Published:Updated:

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!
விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!
விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

வீடு வாங்க சரியான தருணமா?

சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குறைந்த விலை வீட்டை ஒருவர் வாங்குவ தாக எடுத்துக்கொள்வோம். இதற்கு முந்தைய குறைந்த விலை வீட்டின் மீதான ஜி.எஸ்.டி வரி 8 சதவிகிதத்தின்படி, அரசாங் கத்துக்குக் கட்டவேண்டிய ரூ.1.60 லட்சம் வரிப்பணத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.21.60 லட்சம் வீடு வாங்குபவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். 

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

ஜி.எஸ்.டி வரி 8 சதவிகிதத்தி லிருந்து ஒரு சதவிகிதமாகக் குறைக்கப்பட்டாலும், அதற்கு உள்ளீட்டு வரிக் கழிப்பு இல்லாததால், ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஒரு ஃப்ளாட்டின் கட்டுமானப் பொருள்கள்மீதான உள்ளீட்டு வரி ரூ.1.60 லட்சம் (சம்பளம், லாபம் மற்றும் வட்டி ஆகியவற்றுக்கு உள்ளீட்டு வரிக் கழிப்பு கிடையாது) ஆகும். ஆக மொத்தம், ரூ.21.60 லட்சத்துக்கு 1% ஜி.எஸ்.டி வரி ரூ.21,600 சேர்த்து மொத்தம் ரூ.21.81 லட்சமாக வீடு வாங்குபவர்களிடமிருந்து வசூலிக்கப்படும். ஆக, சொகுசு வீடாக இருந்தாலும், குறைந்த விலை வீடாக இருந்தாலும், அரசுக்கு அதிக வரி கட்ட வேண்டியிருப்பதால், வீட்டின் விலை அதிகரிக்குமே தவிர குறையாது...

- வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் வீடுகளின் விலை இறங்க வாய்ப்பிருக்கிறது என்கிற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகி உள்ளது. இந்தச் சமயத்தில், வீடு வாங்க சரியான நேரமா என்கிற எல்லோரது மனதிலும் எழுந்திருப்பதால், அதற்கான பதிலைப் பார்ப்போம். குறிப்பாக, முதலீட்டு நோக்கில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கும், சொந்தப் பயன்பாட்டுக்கு வீடு தேவை என்கிறவர்களுக்கும் தெளிவான வழிகாட்டல் வழங்கும் 'ஃப்ளாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு... வீடு வாங்க சரியான தருணமா?' எனும் நாணயம் விகடன் கவர் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...  https://www.vikatan.com/nanayamvikatan/2019-mar-10/recent-news/148922-gst-on-real-estate-reduced.html?utm_source=FBread_content_promo_article

> நாணயம் விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://www.vikatan.com/subscription/?sid=4775&utm_source=FBread_content_promo_subscribe

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://www.vikatan.com/offers/enable_mailer_offer.php?promo=Mar19_Sale_1yr_mobi_arti&utm_source=FBread_content_promo_subscribe

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

"தேர்தலுக்குப் பிறகு பொலிட்டிக்கல் மிராக்கிள்!"

'அங்கீகாரம் இல்லாத கட்சியையும், சின்னத்தையும் வைத்துக்கொண்டு, அங்கீகாரம் இல்லாத தலைவராக தினகரன் அடையாளப்படுத்திக்கொள்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகிறாரே?"

"(பலமாகச் சிரிக்கிறார்) நாங்கள்தான் உங்களுக்கு (அ.தி.மு.க-வுக்கு) ஒன்றுமில்லை என்றாகிவிட்டதே. அதன்பின் ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்? ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்? எங்கள் மீதுள்ள பயத்தை மறைப்பதற்கு, இப்படியெல்லாம் உளறிக்கொட்டுகிறார்கள். வரும் தேர்தலில் யாருக்கு அங்கீகாரம் கிடைக்கப்போகிறது, யார் அங்கீகாரமற்று ஓடப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.''

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

"தொண்டர்கள் அ.தி.மு.க பக்கமும், குண்டர்கள் அ.ம.மு.க பக்கமும் இருக்கிறார்கள் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியிருக்கிறாரே?"

