Published:Updated:

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 
விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 
விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

"சேலை இப்போது... டோக்கன் எப்போது?"

பட்டுக்கோட்டையில் டாக்டர் வெங்கடேஷின் மைத்துனர் ஜவஹர்பாபு ஏற்பாட்டின் பேரில், அ.ம.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைக் கூட்டுவதற்காக, 'நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு சேலை இலவசம்' என்றனர், நிர்வாகிகள். இதனால், பெண்கள் குவிந்துவிட்டார்கள். சொன்னது போலவே கூட்டம் முடிந்த பிறகு, ஒவ்வொருவருக்கும் புடவை கொடுத்தனர். புடவைகள், வாக்குகளாக மாற வேண்டும் என அ.ம.மு.க-வினர் கவலைப்பட்டுக்கொண்டிருக்க, கூட்டத்துக்கு வந்த பெண்களோ, "புடவை எல்லாம் சரி... இருபது ரூபாய் டோக்கன் எப்போ தருவீங்க" என்று கேட்டுச் சென்றார்களாம். இதேபோல தஞ்சாவூர் கபிஸ்தலத்தில் அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு, சில்வர் குடம் தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், மேடையில் சில பெண்களுக்கு மட்டுமே குடங்கள் கொடுத்துவிட்டு, 'மற்றவர்கள், அழைத்துவந்த நிர்வாகிகளிடம் குடங்களை வாங்கிக்கொள்ளலாம்' என்று கூறிவிட்டார்கள்!

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

- இதேபோல் களம் இறங்கும் கதர் வாரிசுகள்!, "மெகா கூட்டணி அல்ல...", டெல்டாவுக்கு 300 வேட்பாளர்கள்!, மோடி கூட்டத்தை புறக்கணித்த அன்வர்ராஜா!, கடலூரில் கட்டிஉருளும் அ.தி.மு.க!, நாஞ்சிலை அழைக்கும் சேகர்பாபு!, வடிவேலு பாணி கலாய்! என பல தலைப்புகளில் எட்டுத் திசைகளில் இருந்தும் சுவாரசியமான தேர்தல் கள நிலவரத்தைத் தரும் ஜூனியர் விகடனின் 'எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்' பகுதியை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

நிலையான லாபம் பெற ஏழு வகையான முதலீடுகள்

சமீபத்தில் வெளியான நமது ஜி.டி.பி குறித்த புள்ளிவிவரங்கள் நம் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைந்து வருவதையே தெளிவாகக் காட்டுகிறது.  பொருளாதாரத்தின் வளர்ச்சி தான் பங்குச் சந்தைக்கு அடிப்படை என்கிறபோது, பங்குச் சந்தையும் ஏற்ற இறக்கமாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. கடந்த சில ஆண்டுகளில் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கிய பெரும்பாலானவர் களின் போர்ட்ஃபோலியோ தற்போது சிறிது நஷ்டத்திலோ அல்லது குறைந்த லாபத்திலோ இருக்கும். இப்போது உருவாகி யிருக்கும் மோசமான பொருளாதாரச் சூழல் இன்னும் சில மாதங்களில் மாறும் பட்சத்தில், நமது சந்தையும் நல்ல நிலைக்கு வந்துவிடும். அப்போது நம்முடைய முதலீடும் நல்ல லாபம் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

இன்றுள்ள சூழ்நிலையில், அதிக வருமானம் பெற வேண்டுமெனில், பங்குச் சந்தை முதலீடு என்ற ஒன்றை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், பல வகையான முதலீடுகளில் அஸெட் அலோகேஷன் முறைப்படி முதலீடு செய்ய வேண்டும். அஸெட் அலோகேஷன்படி  நீங்கள் முதலீடு செய்யும்போது, அதீதமான வருமானத்தை உங்களால் எதிர்பார்க்க முடியாது என்றாலும், அதிக ரிஸ்க்கினைச் சந்திக்க வாய்ப்பு இல்லை என்பது முக்கியம். 

அந்த வகையில், அஞ்சலக திட்டங்கள்/ பிரதம மந்திரி திட்டங்கள்/ ஆனுட்டி, வங்கி டெபாசிட்டுகள், ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் டெபாசிட்டுகள், கம்பெனி டெபாசிட்டுகள், கடன் ஃபண்டுகள், இடம் / வீட்டு வாடகை மற்றும் தங்கம் / வெள்ளி என ஓரளவுக்கு நிலையான லாபம் பெற ஏழு வகையான முதலீடுகள் குறித்து விரிவாக வழிகாட்டுகிறது நாணயம் விகடன். அந்தக் கவர் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க:

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

"எனக்குப் பிடிச்சமாதிரி ஒருத்தர் வருவார்!" 

