டாடா பஸ்ஸார்டு... மஹிந்திரா XUV 5OO எஸ்யூவிக்குப் போட்டி! | Tata Unveils Buzzard SUV at 2019 Geneva Motor Show; To Rival XUV 5OO & MG Hector

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (07/03/2019)

கடைசி தொடர்பு:14:00 (07/03/2019)

டாடா பஸ்ஸார்டு... மஹிந்திரா XUV 5OO எஸ்யூவிக்குப் போட்டி!

H5X எப்படி ஹேரியர் ஆக வந்ததோ, அதேபோல H7X தற்போது பஸ்ஸார்டு (Buzzard) ஆக வெளிவந்திருக்கிறது. 2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ப்ரீமியம் எஸ்யூவி, இந்தியாவில் வேறு பெயரில் அறிமுகமாகும். தவிர இது நம் நாட்டில், டாடாவின் விலை அதிகமான காராக பொசிஷன் செய்யப்படவிருக்கிறது. 5 சீட்டர் ஹேரியர் போலவே, 7 சீட்டர் பஸ்ஸார்டு எஸ்யூவியும் OMEGA ப்ளாட்ஃபார்மிலே தயாரிக்கப்பட உள்ளது.

 

பஸ்ஸார்டு

 

இரண்டுக்கும் 2,741மிமீ வீல்பேஸ் பொதுவானது என்றாலும், ஹேரியரைவிட 62 மிமீ கூடுதல் நீளம் மற்றும் 80 மிமீ கூடுதல் உயரத்தைக் கொண்டிருக்கிறது பஸ்ஸார்டு. மொத்தத்தில் இது 4,661 மிமீ நீளம்/ 1,894 மிமீ அகலம்/1,786 மிமீ உயரம் எனும் அளவுகளைக் கொண்டிருக்கிறது. காரில் வழங்கப்பட்டிருக்கும் தட்டையான 3-வது வரிசை இருக்கையில், Head Restraints உள்ளது ப்ளஸ். 

 

ஹேரியர்

 

முன்பக்கம் தொடங்கி C-பில்லர் வரை ஹேரியர் போலவே பஸ்ஸார்டு இருந்தாலும், ரூஃப் ரெயில் - பெரிய Rear Quarter Glass - 19 இன்ச் அலாய் வீல்கள் புதிது. இந்திய மாடலில் 18 இன்ச் அலாய் வீல்கள் இருக்கும் எனத் தெரிகிறது. ஹேரியரில் இருக்கும் அதே 2.0 லிட்டர் Kryotec டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணிதான் பஸ்ஸார்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது 170bhp பவரையும், கூடுதலாக 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் கொண்டிருக்கும்.

 

ஜெனிவா மோட்டார் ஷோ 2019

 

இந்தியாவில் ஆல்ட்ரோஸ் காருக்கு அடுத்தபடியாக, இந்த ப்ரீமியம் எஸ்யூவியைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது டாடா மோட்டார்ஸ். MG ஹெக்டர் மற்றும் மஹிந்திரா XUV 5OO ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது பஸ்ஸார்டு. MG ஹெக்டரிலும் இருப்பது, இந்த டாடா எஸ்யூவியில் இருக்கும் அதே டர்போ டீசல் இன்ஜின்தான்! 

 

டாடா மோட்டார்ஸ்

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close