''டி.டி.வி.தினகரன் இல்லையென்றால், ஓ.பி.எஸ் இல்லை என்பது ஊருக்கே தெரியும். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஒரு 'பொலிட்டிக்கல் மிராக்கிள்' ஏற்படப்போகிறது..."

- இரண்டு அசுரக் கூட்டணிகளுக்கு மத்தியில் சூறாவளிச் சுற்றுப்பயணம், அதிரடி  அறிக்கைகள் என 'ஒன் மேன் ஷோ'வாகக் கலக்கிவருகிறார், அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். அவரின் முக்கியத் தளபதியாகக் கருதப்படும் அ.ம.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்செல்வனிடம் ஜூ.வி. சில கேள்விகளை முன்வைத்தது. ''தேர்தலுக்குப் பிறகு 'பொலிட்டிக்கல் மிராக்கிள்'!'' எனும் அந்தப் பேட்டியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... 

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

உடற்கூறாய்வு அறிக்கைகள் சொல்லும் உண்மை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 2018, மே 22-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், இறந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கைகள் இப்போது வெளியாகியுள்ளன. பலர் தலையில் தோட்டாக்கள் பாய்ந்து இறந்துள்ளனர். பூட்ஸ் கால்களால் நெஞ்சில் மிதிபட்டும், தலையில் லத்தியால் தாக்கப்பட்டும் சிலர் இறந்திருக்கிறார்கள்.

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

தாங்கள் சுவாசிக்கும் காற்றிலும், குடிக்கும் நீரிலும் ஆலையின் கழிவுகள் கலப்பதால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறோம் என்று புகார் எழுப்பிவந்த மக்கள்தான், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்றது, காவல்துறை. அந்தக் கலவரமே, காவல்துறையால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் என்று குற்றம்சாட்டும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும், அதற்கான சான்றுகளைக் குவித்துக்கொண்டிருக்கின்றனர். 

இந்தச் சூழலில், இறந்தவர்கள் அனைவரின் உடற்கூறாய்வு அறிக்கைகளும், நமக்குக் கிடைத்தன. இந்த உடற்கூறாய்வு அறிக்கைகளைப் பார்த்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், 'கூட்டத்தைக் கலைக்க அல்ல... கொன்று குவிக்கவே துப்பாக்கிச்சூட்டை போலீஸ் நடத்தியுள்ளது' என்று குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பான முழு விவரத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள 'கூட்டத்தைக் கலைக்க அல்ல... கொன்று குவிக்கவே! - உடற்கூறாய்வு அறிக்கைகள் சொல்லும் உண்மை' எனும் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

 "என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்!" 

"என் கூடப் படிச்ச புள்ளைங்களுக்கு எல்லாம், அவன் பார்க்குறான், இவன் சைட் அடிக்குறான், அந்தப் பையன் லவ் பண்றான்னு நிறைய கதைகள் இருக்கும். எனக்கு அப்படி எதுவுமே நடந்ததில்ல. இந்த நிறம் எனக்குத் தந்த தாழ்வுமனப்பான்மையை மீறி வர்றதுங்கிறது அவ்வளவு சிரமமா இருந்தது. ஆனாலும், அதை நான் செஞ்சேன். என் பேச்சுத் திறமைதான் அதுக்கு எனக்கு உதவுச்சு. காலேஜ்ல பேச்சுப் போட்டிகள்ல கலந்துகிட்டேன். என் பக்கத்துல உட்காரப் பிடிக்காதவங்ககூட என் பேச்சைக் கேட்டுக் கைதட்டினாங்க. அந்தக் கைத்தட்டல் சத்தம்தான், வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச முதல் அங்கீகாரம்...

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

என் மேக்கப், டிரஸ்ஸுக்கும் நெகட்டிவ் கமென்ட்ஸ் வராமல் இல்லை. ஆனா, இது நிகழ்ச்சியின் தேவையா இருக்கு. நானும் பழனி அண்ணனும் கூடப் பொறந்த அண்ணன், தங்கச்சி மாதிரி. சிலர் என்னையும் அவரையும் சேர்த்து வைச்சுப் பேசுவாங்க. என் கணவர் என்னைப் புரிஞ்சிக்கிறதுனால இதுக்கெல்லாம் நான் முக்கியத்துவம் தர்றதில்ல."

