ்கள்..."

``எங்கிருந்தோ வரும் பணத்துக்காக சில அமைப்புகள் விசுவாசத்தைக் காட்டுகின்றன. இலங்கைப் பிரச்னை, தமிழகத்தில் எடுபட்டு இருந்தால், வைகோ எப்போதோ தமிழக முதல்வர் ஆகி இருப்பார். இலங்கைப் பிரச்னைக்கும் தமிழக அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. திராவிட கட்சிகளின் சகாப்தத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடித்துவைக்க முடியும். அதற்கு விதை போடுவோம். விளைச்சலை அறுவடை செய்வோம்...''

விகடன் போஸ்ட்: யுத்த சத்தம், சினிமாக்களின் அரசியல், `நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?'

``10 ஆண்டுகளாக நம்மோடு இருந்தவர்களும் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களும் காங்கிரஸ் ஆட்சியில் நாடு சீரழிந்துவிட்டது என்கிறார்கள். ஆனால், இந்திய பொருளாதாரம் வலுவானது என்பது உலகத்துக்குத் தெரியும். நம்முடைய சாதனைகளை மக்களிடம் சொல்லாதது மிகப்பெரிய குறை. அதனால்தான், நம்மை குறை கூறுபவர்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறவு, இந்தத் தேர்தலில் அறுந்து போய் இருக்கலாம். அடுத்து, பி.ஜே.பி. ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டால் அவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று கலைஞர் சொல்ல வேண்டும். சொல்வார் என்று உளமாற நம்புகிறேன்."

- 2014 மக்களவைத் தேர்தலையொட்டி, ப.சிதம்பரம் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க-வை இப்படித்தான் சில வி.ஐ.பி-க்கள் வறுத்தெடுத்தார்கள். 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' என பொன்மொழி நினைவுக்கு வரும் வகையில், 
ஃப்ளாஷ்பேக்கை சற்றே ரீவைண்ட் செய்தபோது சிக்கிய 19.3.2014 தேதியிட்ட ஜூனியர் விகடனில் `திராவிட கட்சிகள் புரூட்டஸ்கள்! - காய்ச்சி எடுத்த காங்கிரஸ் கூட்டம்!' செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க