Published:Updated:

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!
விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!
விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

சொதப்பும் சபரீசன்... சீறும் சீனியர்கள்!

`தே.மு.தி.க-வை எப்படியாவது கொண்டுவந்துவிட வேண்டும்' என்று ஸ்டாலின் நினைத்தார். இந்த விஷயத்தில் தன் மருமகன் சபரீசனை மலைபோல் நம்பினார் ஸ்டாலின். ஆனால், தே.மு.தி.க கைநழுவிப்போனது. ஸ்டாலினை மட்டுமல்லாமல்... கட்சியின் சீனியர்களையும் இது கொதிப்படைய வைத்திருக்கிறது." 

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

``ஸ்டாலினைவிட கட்சியின் சீனியர்கள் பலருக்கும் ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கிறது பீ.பி. `கூட்டணிக்குள் பா.ம.க., தே.மு.தி.க என இரண்டு பெரிய கட்சிகளையும் சேர்க்காமல் கோட்டைவிட்டதற்கு, சபரீசனின் கார்ப்பரேட் அணுகுமுறைதான் காரணம். வட மாவட்டங்களிலும், ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் கொங்கு பகுதியிலும் கடுமையான சேதாரங்களைச் சந்திக்க நேரிடும்' என்பதே தி.மு.க சீனியர் தலைவர்களின் கவலையாக இருக்கிறது. கடந்த காலங்களில் கருணாநிதி அமைத்த தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றபோது, அதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் எல்லாம் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளனர். ராஜதந்திரங்களுடன் கூட்டணிக் கட்சிகளுடன் கருணாநிதி வியூகம் வகுக்க... இதர விஷயங்களை எல்லாம் அவரது மனதுக்கு நெருக்கமான சிலர் பார்த்துக்கொண்டனர். ஆனால், இந்த முறை சபரீசன் அண்டு டீம் அவர்களையெல்லாம் அண்டவிடவில்லையாம்."

``பா.ம.க கழன்றுகொண்டதற்கு, சபரீசனின் அணுகுமுறைதான் முக்கியக் காரணம் என்கிறார்கள் சீனியர்கள் சிலர். 'என்னுடன் பேசுவதற்கு தி.மு.க-வில் வேறு தலைவர்களே இல்லையா?' என்று ராமதாஸ் கடுப்பானதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். - இரண்டு அணிகளிலும் களமிறங்கும் கட்சிகள் எவை என்பது முடிவாகிவிட்ட நிலையில், எல்லா தரப்பிலும் வெளியே தெரியாமல் 'உள்ளே' நடந்ததை பரிமாறுகிறார் மிஸ்டர் கழுகு. `கூட்டணி 'பிசினஸ்' - சொதப்பும் சபரீசன்... சீறும் சீனியர்கள்!' எனும் ஜூனியர் விகடனின் மிஸ்டர் கழுகு பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க....

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

ரஜினியின் வலியுறுத்தல்... தமிழில் ரீ-என்ட்ரி!

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

தமிழ்ப் படங்கள்ல நான் நடிக்காம இருந்தாலும், 'பூ ஒன்று புயலானது', 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்' உட்பட என் நிறைய தெலுங்குப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு, பெரிய ஹிட்டானது. இந்த நிலையில், `மன்னன்' படத்துல நடிக்க ரஜினி சார் என்னிடம் வலியுறுத்தினார். பி.வாசு சார் என்கிட்ட கதை சொன்னப்போ, `ரஜினி சாரை நான் அடிக்கிற சீன் மட்டும் வேண்டாம்'னு வலியுறுத்தியும் அவர் ஒப்புக்கலை. `என்னை அடிக்கிற ஒரே தகுதி விஜயசாந்திக்கு மட்டும்தான் இருக்கு'னு ரஜினி சார் சொல்லி, அந்தக் காட்சியில் என்னை நடிக்க வெச்சார். அந்தப் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தேன். 

அப்போ ஒருமுறை சிவாஜி சாரை மீட் பண்ணப்போனேன். `வர்றா பாரு என் வளர்ப்புப் பொண்ணு. தி கிரேட் ஹீரோயின்'னு எல்லோர் முன்னிலையிலும் புகழ்ந்தார். மேலும்,  `மன்னன்' படப் பெயருக்குப் பதிலா, `மன்னி'னு வெச்சிருக்கலாம்னு சொல்லி வாழ்த்தினார். பிறகு, `ராஜஸ்தான்' உட்பட மூணு தமிழ் படங்கள்லதான் என்னால நடிக்க முடிஞ்சது. ஆனா, தமிழ்நாடு என் தாய்வீடு என்பதை எப்போதும் மறக்க மாட்டேன். தமிழ் மக்களின் அன்புக்கு நன்றியுடன் இருப்பேன்.

- தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80'ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. அவள் விகடன் இதழில் `பயம்கிறதே என் அகராதியில் இல்லை!' எனும் தலைப்பில், விஜயசாந்தி தனது 28 ஆண்டுகால சினிமா அனுபவங்களைப் பகிரும் பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

முகிலன் வழக்கு எங்களுக்கு சவால்...

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

 
சூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை என்று ஃபேஸ்புக் பதிவுகளாகத் தொடங்கிய பொறி,  இன்று 'முகிலன் எங்கே?' என்று அவரைத் தேடும் கூட்டியக்கமாக மாறியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் தாக்கல்செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், மார்ச் 4-ம் தேதிக்குள் தமிழகக் காவல்துறை முகிலனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவல்துறையால் அது முடியவில்லை. இதற்கிடையே கூட்டியக்கத்தின் உண்மை அறியும் குழுவும் தாங்கள் கண்டறிந்தது பற்றி இடைக்கால அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதிலும் பெரிதாக எந்தத் தகவல் முன்னேற்றமும் இல்லை. இதுவரை மர்மம் நீடிக்கிறது. 

இதற்கிடையே, 'முகிலன் எங்கே? என்று வெல்ஃபேர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரின் ஃபேஸ்புக் பதிவின்கீழ், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் நாகராஜன், 'சமாதி' என்று பதிவிட்டது, இந்தப் பிரச்னையில் மேலும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அந்த ஆய்வாளரிடமும் விசாரணை நடக்கிறது. - முகிலன் மாயமான விவகாரத்தில் காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் என்னதான் நடக்கிறது என்ற அப்டேட்களை வழங்கும் `முகிலன் வழக்கு எங்களுக்கு சவால்... நூறு கோணங்களில் விசாரணை!' எனும் ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

பாலியல் பலாத்காரம்... பொள்ளாச்சி பயங்கரம்! 

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

பொள்ளாச்சியில் நான்கு இளைஞர்கள், ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதை வீடியோ எடுத்தும் வெளியிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் இப்படி ஒன்று, இரண்டல்ல... நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை அந்தக் கும்பல் சீரழித்து, வீடியோ பதிவு செய்திருக்கும் அதிரவைக்கும் உண்மை வெளிவந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகார் மூலம் இவர்களின் அட்டூழியங்கள் வெளியே வர... ஒட்டுமொத்த பொள்ளாச்சியும் அதிர்ந்துகிடக்கிறது. 

``...அதுல 120-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துச்சு. பள்ளிக்கூடப் பெண்களில் ஆரம்பித்து, கல்யாணம் ஆன பெண்கள்வரை இவர்களிடம் சிக்கிச் சீரழிந்திருக்கிறார்கள். உமாவுக்கு தைரியம் சொல்லி போலீஸில் புகார் கொடுக்கவைத்தோம். அத்தனை வீடியோக்களையும் போலீஸிடம் ஒப்படைத்துள்ளோம்..." 

காதலிக்கிறேன் என்று சொல்லி பெண்களை ஏமாற்றி அழைத்துச்சென்று மிரட்டி, கூட்டாகச் சேர்ந்து அனுபவிப்பதுடன், ஆபாச வீடியோவும் எடுத்துப் பணம் பறித்துள்ளார்கள். சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுவின் வீட்டில்தான் இந்த அக்கிரமங்களை நடத்தியுள்ளனர். திருமணமான பணக்காரப் பெண்கள் பலரும் இவர்கள் வலையில் விழுந்துள்ளதுதான் ஆச்சர்யம். பல லட்சம் கப்பம் கட்டி, தங்கள் குடும்ப மானத்தைக் காப்பாற்றியுள்ளார்கள், பல முக்கியப் புள்ளிகள். - பெண்களின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கும் 'பாலியல் பலாத்காரம்... வீடியோ பதிவு... பணம் பறிப்பு! - பொள்ளாச்சி பயங்கரம்...' எனும் ஜூனியர் விகடன் க்ரைம் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

காஷ்மீர் விவகாரம்... உலகம் யார் பக்கம்?

