140-185bhp பவர்... மஹிந்திராவின் 2.0 லிட்டர் BS-6 டீசல் இன்ஜினில் என்ன ஸ்பெஷல்? | Mahindra is Readying an All Aluminium, 2.0 Litre BS-6 Diesel Engine

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (02/03/2019)

கடைசி தொடர்பு:20:00 (02/03/2019)

140-185bhp பவர்... மஹிந்திராவின் 2.0 லிட்டர் BS-6 டீசல் இன்ஜினில் என்ன ஸ்பெஷல்?

BS-4ல் இருந்து BS-6 மாசு விதிகளுக்கு டீசல் இன்ஜின்களை மேம்படுத்துவதற்கு, முன்பைவிட அதிக தொழில்நுட்பமும் பணமும் தேவைப்படும்.

ஏப்ரல் 1, 2020 முதலாக, BS-6 மாசு விதிகள் இந்தியாவில் அமலுக்கு வருவது தெரிந்தே. எனவே, கார் தயாரிப்பாளர்கள், தற்போதைய BS-4 மாசு விதிகளுக்கு உட்பட்ட இன்ஜின்களின் உற்பத்தியை படிப்படியாக நிறுத்திவிட்டு, அவற்றை BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தும் முடிவில் இருக்கிறார்கள். இதில் பலர், புத்தம்புதிய இன்ஜின்களைத் தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கிறார்கள். அதன்படி தனது அடுத்த தலைமுறை எஸ்யூவிகளில் பொருத்துவதற்கு ஏதுவாக, BS-6 மாசு விதிகளுக்கேற்ற 2.0 லிட்டர், டர்போ டீசல் இன்ஜினை தயாரிக்க உள்ளது மஹிந்திரா.

 

BS 6

 

TUV 3OO ப்ளஸ், ஸ்கார்ப்பியோ, XUV 5OO ஆகிய எஸ்யூவிகளில் இருக்கும் 2.2 லிட்டர் mHawk டர்போ டீசல் இன்ஜினுக்கு மாற்றாக வரப்போகும் இது, முழுக்க அலுமினியத்தால் கட்டமைக்கப்பட இருக்கிறது. எனவே, தற்போதைய mHawk டீசல் இன்ஜினைவிட 80 கிலோ எடைகுறைவாக, 2.0 லிட்டர் BS-6 டீசல் இன்ஜின் இருக்கும் எனத் தகவல் வந்திருக்கிறது. முன்னே சொன்ன 3 மாடல்களுக்கும் வருங்காலத்திலும் ஒரே இன்ஜின்தான் என்பதால், 3 விதமான பவர் அளவுகளில் இது தயாரிக்கப்பட உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டில் அறிமுகமாக இருக்கும் தார் ஆஃப் ரோடரில், இந்தப் புதிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படும் எனத் தெரிகிறது. இது 140bhp பவர் மற்றும் 30kgm டார்க்கையும் வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது.

 

Mahindra

 

Z101 என்ற புனைப்பெயரைக் கொண்ட அடுத்தத் தலைமுறை ஸ்கார்ப்பியோவில், இதே இன்ஜின் 160bhp பவரை வெளிப்படுத்தும் (20bhp அதிகம்). தற்போதைய மாடலே 32kgm டார்க்கைக் கொண்டிருப்பதால், புதிய மாடல் அதைவிட அதிக டார்க்கைத் தரலாம். வழக்கமான 6 ஸ்பீடு MT தவிர, AT மற்றும் 4WD ஆப்ஷன் பின்னாளில் வழங்கப்படலாம். மேலும், முற்றிலும் புதிய XUV 5OO எஸ்யூவியில், தற்போதைய மாடலைவிட 30bhp அதிக பவரைப் புதிய இன்ஜின் வெளிப்படுத்தும் (185bhp). 36kgm டார்க்கை 2.2 லிட்டர் mHawk இன்ஜினே தருவதால், புதிய 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் அதைவிட அதிக டார்க்கைக் கொண்டிருக்கும். XUV 5OO-யை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்டு எஸ்யூவியிலும் இதே இன்ஜின்தான் இருக்கும். 

 

Thar

 

என்னடா எல்லாமே நல்ல விஷயமாகவே இருக்கே என்கிறீர்களா? இங்குதான் ட்விஸ்ட் வைத்திருக்கிறது மஹிந்திரா. ஆம், BS-4ல் இருந்து BS-6 மாசு விதிகளுக்கு டீசல் இன்ஜின்களை மேம்படுத்துவதற்கு, முன்பைவிட அதிக தொழில்நுட்பமும் பணமும் தேவைப்படும். எனவே புதிய 2.0 லிட்டர் BS-6 டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட அடுத்த தலைமுறை தார், ஸ்கார்ப்பியோ, XUV 5OO ஆகிய எஸ்யூவிகளின் விலை, தற்போதைய மாடல்களைவிட அதிகமாகவே இருக்கும். இதற்கு க்ராஷ் டெஸ்ட்டுக்கு ஏற்புடைய கட்டுமானமும் ஒரு காரணம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close