- 'அறந்தாங்கி' நிஷா இன்று ஒரு செலிபிரிட்டி. ஆனால், ஒரு காலத்தில் கல்லூரி முதல் கல்யாணச் சந்தைவரை தன் நிறத்தால் புறக்கணிப்புகளை மட்டுமே பார்த்தவர். அவற்றையெல்லாம் தன் வாய்த் திறமையாலும் வைராக்கியத்தாலும் வென்று வந்து அவர் அடைந்திருக்கும் வெற்றி இது.  "டிவியில நிஷா, வீட்டுக்காரரை இப்படி அசிங்கப்படுத்துது, மாமியாரைக் கேலி பண்ணிப் பேசுது, இப்படியெல்லாம் டிரஸ் பண்ணுதுன்னு சொல்றவங்க எல்லாம், நான் சொல்ற இந்தக் கதையைக் கேளுங்க'' - படபடவெனப் பேச ஆரம்பித்தார். அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த "என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்!" எனும் சிறப்புப் பேட்டியை முழுமையாக வாசிக்க  க்ளிக் செய்க... 

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

சவால்விடும் முனியாண்டி விலாஸ்காரர்கள்!

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கலெக்டர் ஆபீஸ் இருக்கிறதோ இல்லையோ, முனியாண்டி விலாஸ் இருக்கும். பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில் தனித்துத் தெரியும். அந்தக் கடையைக் கடந்து செல்லும்போது, வாசனை சுண்டி இழுக்கும்!

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

``எத்தனை வெளிநாட்டுக் கடைகள் வந்தாலும், தினுசு தினுசான பெயர்களில் உணவுகள் கொடுத்தாலும், ஆப் மூலம் ஆர்டர் மூலம் வீட்டுக்கே சாப்பாடு வந்து தரும் நிறுவனங்கள் பெருகினாலும்,  எங்கள் வாடிக்கையாளர்களை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது. காரணம், எங்களை வாழவைக்கும் முனியாண்டி சாமிதான்'' என்றார் ஹோட்டல் தொழிலில் ஐம்பது வருட அனுபவமுள்ள பெரியவர் அழகர்சாமி. 

வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழாவுக்கு வந்திருந்தவரிடம் பேசியபோதுதான் இதைப் பகிர்ந்துகொண்டார். நாடு முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்துநர்கள், இந்தத் திருவிழாவில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். முனியாண்டி விலாஸ் குறித்த வியத்தகு பின்புலத்தையும், தற்போதையைச் சூழலையும் அடுக்கும் அவள் கிச்சன் இதழின் 'ஆன்லைன் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது! - சவால்விடும் முனியாண்டி விலாஸ்காரர்கள்!' எனும் சுவையான சிறப்பு ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!

``இதய அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ, மாரடைப்பு வந்திருந்தாலோ தாம்பத்ய உறவுக்குப் போதுமான இடைவெளி கொடுக்க வேண்டும். குறைந்தது மூன்று மாதங்கள்வரைக்கும் உடலுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர்களால் இரண்டு மாடிப்படி ஏறி நடக்க முடிகிறது; அப்போது நெஞ்சுவலியோ, மூச்சுத்திணறலோ இல்லை என்றால் தாம்பத்ய உறவில் ஈடுபடலாம். உறவின்போது நெஞ்சுவலியோ, மூச்சுத்திணறலோ ஏற்பட்டால், இதயத்தில் பிரச்னை என்று அர்த்தம். அவர்கள், டாக்டரின் ஆலோசனைக்குப் பிறகுதான் உறவில் ஈடுபட வேண்டும்..."

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

- மனிதனின் உடல் மற்றும் மனதின் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையானது செக்ஸ் என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். உண்மையில், `ஹார்ட் அட்டாக் வந்தவர்கள், சிகிச்சைக்குப் பிறகு தாராளமாக தாம்பத்ய உறவில் ஈடுபடலாம்' என்று அடித்துச் சொல்கிறார்கள் இதயநோய் மருத்துவர்கள். `ஆனால் அதற்கு சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்துகிறார்கள். இதுகுறித்த முழுமையான வழிகாட்டுதலை வழங்கும் 'இதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்!' எனும் டாக்டர் விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.... 

