சிக்கன் விரும்பிகளுக்கு மகளிர் தின சிறப்பு ஆஃபர்... | Offer on Women's day for all Chicken lovers

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (02/03/2019)

கடைசி தொடர்பு:17:23 (04/03/2019)

சிக்கன் விரும்பிகளுக்கு மகளிர் தின சிறப்பு ஆஃபர்...

அசைவ உணவுப் பிரியர்களுக்கு தினமும் அசைவத்தில் ஒரு வகையாவது இல்லை என்றால் அன்றைக்கு அவர்களுக்கு உணவே இறங்காது. இந்தியாவில் அசைவ உணவுப் பிரியர்கள் மட்டும் தோராயமாக 70 சதவிகிதம் இருக்கின்றனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியர்களில் கிட்டத்தட்ட 80% ஆண்கள் மற்றும் 70%பெண்கள் அசைவ உணவுப் பிரியர்களாக உள்ளனர். மட்டன், மீன், நண்டு போன்ற வகைகள் இருந்தாலும் பெரும்பாலும் கோழிதான் இவர்களின் ஃபேவரிட். சிக்கன் உடலுக்கு சூட்டைத் தரும், கொழுப்பை உண்டாக்கும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், எல்லா உணவுகளிலும் நம் உடலுக்குத் தேவையான சில சத்துக்கள் ஒளிந்திருக்கும். அதுபோலத்தான் சிக்கனும்...

சிக்கனில் இருக்கும் குறைந்த கொழுப்புடைய புரோட்டின் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் புரோட்டின் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவியாக இருக்கிறது. கால்சியம் நிறைந்ததாக இருக்கும் சிக்கன், நம் உடலின் எலும்புகளை வலுவாக்குகிறது. தவிர, பற்கள், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்டவைகளுக்கும் வலு சேர்க்கிறது. சிக்கனில் உள்ள செலீனியம் முதுமையில் ஏற்படும் மூட்டுவலியைத் தடுக்கிறது. வைட்டமின் பி6 அடங்கிய சிக்கன், ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து ஆற்றலை அதிகரிக்கச்செய்கிறது. இதில் காணப்படும் வைட்டமின் பி2 சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது. எனவே, உடல் சூட்டை அதிகரிக்கும் சிக்கனை அளவோடு உண்டால், ஆரோக்கியமான நன்மைகளைப் பெறலாம். 

இப்போது நமது நவநாகரிக கலாசாரத்தில் சிக்கனில் விதவிதமான உணவுகள் உருவாகிவிட்டன. அதிலும் துரித உணவகத்துக்குச் சென்றால், ஐந்தே நிமிடத்தில் சுவையான சிக்கன் விங்ஸ், சிக்கன் லாலிபாப், சிக்கன் நக்கட்ஸ் போன்ற வெரைட்டிகள் நம்மைத் தேடி வருகின்றன. இது தவிர, சிக்கன் பர்கர், சிக்கன் பீட்சா என்பன போன்ற சிக்கன் டிஷ்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரத் தவறுவதில்லை. குடும்பம், நண்பர்கள் உடன் வெளியில் செல்லும்போது நிச்சயம் இம்மாதிரியான புதுவித உணவுகளை சுவைக்க துரித உணவகங்கள் நமக்கான சிறந்த தேர்வாக இருக்கிறது. 

Meat and Eat (ME) 

சிக்கன் சாப்பிடாமல் இருக்கவே முடியாது என்றிருப்பவர்களுக்கு சிறந்த துரித உணவகமாக Meat and Eat (ME) நிறுவனம் திகழ்கிறது. சிக்கன் ஃப்ரைஸ், சிக்கன் ஸ்ட்ரிப்ஸ், சிக்கன் லாலிபாப், சிக்கன் நக்கட்ஸ், சிக்கன் பக்கெட், சிக்கன் பர்கர் போன்ற சுவையான சிக்கன் மெனுவை முன்வைக்கிறது ME. சைவ விரும்பிகளாக இருந்தால் அவர்களுக்கென வெஜ் பர்கர், வெஜ் பீட்சா, வெஜ் ஃப்ரைஸ், கார்ன் நக்கட்ஸ், பன்னீர் ஸ்ட்ரிப்ஸ், வெஜ் சேண்ட்விச் என தனி மெனுவையும் MEவழங்கி அசத்துகிறது. காம்போக்கள், குளிர்பானங்கள் உள்ளிட்ட ஆப்ஷன்களையும் ME வழங்குகிறது.

மார்ச் 8-ம் தேதி, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விகடன் வாசகர்களுக்கு 20% டிஸ்கவுண்ட் அளித்து பெண்களுக்கான தினத்தை கொண்டாடுகிறது Meat and Eat (ME). கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்தால், உங்களின் மொபைல் எண்ணுக்கு டிஸ்கவுண்ட் கோட் அனுப்பப்படும். அந்த கோட்-ஐ அருகில் இருக்கும் ME உணவகத்தில் காட்டி ஆஃபரை பெற்றுக்கொள்ளலாம். மார்ச் 10 வரை இந்த ஆஃபர் செல்லுபடியாகும்.

நமக்கான தினத்தை இவ்வாறு கொண்டாடுவார்களா? என்று மைண்ட் வாய்ஸில் கேட்டுக்கொண்டிருக்கும் ஆண்களும் தங்களது தாய், சகோதரி, காதலி, மனைவி ஆகியோருடன் சென்று தரமான சுவைமிக்க ME-யின் உணவுகளை சுவைக்கலாமே!

 

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close