17.7 - 22.3 லட்சம் ரூபாயில் ஹோண்டா சிவிக் அறிமுகம்! #AllNewCivic #Honda | 10th Generation Honda Civic arrives in Style, Priced at 17.7 to 22.3 Lakhs

வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (07/03/2019)

கடைசி தொடர்பு:19:07 (07/03/2019)

17.7 - 22.3 லட்சம் ரூபாயில் ஹோண்டா சிவிக் அறிமுகம்! #AllNewCivic #Honda

சிவிக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 1.8 லிட்டர் i-Vtec பெட்ரோல் இன்ஜின் - 7 Step CVT, 141bhp - 17.4kgm - 16.5kmpl ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் 10-வது தலைமுறை சிவிக் எக்ஸிக்யூட்டிவ் செடானை, 17.7-22.3 லட்சம் ரூபாய்க்கு (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா. ஏழு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நம் ஊரில் கால் பதித்திருக்கும் இந்த கார், 5 வேரியன்ட்கள் - 2 இன்ஜின்/கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் - 5 கலர்களில் (Platinum White Pearl, Radiant Red Metallic, Modern Steel Metallic, Lunar Silver Metallic, Golden Brown Metallic) களமிறக்கியுள்ளது.

சிவிக்

சிவிக்கின் அனைத்து வேரியன்ட்டிலும் நான்கு காற்றுப்பைகள், ABS-EBD, வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி அசிஸ்ட், Agile Handling Assist, ஆட்டோ பிரேக் ஹோல்டு உடனான எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பார்க்கிங் சென்சார் உடனான ரிவர்ஸ் கேமரா, அலாய் வீல்கள் இருப்பது பிளஸ். டாப் வேரியன்ட்களான ZX CVT மற்றும் ZX MT-ல் இண்டு காற்றுப்பைகள் கூடுதலாகக் கிடைக்கின்றன. ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலான்ட்ரா, டொயோட்டா கரோலா ஆல்ட்டீஸ் ஆகிய எக்ஸிக்யூட்டிவ் செடான்களுடன் போட்டிபோடுகிறது புதிய ஹோண்டா சிவிக்.

ஹோண்டா

இந்த எக்ஸிக்யூட்டிவ் செடானின் புக்கிங், கடந்த மாதத்திலேயே தொடங்கிவிட்டது. 31,000 ரூபாய் செலுத்தி, ஹோண்டா டீலர்களில் காரை புக் செய்யலாம். ASEAN NCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கும் 10-வது தலைமுறை சிவிக்கை, சிவப்பு - வெள்ளை - பிரவுன் ஆகிய நிறங்களில் வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். நொய்டாவில் அமைந்திருக்கும் ஹோண்டாவின் கார் தொழிற்சாலையில், இதன் உற்பத்தி ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது.

Honda

இந்த நிறுவனத்தின் அதிக மைலேஜ் தரக்கூடிய டீசல் கார்கள் வரிசையில் சிட்டியை (அராய் மைலேஜ்: 25.6Kmpl) வீழ்த்திவிட்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது சிவிக்! போட்டி கார்கள் அனைத்துமே இதைவிட பவர்ஃபுல்லாக இருந்தாலும், எதிர்பார்த்தபடியே மைலேஜில் இந்த ஹோண்டா கார் முன்னிலைவகிக்கிறது. எக்ஸிக்யூட்டிவ் செடான் செக்மென்ட்டில் எலான்ட்ராவே கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க காராக இருந்தாலும், ஸ்டைலான சிவிக்கின் வரவால் இந்தப் பிரிவில் பலத்த அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கின்றன.

Civic

ZX வேரியன்ட்களில் ஆட்டோமேட்டில் LED ஹெட்லைட்ஸ், LED DRL, ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் உள்ளலங்காரம், பவர்டு டிரைவர் சீட், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், Lane Watch கேமரா சிஸ்டம் (செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதி) என அதிக சிறப்பம்சங்கள் உள்ளன. சிவிக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 1.8 லிட்டர் i-Vtec பெட்ரோல் இன்ஜின், 7 Step CVT, 141bhp - 17.4kgm - 16.5kmpl ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

எக்ஸிக்யூட்டிவ் செடான்

இதுவே 1.6 லிட்டர் i-Dtec டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு MT அமைப்பு என்றால், அது 120bhp - 30kgm - 26.8kmpl ஆகியவற்றைக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட 8-வது தலைமுறை சிவிக் உடன் ஒப்பிடும்போது, அளவில் வளர்ந்திருக்கிறது புதிய 10-வது தலைமுறை சிவிக். ஆனால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அளவில் பெரிய வித்தியாசமில்லைதான்.

காரின் விலைகள்...

Civic 1.8 V CVT   - 17.70 லட்சம் ரூபாய்
Civic 1.8 VX CVT - 19.20 லட்சம் ரூபாய்
Civic 1.8 ZX CVT - 21.00 லட்சம் ரூபாய்
Civic 1.6 VX MT   - 20.50 லட்சம் ரூபாய்
Civic 1.6 ZX MT   - 22.30 லட்சம் ரூபாய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close