Published:Updated:

சேமிப்பு எனும் ஒழுக்கம், உத்தரவாதமான எதிர்காலம்!

சேமிப்பு எனும் ஒழுக்கம், உத்தரவாதமான எதிர்காலம்!
சேமிப்பு எனும் ஒழுக்கம், உத்தரவாதமான எதிர்காலம்!

உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய பட்ஜெட் போடுகிறீர்களா? ஆம் என்றால் இதைத் தொடர்ந்து படியுங்கள், இல்லை என்றால் கண்டிப்பாக தொடர்ந்து படியுங்கள்!

உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் முதலிய அத்தியாவசிய தேவைகளுக்கே நம் பட்ஜெட்டில் முதல் ஒதுக்கீடு இருக்கவேண்டும். இது தவிர  திருமணம், பிள்ளைகளின் உயர்படிப்பு, பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கைக்குத் தேவையான பணம் ஆகியவை நீண்ட கால தேவைகளாக இருக்கின்றன, இவற்றுக்கும் பணம் ஒதுக்குவது அவசியம், எப்படி எனப் பார்ப்போம்...

சேமிப்பு எனும் ஒழுக்கம், உத்தரவாதமான எதிர்காலம்!

குறுகிய கால தேவையான வீட்டு வாடகை, அன்றாட உணவு, ஸ்கூல்/காலேஜ் பீஸ், எரிபொருள்/போக்குவரத்து செலவு ஆகியவற்றுக்குத் தேவையான பணத்தை திட்டமிட்டு செலவழிக்கும் நாம், நமக்குப் பிடித்த பொருள்களை வாங்குவதிலும், கேளிக்கை விஷயங்களில் ஈடுபடுவதிலும் மீதி பணத்தை தாராளமாக செலவு செய்கிறோம், இதன் முடிவு, மாத இறுதியில் சில தேவைகள் ஏற்படும்போது இறுக்கும் பண நெருக்கடி.

எப்போதாவது பண நெருக்கடியில் மாட்டிக்கொள்வது நம் கையை மீறியது, ஆனால் அடிக்கடி பண நெருக்கடியில் மாட்டிக்கொள்கிறோம் என்றால், ஒன்று நமது பணத் தகுதிக்கு மீறி செலவழிக்கிறோம் அல்லது நம் பணம் எங்கே செல்கிறது என்கிற அறிவில்லாமல் இருக்கிறோம் என்பதே அர்த்தமாகும். கைநிறைய சம்பாதிப்பவர்களும் சல்லித்தனமாய் செலவழித்து நெருக்கடியில் மாட்டிக்கொள்வதற்கு நிதி அறிவின்மை மற்றும் எதிர்காலம் பற்றிய சீரிய நோக்கம் இல்லாமையே காரணமாகும்!

சேமிப்பு எனும் ஒழுக்கம், உத்தரவாதமான எதிர்காலம்!

நிதி நிபுணர்கள் தரும் மாத பட்ஜெட் ஃபார்முலா!

வீட்டு வாடகை 30%; மளிகை மற்றும் குடும்பச் செலவுகள் 24%; கல்வி - 6%, மருத்துவம் 2%, டெர்ம் இன்ஷ்யூரன்ஸ் 4%, ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் 2%,  ஷாப்பிங் - 2%, சுற்றுலா - 4%; அவசரத் தேவைக்கு 4%; பொழுதுபோக்கு 2%, சேமிப்பு 20% - மொத்தம் 100%. இதில் வீட்டுக்கடன் & வாகனக் கடன் உள்ளோர், 40% கடன்களுக்கும், 20% குடும்பச் செலவுக்கும், 15% சேமிப்புக்கும் ஒதுக்கலாம்! (*இந்த % ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி சிறிதளவு மாறுபடலாம்).

சேமிப்பை பயன்படுத்துவது எப்படி?