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

மரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்!

''ஹலோ, என் குடும்பத்தையே தீ வெச்சுக் கொளுத்தப் பார்த்தீங்களே! இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?'' என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் காட்டுக் கத்து கத்தியதை என் பாணியில் பாந்தமாகச் சொல்கிறேன். விஷயம் இதுதான்.

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நாமக்கல் வரை தனது குடும்பத்துடன் ஒரு பெட்ரோல் காரில் இரவு நேரத்தில் பயணித்திருக்கிறார் அவர். திடீரென அதிகாலை 3 மணிவாக்கில், காருக்குள்ளே வினோதமான ஒரு வாடை. நேரம் ஆக ஆக அந்த வாடை கார் முழுவதும் பரவிக் கொண்டே இருந்திருக்கிறது. அப்புறம்தான் தெரிந்தது - அது பெட்ரோல் வாசம். காருக்குள் தெரியாமல் ஒரு லைட்டர் பற்ற வைத்தாலோ, எலெக்ட்ரிக்கல் பிரச்னை ஏற்பட்டாலே வெடிக்கக் கூடிய தருணம் அது. பதற்றத்துடன் தடாலென குடும்பத்தினரை இறக்கிவிட்டு, எரிபொருள் டேங்க்கில் சோதனை செய்து பார்த்தபோது, பெட்ரோல் ஒழுகிக் கொண்டிருந்தது தெரிந்தது. அப்புறம் பக்கத்தில் உள்ள டீலர்ஷிப்புக்கு போன் செய்து, காரை ரெக்கவர் செய்து பார்த்தபோதுதான் உண்மை தெரிந்திருக்கிறது...

- மோட்டார் விகடன் இதழில் வெளிவரும் 'சர்வீஸ் அனுபவம்' தொடரில் வெளிவரும் மிக முக்கியமான அத்தியாயம் 'மரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்!' காரில் பெட்ரோல் டேங்கை சுத்தம் செய்யும்போது கவனக்குறைவு ஏற்பட்டால் விபரீதத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறித்து தெளிவுபடுத்தும் இந்தப் பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க....

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

நிற்காத கால்கள்!

தன் ஊரில் எந்தப் பிரச்னை நடந்தாலும், பிரச்னைக்குரியவர் எவ்வளவு பெரிய அதிகாரப் பீடத்தில் இருந்தாலும் அதைப்பற்றி ஹேமா ஒருபோதும் கவலைப்படுவதில்லை. 'தப்பு செய்றவனே தைரியமா இருக்கும்போது, அதைத் தட்டிக் கேக்கிற நாம, அவங்களவிட இரண்டு மடங்கு தைரியமா இருக்கணும்'னு சொல்லி வளர்த்த அம்மாவின் பிள்ளை ஹேமா! 

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

- ஓட்டேரி குப்பைமேட்டுக்குப் பின்புறம்தான் ஹேமாவின் வீடு. வீட்டருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்ப் பிரச்னை, தெருவிளக்கு எரியாமல் இருக்கிறசூழல், ரேஷன் கடைகளில் பொருள்கள் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது, குடித்துவிட்டு கணவன் அடித்தல்... இதுபோன்ற ஏதாவது, தன் பகுதியில் நடக்கிறது எனத் தெரிய வந்தால், அங்கே முதலில் ஓடுகிற கால்கள் ஹேமாவினுடையவை. அவரைப் பற்றிய எழுச்சியூட்டும் பின்புலத்தை நமக்குத் தரும் 'நிற்காத கால்கள்!' எனும் அவள் விகடன் 'நேசக்காரிகள்' தொடர் பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க....

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

 மோடியும் முகமூடியும்!

விகடன் ஃப்ளாஷ்பேக் (10/04/2014)

'பாரத் மா கா ஷேர் ஆயா!' (பாரத அன்னையின் சிங்கம் வருகிறது) என்ற முழக்கம், 'பாரத் மாதா கீ ஜே' என்பதையே தூரமாக, ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது. மகாராணா பிரதாப், சிவாஜி, சாணக்யா, விவேகானந்தர்... என்ற உதாரணப் புருஷர்களையே உச்சரித்து, அதனுடைய கலிகால வார்ப்பாகத் தன்னையே காட்டிக்கொள்கிறது அந்தக் குரல். 'இன்று காங்கிரஸ் ஒரு பிரிவினைவாத சக்தி. வாக்குக்காக ஒவ்வொன்றையும் பிரித்து வைத்துள்ளது. நான் வளர்ச்சி என்ற தளத்தில் இந்தியாவை ஒன்றுபடுத்த விரும்புகிறேன். என் முழக்கம் இந்தியாவுக்கே முன்னுரிமை' என்கிறது.

