Published:Updated:

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!
விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!
விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

வனங்களை விட்டு துரத்தப்படும் பழங்குடிகள்!

வனங்களில் காலம்காலமாக வசித்துவரும் 11 லட்சம் பழங்குடியினரை வனங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, பழங்குடி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இப்படி ஓர் உத்தரவு வருவதற்கு, மத்திய அரசின் நடவடிக்கைகளே காரணம் என்று பழங்குடி அமைப்புகள் உட்படப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகிறார்கள்.

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

பழங்குடி மக்களின் நலனுக்காகவும், வனம் மீதான அவர்களின் உரிமைகளுக்காகவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், `வன உரிமைகள் சட்டம்' கொண்டுவரப்பட்டது. பாரம்பர்யமாக வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடியினர் யார் என்பதை சட்டபூர்வமாக விண்ணப்பித்து, அவர்கள் தங்களை உறுதிசெய்து  கொள்ளவேண்டும் என்கிறது, இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தை எதிர்க்கும் சிலர், `இந்தச் சட்டம், வனப்பகுதிகளுக்குள் நில ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கிறது. இதனால், வனப்பரப்பு குறைகிறது. பழங்குடி மக்களால், வனத்தின் பல்லுயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது' என்று குற்றம்சாட்டினர். இத்தகைய வாதங்களுடன் தொடரப்பட்ட வழக்கு, சுமார் பத்தாண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக விரிவாகப் பதிவுசெய்துள்ள `வனங்களை விட்டு துரத்தப்படும் பழங்குடிகள்! - 11 லட்சம் பேர் எங்கே போவார்கள்?' எனும் ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க  க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

கடவுளின் தேசத்தில் மூழ்கும் சொர்க்கம்!

கடவுளின் தேசமாம் கேரளத்தில் அமைந்துள்ள `மன்றோ துருத்து' தீவில், கொட்டிக்கிடக்கிறது இயற்கைப் பேரழகு. எங்கு நோக்கிலும் தென்னை மரங்களின் பசுமை படர்ந்திருக்கிறது. ஆறுகளும் ஏரிகளும் சூழ்ந்திருக்க, எல்லா இடங்களுக்கும் படகுப் பயணம்தான். மோட்டார் படகுகளைக் காட்டிலும், நீண்ட மூங்கில் கம்புகளைக் கொண்டு இயக்கப்படும் வள்ளங்களில் பயணிக்கும் அனுபவம் அலாதியானது. இங்கு, காயல் மற்றும் குளங்களிலிருந்து மீன்களைப் பிடித்து மொறுமொறுவென வறுத்து வீட்டு ஹோட்டல்களில் பரிமாறப்படும் பதார்த்தத்தின் ருசிக்கு இணையேதும் இல்லை. 

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

இவ்வளவு எழில்மிகுந்த தீவுக்குப் பேராபத்து ஒன்று சூழ்ந்துள்ளது. புவி வெப்பமடைவதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தீவு மூழ்கிவருகிறது; அதனால் அங்கிருந்து பல குடும்பங்கள் வீடுகளைக் காலிசெய்துவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர்கின்றன என்று தகவல்கள் வர, மன்றோ துருத்துவுக்குச் சென்று, கள நிலவரத்தை அப்படியே பதிவு செய்துள்ள `கடவுளின் தேசத்தில் மூழ்கும் சொர்க்கம்! - புவி வெப்பமடைவதால் புதையும் தீவு' எனும் ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

கருணை காட்டிய கருணைக்கொலை மனு!

நீதிமன்றங்கள் வித்தியாசமான வழக்குகளை மட்டுமல்ல, அவ்வப்போது எதிர்பாராத திருப்பங்களையும் சந்திக்கும். பாவேந்தன் விஷயத்திலும் அப்படி ஓர் எதிர்பாராத திருப்பம் நேர்ந்தது. கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருமேனி - சசிகலா தம்பதி. இவர்களுக்கு பாவனா, சக்தி, பாவேந்தன் என மூன்று பிள்ளைகள். கடைசி மகன் பாவேந்தனைக்  கருணைக்கொலை செய்ய, கடந்த அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு போட்டனர் தாயும் தந்தையும்...

