`விமான டிக்கெட் விலையில் 47% வரை சேமிக்கலாம்!' - கயாக் சர்வே முடிவுகள் | Indians can save up to 47% on their next AirTravel

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (04/03/2019)

கடைசி தொடர்பு:15:25 (04/03/2019)

`விமான டிக்கெட் விலையில் 47% வரை சேமிக்கலாம்!' - கயாக் சர்வே முடிவுகள்

விமான டிக்கெட்

ந்தியர்கள் சமீப காலமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானத்தின் மூலம் அதிகமாகப் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் கவலையெல்லாம், டிராவல் பட்ஜெட்டின் பெரும்பகுதி விமான பயணச்சீட்டு வாங்குவதற்குச் செலவாகிறது என்பதுதான். இனி யாருக்கும் அந்தக் கவலை வேண்டாம். ஏனெனில்,  டிக்கெட் புக்கிங் இணையதளமான kayak.co.in, `டிக்கெட் முன்பதிவுக்குச் சிறந்த நேரம் எது?' என்கிற சர்வே ஒன்றை எடுத்திருந்தது. அந்த சர்வே முடிவின்படி, இந்தியப் பயணிகள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கான டிக்கெட் முன்பதிவை இரண்டு மாதங்களுக்கு முன்பாகவும், இரண்டு வாரங்களுக்கு முன்பாக உள்நாட்டு பயணத்துக்கான முன்பதிவை மேற்கொண்டால், 10% - 47% வரை சேமிக்க முடியும் என்கிற விவரம் தெரியவந்திருக்கிறது.

அதாவது, மார்ச் மற்றும் ஜூலை மாதங்கள், குறைவான கட்டணத்துடன் பயணிக்க, ஏற்ற மாதங்களாக இந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் எங்கிருந்துவேண்டுமானாலும், சென்னை, டெல்லி, மும்பை, கோவா, ஹைதராபாத் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளிலுள்ள போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கும், துபாய், பாலி, பேங்காக், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்க் ஆகிய நாடுகளுக்கும் மார்ச் மற்றும் ஜூலை மாதத்துக்கான பயணங்களுக்கு அதிகமான ஆஃபர்களை, பெரும்பாலான விமான நிறுவனங்கள்  வழங்குகின்றன. அதேபோல நியூயார்க், லண்டன், மாஸ்கோ மற்றும் டொரன்டோ ஆகிய நாடுகளுக்கான  விமான கட்டணத்தையும் முன்னதாகவே பதிவு செய்துகொள்ளும்போது ஏராளமான சலுகைகள் கிடைக்கிறது.


[X] Close

[X] Close