அவசரத் தேவைக்கென பணம் ஒதுக்காததும், சேமிப்பு இல்லாததும்தான் பண நெருக்கடிக்கு காரணங்கள். பணத்தை வங்கியில் சேமித்தால், அதற்கு வட்டி கிடைக்கும், சேர்த்த பணத்தில் நமக்குப் பிடித்த பொருள்களை வாங்கலாம், எக்ஸ்ட்ரா வட்டியை பிற காரியங்களுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் நாமோ கடனில் பொருள்களை வாங்கி, விலைக்கு மேல் வட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எனவே பண விஷயத்தில் சேமிப்புதான், நாம் கற்கவேண்டிய ஒழுக்கங்களில் முதன்மையாக இருக்கிறது.

சேமிப்பு தேங்கக்கூடாது, பெருகவேண்டும். எனவே சேமிப்பை முதலீடு செய்வதே சிறந்தது. வங்கிகளில் சேமித்தால் அதிகபட்சம் 7-8% வட்டி மட்டுமே கிடைக்கும், ஆனால் 10 - 15% சதவீதத்துக்கும் மேல் லாபம் கிடைக்க ஒரே வழி பங்குச் சந்தையில் முதலீடு செய்வதேயாகும். ஆனால் பங்குச்சந்தை முதலீட்டுக்கான அறிவோ அனுபவமோ நேரமோ என்னிடம் இல்லையே எனக் கூறுபவர்கள், நேரடியாக முதலீட்டில் இறங்காமல் Passive Investment மேற்கொள்ளலாம்!

சேமிப்பு எனும் ஒழுக்கம், உத்தரவாதமான எதிர்காலம்!

கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்

பங்குச் சந்தையில் நம் சேமிப்பை முதலீடு செய்ய சிறந்த வழியாக இன்று மியூச்சுவல் ஃபண்டுகள் திகழ்கின்றன. மிக்க அனுபவம் வாய்ந்த நிதி ஆலோசகர்கள் கொண்ட குழுவுக்கு கீழ் செயல்படும் நம்பிக்கையான பல ஃபண்ட் ஹவுஸ்கள் இருக்கின்றன. இவை நாம் செய்யும் முதலீட்டை, நல்ல கம்பெனி பங்குகளில் முதலீடு செய்து, குறைந்தபட்சம் 3 வருடங்களில் நல்ல லாபத்தை ஈட்டித் தருகின்றன.

மியூச்சுவல் ஃபண்டுகளில் இப்போதிலிருந்தே, Growth ஆப்ஷனில் மாதாமாதம் நாம் செலுத்தும் சிறிய தொகை 10 - 15 வருடங்கள் கழித்து மகள்/மகனின் திருமணம், குழந்தைகளின் உயர்படிப்பு, ஓய்வுக்குப் பிறகான நிதித் தேவை ஆகியவற்றுக்கு ஏற்ற பணத்தை நமக்குப் பெற்றுத் தருகின்றன. கூட்டு வட்டி முறையில் நம் சேமிப்பும் பல்கிப் பெருகுகிறது.

இது தவிர, ஆண்டு இறுதியில் நாம் கட்டும் வருமான வரியையும் ELSS ஃபண்டுகளில் முதலீடு செய்து பல ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். செய்யும் முதலீட்டுக்கு வரிச் சலுகை; நல்ல லாபம்; அந்த லாபத்துக்கும் ஓராண்டுக்கு மேல் உள்ள முதலீட்டில் கிடைக்கும் மூலதன ஆதாயம் ஒரு லட்சத்துகுள் இருந்தால் வரி இல்லை(ஒரு லட்சத்திற்கு மேலான மூலதன ஆதாயத்துக்கு 10 சதவிகித வரி) என்கிற மூன்று அற்புதமான வசதிகள் இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைப் பிற முதலீட்டு முறைகளில் இருந்து தனித்துவப்படுத்துகின்றன.

முதலீடு செய்து, உங்களின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள விருப்பமா? எந்த ELSS மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்யலாம் என அறிந்துகொள்ள கீழ்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

விவரங்களைப் பெற