மீண்டும் விற்பனையில் சாதனை படைக்கும் மியூசிக் சிடிகள்! | Revenue from physical CDs and viny records are increasing in US music industry

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (05/03/2019)

கடைசி தொடர்பு:18:15 (05/03/2019)

மீண்டும் விற்பனையில் சாதனை படைக்கும் மியூசிக் சிடிகள்!

 சிடிக்கள் மற்றும் வினைல் ரெக்கார்டுகள்

ஒரு காலத்தில் மக்களிடையே பிரபலமாக இருந்த மியூசிக் சிடிகள் மற்றும் வினைல் ரெக்கார்டுகளின் பயன்பாடு டிஜிட்டல் சாதனங்களின் வருகைக்குப் பின்னர், படிப்படியாகக் குறைந்துபோனது. ஸ்மார்ட்போன்கள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பாடல்களை நேரடியாக இணையதளங்களிலிருந்து டவுன்லோட் செய்து கேட்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு, ஸ்ட்ரீமிங் தளங்கள் வந்த பிறகு டவுன்லோட் செய்வதும் குறையத் தொடங்கியது. ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் மட்டும் இருந்தால் போதும் எவ்வளவு வேண்டுமானாலும் பாடல்களைக் கேட்க முடியும் என்பதுதான் இன்றைய நிலைமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும்கூட மியூசிக் சிடிகள் மற்றும் வினைல் ரெக்கார்டுகளுக்கான இருப்பிடம் என்பது சந்தையில் இன்னும் இருக்கிறது என்று கூறுகிறது ஓர் அறிக்கை.

மியூசிக்

அமெரிக்காவின் RIAA (Recording Industry Association of America) என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த வருடம்  அமெரிக்க இசைச் சந்தையின் வருமானத்தில் ஸ்ட்ரீமிங் தளங்கள் 75 சதவிகித பங்களிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறது. 12 சதவிகித பங்களிப்புடன் அடுத்த இடத்தைப் பிடித்திருப்பது  physical media எனப்படும் மியூசிக் சிடிகள் மற்றும் வினைல் ரெக்கார்டுகள்தான். டிஜிட்டல் டவுன்லோடு என்பது 11 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 


[X] Close

[X] Close