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!  
`பாவேந்தனை எந்தச் சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்த முடியாது' என எல்லா மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். மருத்துவத்தின் எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில், செய்வதறியாமல் தவித்த திருமேனியும் சசிகலாவும், மகனுக்கான கருணைக்கொலை மனுவோடு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். 

``என்ன பண்றதுன்னே தெரியாம, `இதுதான் நம்ம விதிபோல'னு நினைச்சப்போதான் என் வீட்டுக்காரர், கலெக்டர் ஆபீஸ்ல போய் கருணைக்கொலை மனு போட்டாரு. நான் சம்மதிக்கவே இல்லை. பத்து வருஷம் அழுத அழுகையும் அன்னிக்குதான் அந்தக் கடவுளுக்குக் கேட்டுச்சுபோல... அதுக்குப் பிறகு, எங்க வாழ்க்கையே மாறிடுச்சு” என்கிறார் சசிகலா.

ஆம்! பாவேந்தனின் வலி மிகுந்த உலகத்துக்குள், அடுத்து நடந்த அனைத்துச் சம்பவங்களுமே ஆச்சர்யங்கள்தாம். அதை முழுமையாக விவரிக்கும் `கருணை காட்டிய கருணைக்கொலை மனு!' எனும் டாக்டர் விகடன் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

`டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

நமது பாவனைகள் அனைத்தும் `செல்பி' (தற்-படம்) என்கிற சுய-பிம்ப வேட்கையால் கட்டுப்படுத்தப்பட்டு, சுய-மோகிகளாக மாற்றுவதுடன், நமது சூழல் நம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு `எக்ஸிபிஷனிஸ்டிக்' மற்றும் `வாயரிஸ்டிக்' காட்சியின்ப அரங்காக மாறிவிட்டது. தன்னை ஒரு விளம்பரப் பொருளாக, அடுத்தவர் முன் காட்சிப் பொருளாக மாற்றும் மனநிலையே `எக்ஸிபிஷனிசம்'. மற்றவரின் பாலியல் நடவடிக்கையை ரகசியமாகப் பார்த்து ரசிப்பது `வாயரிசம்' (Voyeurism). ஓர் உடல் தன்னைக் காட்சிப் பொருளாகவும், பிறரைக் காட்சியின்பப் பொருளாகவும் ரசிக்கும் ஓர் உளவியலை உருவாக்கியுள்ளது இச்சூழ்நிலை. 

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

`டிக்-டாக்', `டப்ஸ்மாஷ்', `மியூஸிக்கலி' உள்ளிட்ட பல மென்பொருள் செயலிகள் நம்மை, நம் உடலை ஒரு காட்சிப்பொருளாக்குவதற்கான மனநிலையை உருவாக்கியுள்ளன. தொலைக்காட்சி, இணைய-தொலைக்காட்சி, யூடியூப், முகநூல், சிட்டுரை (ட்விட்டர்), வாட்ஸ்அப் போன்ற ஊடகங்கள் செய்திகளைக் கடத்துவதற்கு மாறாக, செய்திகளைக் கட்டமைப்பதாக மாறியுள்ளன. உண்மைகளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு மாறாக, உண்மைகளை உருவாக்குபவையாக மாறியுள்ளன. பிக்-பாஸ், பிக்-பிரதர்ஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் வழியாக `ரியாலிட்டி' எனப்படும் `யதார்த்தம் உருவாக்கப்பட்டது' என்பது மறைக்கப்பட்டு, `உண்மையாக நிகழ்வதான' ஒரு சிந்தனைப் படிமம் கட்டமைக்கப்படுகிறது.