விகடன் போஸ்ட்: 'ஸ்டெர்லைட்' உண்மை, 'அறந்தாங்கி' நிஷாவின் வலிகள், 'நேசக்காரி' ஹேமா!

வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தந்ததைவிட புதிய பெருமை எதையும் சேர்த்துக்கொள்ளாத காங்கிரஸ் கட்சியைப் பார்த்து, 'காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை விடுதலை செய்வோம்' என்கிறது அந்தக் குரல். இந்தியா, இந்தியா என்று பேசுவதையே காங்கிரஸிடம் இருந்து தட்டிப் பறித்து, 'இந்தியாவுக்கு வாக்களியுங்கள்' என்று நரேந்திர மோடி படத்தைப் போட்டு விளம்பரம் செய்ததில் ஆரம்பித்தன வித்தைகள்!

குஷ்பு ஜாக்கெட் மாதிரி மோடி குர்தா பிரபலம் ஆகிவிட்டது. பி.சி.சர்க்கார் வைத்திருப்பது மாதிரி அவரிடம் மந்திரக்கோல் இல்லை. ஆனால், ஏக இந்தியாவையும் ஒரே நாளில் ஏற்றம் செய்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பை எகிறவைக்கத் துடிக்கிறார்கள். ராஜீவ் காந்தி வரும்போதும் அவரது கழுத்துப்பட்டி பட்டன் போட்ட கோட் 'நவீன இந்தியன்' மாடலை நம் முன் நிறுத்தியது. மன்மோகன் பிரதமர் ஆகும்போதும், 'பொருளாதார மேதை ஒருவரின் கைகளால் இந்தியா சுபிட்சம் அடையும்' என நம்பவைக்கப்பட்டது. இதோ வளர்ச்சியின் நாயகனாக, இப்போது நரேந்திர மோடி வாக்கு கேட்கிறார்.

அத்வானி 'தீவிரவாதி'யாக இருந்தபோது, மிதவாதியான வாஜ்பாயை நடத்தி அழைத்து வந்தார்கள். இப்போது அத்வானி மிதவாதியாக இருக்கும்போது, 'தீவிரவாதி'யான நரேந்திர மோடியை நாலு கால் பாய்ச்சலில் ஓடவிடுகிறார்கள். இந்த இடைப்பட்ட 15 ஆண்டு காலத்தில் மதத்தின் மார்க்கெட்டிங் வேல்யூ கூடியிருக்கிறது என்பதன் அடையாளம் இது. அதனை அறுவடை செய்யவே நரேந்திர தாமோதர்தாஸ் மோடி வருகிறார். நாளை அல்ல, இன்றைய பிரதமரே அவர்தான் என்று நம்பவைக்கப்பட்ட நரேந்திர மோடியின் பலவித பிம்பங்களை 10/04/2014 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ் 'மோடியும் முகமூடியும்!' எனும் சிறப்புக் கட்டுரையில் முன்வைத்தது. இதோ அவரது ஐந்து ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும் தறுவாயில், அவர் குறித்த பிம்பங்களை நாமும் அனுபவ ரீதியில் வெகுவாக புரிந்துகொண்டிருப்போம். இப்போது நாம் ஒப்பிட்டும் மதிப்பிட்டும் பார்க்க, ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய அந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்க https://www.vikatan.com/anandavikatan/2014-apr-16/politics/93916.html?utm_source=FBread_content_promo_article

> ஆனந்த விகடன் இதழை சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://www.vikatan.com/subscription/?sid=4771&utm_source=FBread_content_promo_subscribe


> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: https://www.vikatan.com/offers/enable_mailer_offer.php?promo=Mar19_Sale_1yr_mobi_arti&utm_source=FBread_content_promo_subscribe