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

பாகிஸ்தானின் அரசியல் தலைமை இஸ்லாமாபாத்தில் இருக்கிறது. ராணுவத்தின் தலைமையகம் ராவல்பிண்டியில் இருக்கிறது. அங்கு ராணுவத்துக்கே செல்வாக்கு அதிகம். ராணுவம் எடுக்கும் முடிவுகளை வெளியில் சொல்பவர்களாகவே ஆட்சியாளர்கள் இருப்பார்கள். அதனால்தான், 'இங்கு முடிவுகள் இஸ்லாமாபாத்தில் எடுக்கப்படுவதில்லை. ராவல்பிண்டியில் எடுக்கப்படுகிறது' என்று பாகிஸ்தான் மீடியாக்கள் சொல்வதுண்டு. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் ராணுவமும் பணிந்தது. அதனால்தான், 'அபிநந்தனை வாஹா எல்லைக்குக் கூட்டிச் செல்லும்போது வழியில் எந்தப் போராட்டமும் நடக்கக்கூடாது' என ராணுவம் கட்டளை போட்டது. இந்தக் கண்டிப்பான உத்தரவைப் புரிந்துகொண்ட தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் அமைதியாகிவிட்டன.

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் மசூத் அசார், ராவல்பிண்டியில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றுவந்தார். ராணுவத்தின் சிறப்புப் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுவந்த அவரை, அபிநந்தன் விடுதலைக்குப் பிறகு திடீரென ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இடையே அவர் இறந்துவிட்டார் என்றெல்லாம்கூட வதந்திகள் வட்டமடித்தன... - அபிநந்தன் விடுதலைக்கு முன்பும் பின்பும் நிகழ்ந்த சில சம்பவங்களைப் பார்த்தால் புரியும் உண்மையை விவரிக்கிறது 'காஷ்மீர் தாக்குதல் விவகாரம்... - உலகம் யார் பக்கம்?' எனும் ஜூனியர் விகடன் சிறப்பு அலசல் கட்டுரையை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க...

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

நம் உடல்... நம் உரிமை...

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

இன்ஸ்டாகிராமில் `ஐடென்டிட்டி' என்ற பக்கம், மகிழ்ச்சி, சோகம், பரிகாசம், தாழ்வுமனப்பான்மை எனக் கலவையான உணர்வுகளுடன் அனுபவக் கதைகளால் நிரம்பி வழிகிறது. அத்தனை உணர்வுகளுக்கும் மையப்பொருள், பெண்களின் அடையாளமாகப் பார்க்கப்படும் மார்பகங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும், மார்பகங்கள் தொடர்பான பருவ வயது நினைவுகளும் பாலியல் அத்துமீறல் அனுபவங்களும் இருக்கக்கூடும். மனதுக்கும் உடலுக்கும் நெருக்கமான நபர்களிடம்கூடப் பேச முடியாத இந்த விஷயத்தைக் கொட்டித் தீர்க்க, களம் அமைத்துக்கொடுத்திருப்பவர் இந்து ஹரிகுமார். மும்பையைச் சேர்ந்த ஓவியரான இந்து, இதற்கு முன்பும் இதேபோன்ற புரட்சி முயற்சிகளை முன்னெடுத்தவர்.

`டிண்டர்' என்கிற ஆப்பை இந்தியர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்துகொள்ளும் முயற்சியாக, 2016-ம் ஆண்டில் `100 இந்தியன் டிண்டர்டேல்ஸ்' என்ற புராஜெக்டை ஆரம்பித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக டேட்டிங், பாலியல், மாதவிலக்கு குறித்த மக்களின் கருத்துகளை வெளிப்படையாக விவாதிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். அந்தக் கதைகளை ஓவியங்களாக வரைந்து, தன் இன்ஸ்டா கணக்கில் ஏற்றியிருக்கிறார். ஜெர்மனியில் ஒரு மியூசியத்தில் நடந்த `லவ் த்ரூ த ஏஜஸ்' என்ற கண்காட்சியில், இவருடைய சில ஓவியங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடனான உரையாடலில்தான் அடுத்த முயற்சி ஆரம்பமானது. அதுகுறித்தும் அவரது மொழியிலேயே விரிவாகச் சொல்லும் `அந்தப் பார்வையே மாற்றத்தை ஏற்படுத்தும்!' எனும் அவள் விகடனின் நேர்காணல் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.... 

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

சுட்டிகளுக்காக 'இவர்கள்' 

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

> தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர், முருக பூபதி. குழந்தைகளிடம் கதைகளைக் கேட்டு, அவர்களையே எழுதவைத்து புத்தகமாக்கியவர். `கதை சொல்லும் கதை' என்ற புத்தகமும் எழுதியிருக்கிறார்.

> குழந்தைகளுக்கான கதை சொல்லி, குமார் ஷா. இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுவதை லட்சியமாகக் கொண்டுள்ளார். அவரது சைக்கிள் பெயர், `கருப்பி'. 

> குழந்தைகளுக்காக கதை சொல்லல், விளையாட்டு என முழு நேரமும் இயங்குபவர், இனியன். இவர், 'பல்லாங்குழி' என்ற அமைப்பின் மூலம் 150-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை நடத்துகிறார்.

> தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்குச் சென்று ஒரிகாமி கற்றுத்தருபவர், தியாக சேகர். இதுவரை 1000 பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 

- குழந்தைகளுக்குப் பல வகையில் தங்களை அர்ப்பணித்து வரும் இவர்களைப் போலவே மேலும் பலரையும் அடையாளம் காட்டும் சுட்டி விகடன் பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க....

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

`பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்' என்று ஒரு பழமொழி. இதற்கு ஏதேதோ அர்த்தங்கள் சொல்கிறார்கள். ஆனால், கல்யாணத்தின்போது இதற்கு வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொருளே வேறு.

மணப்பெண் - மணமகள் இருவருமாகச் சேர்ந்து அக்னி பகவானிடம் வேண்டுகிறார்கள். அப்படி வேண்டுவது பதினாறு விஷயங்களை. அவற்றை அக்னி பகவான் அருள, இவர்கள் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கிறார்கள்.

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

சரி, அந்தப் பதினாறு வேண்டுதல்கள் என்னென்ன?

பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கல்யாணம் வரையிலும் உள்ள கால இடைவெளியை மூன்று பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு தேவன் அவளுக்குப் பாதுகாவலனாக இருக்கிறான் (எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் இது பொருந்தும்). முதல் பிரிவின் பாதுகாவலன் - சோமன்; இரண்டாவது - கந்தர்வன்; மூன்றாவது - அக்னி.

அக்னி தேவதைக்குப் பிறகுதான் அடுத்த காப்பாளனான கணவனை அந்தப் பெண் அடைகிறாள். தனக்கு முன்னதாக காப்பாளனாக இருந்ததாலும் திருமாங்கல்யத்தின் தேஜஸுக்குக் காரணமாக இருப்பதாலும் அக்னியிடம், 'நீ காப்பாற்றி வந்த பெண்ணை என் வசம் கொடுத்திருக்கிறாயே... என் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற எனக்கு சில சௌகரியங்களைச் செய்து கொடு' என்று வேண்டுகிறான். அந்தக் கோரிக்கைகள் பதினாறு. அந்தப் பதினாறு பேறுகளை வரிசையாக அடுக்கும் 'திருமண மந்திரங்கள் சொல்வதென்ன..?' எனும் சக்தி விகடன் பகுதியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க....>

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

ஃப்ளாஷ்பேக்: 100 நாள்களில் மோடி என்ன செய்ய வேண்டும்?

25.5.2014 தேதியிட்ட நாணயம்

இந்தியா வென்றது. இனி நல்ல நாள்கள் எதிர்நோக்கி உள்ளது எனத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ட்விட் செய்தார் மோடி. பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும், வட்டி விகிதத்தையும் குறைக்க வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பல்வேறு அரசு மற்றும் தனியார் திட்டங்களை முடுக்கிவிட வேண்டும் எனப் பல்வேறு சவால்கள் மோடியின் முன்பு உள்ளது.

``வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். உலக நாடுகளில் ஆங்காங்கு பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப் பணத்தை அந்நாடுகள் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்கும்படியாகச் செய்ய வேண்டும்..."

விகடன் போஸ்ட்: முகிலனும் சவால்களும், சபரீசன் மீதான சீற்றம், பொள்ளாச்சி 'பாலியல்' பயங்கரம்!

``இந்தியாவில் 25 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது மோடியின் கடமை. இந்தியாவில் படித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், வேலை செய்யும் திறன் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. இந்த எண்ணிக்கையை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்."

``பயங்கரவாதம் தலையெடுக்க விடாமலிருப்பது மோடி அரசின் தலையாய கடமையாகும். அந்தப் பொறுப்பு ஒருமுகமாக இல்லாமல் இப்போது பல அமைப்புகளிடம் சிதறிக்கிடக்கிறது. வழிமுறைகளையும் இன்னும் சீர்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது."

- 2014-ல் மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்ற தருணத்தில், அடுத்த 100 நாள்களில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் நாணயம் விகடன் கேட்டது. மத்திய அரசாங்கம் உடனே செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் பட்டியல் போட்டுத் தந்தார்கள். மேலே இருக்கும் மூன்று பாராக்களும் அவற்றில் சில. 25.5.2014 தேதியிட்ட நாணயம் விகடன் இதழில் வெளியான '100 நாள்களில் மோடி என்ன செய்ய வேண்டும்?' என்ற பகுதியை முழுமையாகப் படித்து, அவற்றை மோடி தனது முழுமையான ஆட்சி காலத்திலாவது செய்தாரா என்பதை நீங்களே அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க