- `சமூகவலைதளம் பயனுள்ளதா - பயனற்றதா?' என்ற விவாதத்தைவிட அதன் உடலியல், உளவியல் தாக்கம் ஏற்படுத்தும் சமூக விளைவுகள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்று கூறும் `வளையில் தப்பிய எலி, இணைய நெடுஞ்சாலையில் பாம்புகளான கதை' எனும் விகடன் தடம் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

விவசாய உபதொழில்கள் மூலம் விவசாயத்தில் எடுக்கும் வருமானத்தைவிட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். அதுபோன்ற பண்ணைத்தொழில்களை வெற்றிகரமாகச் செய்து வரும் விவசாயிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வெற்றிச்சூத்திரத்தை அனைவருக்கும் கொண்டு வருகிறது பசுமை விகடன். 

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

அந்த வகையில், நாட்டுக்கோழிகள் வளர்த்து நல்ல வருமானம் ஈட்டி வரும் நண்பர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் ஜெனில் கார்த்திக் ஆகியோரைப் பற்றிப் பார்ப்போம். திருநெல்வேலி மாவட்டம், தென்காசி செல்லும் சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, ஆலங்குளம். இங்கிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாளையங்குறிச்சி எனும் கிராமத்தில்தான் கிருஷ்ணகுமார் மற்றும் ஜெனில் கார்த்திக் ஆகியோரின் நாட்டுக்கோழிப்பண்ணை இருக்கிறது. 

"...ஒருநாள் வயசுள்ள குஞ்சுகள்ல 300 குஞ்சுகள் வரை, ஒரு மாசத்துல விற்பனையாகுது. அது மூலமா 18,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு மாச வயசுள்ள குஞ்சுகள்ல 200 குஞ்சுகள் வரை ஒரு மாசத்துல விற்பனையாகுது. அது மூலமா 24,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ரெண்டு மாச வயசுள்ள குஞ்சுகள்ல 250 குஞ்சுகள் வரை ஒரு மாசத்துல விற்பனையாகுது. அது மூலமா 50,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வளர்ந்த கோழி, சேவல்கள் விற்பனை மூலமா மாசத்துக்கு 3,00,000 ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. மொத்தமா ஒரு மாசத்துக்கு 3,92,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. இது, போன மாசம் கிடைச்ச வருமானக் கணக்கு. சராசரியா இந்தளவுக்கு ஒவ்வொரு மாசமும் வருமானம் கிடைச்சுடுது..."

- பணம் குவிக்கும் பண்ணைத்தொழிலில் இந்த இருவரது வெற்றிச் சூத்திரங்களும் வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ள `380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!' எனும் பசுமை விகடன் பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

சோறு முக்கியம் பாஸ்!

இன்று பாக்கெட்டில் விற்பனைக்கு வரும் எண்ணெய்கள் எல்லாம் ஒரே நிறத்தில், ஒரே வாசனையில் இருக்கின்றன. அரைத்த எண்ணெயை உயர் வெப்ப நிலையில் கொதிக்கவைத்து, ரீபைண்ட் செய்து நிறத்துக்கு ஒன்று, வாசனைக்கு ஒன்று, கெட்டுப்போகாமல் இருக்க ஒன்று என வகைவகையாக ரசாயனங்களைக் கொட்டித்தான் பேக்கிங் செய்து அனுப்புகிறார்கள்.

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

உணவகங்களிலும் எண்ணெய்தான் பிரச்னை. சிலர், ஏற்கெனவே கொதிக்கவைத்து பேக்கிங் செய்து வருகிற எண்ணெயை மீண்டும் மீண்டும் நான்கைந்து முறை பயன்படுத்துகிறார்கள். சாப்பிடும்போதே தெரிந்துவிடும். எண்ணெயின் கார்ப்பு நாக்கில் ஒட்டும். 

சில உணவகங்கள், அக்கறையாக செக்கு எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. தொடுகறிகளிலும் குழம்பு வகைகளிலும் செக்கெண்ணெய்ப் பயன்பாட்டை அதன் வாசனையையும் சுவையையும் வைத்தே கண்டுபிடித்துவிட முடியும். சென்னை, அண்ணாநகர் கிழக்கில், ஐயப்பன் கோயிலையொட்டியிருக்கும் கோவை அலங்கார் விலாஸ் அப்படியான ஒரு செக்கெண்ணெய் உணவகம்.

சபரிராஜன், மணிகண்டன், ஹர்ஷினி பிரியா மூவரும் இணைந்து நடத்துகிற இந்த உணவகத்தில் கொங்கு மண்ணுக்கே உரித்தான அசைவ உணவுகளை அதன் தன்மையோடு சாப்பிடலாம். இந்த உணவகத்தின் சிறப்புகளை அனுபவபூர்மாகச் சொல்லும் ஆனந்த விகடன் தொடரின் `சோறு முக்கியம் பாஸ்!' பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

சுட்டிகளுக்கான சூப்பர் ஆப்ஸ்!

Mentalup: ஞாபகத்திறன். கவன ஒருங்கிணைப்பு, கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றுக்கு உதவும் ஆப். குழந்தைகளின் அறிவு மற்றும் மொழியியல் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. தினசரி டாஸ்க்குகளைச் சிறப்பாகச் செய்வதன் மூலம் அதிக மதிப்பெண்ணைக் குவிக்கலாம். 

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

Code spark: குழந்தைப் பருவத்திலேயே கோடிங் (Coding) சம்பந்தப்பட்ட விஷயங்களின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப். தினசரி கொடுக்கப்படும் டாஸ்க்குகளைச் சிறப்பாகச் செய்வதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.

Brain it on: இயற்பியல் அடிப்படையிலான புதிர்களை விடுவிப்பதே ப்ரெய்ன் இட் ஆன். ஒவ்வொரு புதிரையும் சரியான உருவத்தை வரைவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும். ஒரு புதிரை தீர்க்க பல வழிகள் இருந்தாலும், மிகச் சரியான முறையில் வரைந்தால் அதிகமான ஸ்டார்களை வென்று அடுத்தடுத்த லெவல்களுக்குச் செல்லலாம்.

- இதுபோல் மேலும் பல குழந்தைகளுக்கான செயலிகளை அறிமுகப்படுத்தும் `சுட்டி விகடன்' பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

விகடன் ஃப்ளாஷ்பேக்: 2014 தேர்தல்... ஜூ.வி. மெகா சர்வே ரிசல்ட்!

12 நாள்கள்... 90 நிருபர்கள், புகைப்படக்காரர்கள்... தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் சுற்றிச் சுழன்று 25,247 பேரை சந்தித்து எடுத்த மாபெரும் கருத்துக்கணிப்பு இது!

16-வது நாடாளுமன்றத் தேர்தல் திருவிழாவை முன்னிட்டு நாம் இதுவரை எடுத்துவந்த கருத்துக் கணிப்புகளின் வரிசையில் இதுதான் மெகா சர்வே. சுமார் 25,000 மக்களின் நாடித்துடிப்பை அறிவதன் மூலமாக தமிழ் மக்களின் எண்ண ஓட்டத்தை இதன் மூலமாக உணர முடிகிறது. அந்த மெகா சர்வே ரிசல்ட் இப்போது உங்கள் பார்வைக்கு...

விகடன் போஸ்ட்: துரத்தப்படும் பழங்குடிகள், புதையும் தீவு, 'டிக்-டாக்' உடலியலும் உளவியலும்!

இதோ இந்த மெகா சர்வேயில் மட்டும் 25,247 பேரை நாம் சந்தித்தோம். க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில், வாக்குச்சீட்டு டைப்பில் சின்னங்களுடன் அச்சிடப்பட்ட சர்வே படிவங்களுடன் நமது டீம் களமிறங்கியது. `அடுத்த பிரதமர் யார்? உங்கள் வாக்கு யாருக்கு?' என்ற இரண்டே கேள்விகள்தாம் இதில் இருந்தன. பிரதமராக யார் வர வேண்டும் என்பதில் நரேந்திர மோடிக்கு அதிகம் பேர் டிக் அடித்தனர்.

- 2019 நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், 2014-ல் ஜூ.வி. நடத்திய மெகா சர்வே ரிசல்டைத் தேடியபோது கிடைத்த இந்த ஃப்ளாஷ்பேக் பகுதியை முழுமையாகப் பார்க்க க்ளிக் செய்க...