"பிரபல ஹீரோயின், பிரபல இயக்குநரின் மனைவி... இந்த அடையாளத்திலிருந்து வெளியேறி, இப்போ தனியா இயங்குறீங்க... அது எவ்வளவு சவாலான விஷயமா இருக்கு?" 

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

"ரொம்ப கஷ்டமா இருந்தது. தனித்துவிடப்பட்ட மாதிரி உணர்வு. மனசு ஒன்றுபடாம, ரெண்டுபேரும் சேர்ந்து வாழ்ந்து ஏன் நோகடிச்சுக்கணும். அதனால, வந்துட்டேன். அடுத்து என்ன பண்ணப் போறோம்னு தெரியாம, மறுபடியும் ஜீரோவுல இருந்து வாழ்க்கையைத் தொடங்கணும். அதுக்கு எனக்குக் கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு. தனியா வந்த பிறகு எனக்குள்ள குழப்பங்கள் இருந்துச்சு. அந்தக் குழப்பத்துக்கும் தனிமைக்கும் தீர்வு... மறுபடியும் எனக்குப் பிடிச்சதைப் பண்றதுதான்னு முடிவெடுத்தேன். பிடிச்ச வேலையைச் செஞ்சா எல்லாமே மறக்கும் இல்லையா... இப்போ, பழசையெல்லாம் நினைக்கிற அளவுக்கு நேரமில்லை."

- '7ஜி ரெயின்போ காலனி', 'காதல் கொண்டேன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றவர், சோனியா அகர்வால். பிறகு, இயக்குநர் செல்வ ராகவனைக் காதல் திருமணம் செய்தார். சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய, சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தார், சோனியா. மீண்டும் சினிமாவுக்கு வந்தவர், இப்போது நான்கு படங்களில் பிஸி. ஆனந்த விகடனுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் நிறைய பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். "எனக்குப் பிடிச்சமாதிரி ஒருத்தர் வருவார்!" எனும் அந்தப் பேட்டியை முழுமையாக வாசிக்க:

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

"பெரிய மனிதர்களை தேர்தல் நேரத்தில் தோலுரிப்பேன்!"

''நிர்மலாதேவி வழக்கில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?''

''என்னுடைய கட்சிக்காரப் பெண் ஒருவர், வழக்கு ஒன்றில் மதுரை பெண்கள் சிறையில் இருந்தபோது, நிர்மலாதேவியுடன் பேசியிருக்கிறார். அப்போதுதான் நிர்மலாதேவி யாருக்காகவோ கருவியாகச் செயல்பட்டிருக்கிறார்; கடைசியில் அனைத்துப் பழிகளையும் அவரே சுமக்கிறார்; சிறைக்குள் வைத்துப் பலவிதங்களில் மிரட்டப்படுகிறார் என்பது எல்லாம் தெரிந்தது. மேலும், தனக்கு வாதாட நம்பகமான வழக்கறிஞர் வேண்டும் என்று என் கட்சிக்காரரிடம் கூறியிருக்கிறார். அப்போது, என் கட்சிக்காரர் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதற்குப் பின்பு நான் சிறைக்குச் சென்று பார்த்தேன். நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தேன். நிர்மலாதேவி உட்பட மூன்று பேருடன் இந்த வழக்கை முடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. இந்த விவகாரத்துக்குப் பின்னால் உள்ள முக்கியப் புள்ளிகள் மறைக்கப்பட்டிருக் கிறார்கள். இதை அம்பலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து ஆஜராக முடிவெடுத்தேன்.''

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

- நிர்மலாதேவிக்காக ஏற்கெனவே இரண்டு வழக்கறிஞர்கள் ஆஜராகி வந்த நிலையில், சமீபகாலமாகப் பசும்பொன் பாண்டியன் ஆஜராகத் தொடங்கிய பின்புதான் வழக்கில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஜூனியர் விகடன் இதழுக்காக அவர் அளித்த 'நிர்மலா தேவி விவகாரம்... பெரிய மனிதர்களை தேர்தல் நேரத்தில் தோலுரிப்பேன்!' எனும் பேட்டியை முழுமையாக வாசிக்க:

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

இனி ஸ்பெஷல் அலவன்ஸுக்கும் 12% பி.எஃப் சந்தா!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் 1952'-ல்  (Employees Provident Fund - EPF) வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தம் ஒன்றைத் தீர்ப்பாக வழங்கி, ரூ.15,000-க்குக் கீழ் மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களைக் கௌரவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.  

தற்போது, அடிப்படைச் சம்பளம் (Basic wages) அகவிலைப்படி மற்றும் உணவுச் சலுகைக்கான பணமதிப்பு (Cash value of food concession) ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 12% மட்டுமே இ.பி.எஃப் நிதியத்துகான மாதச் சந்தாவாக உள்ளது. மாதச் சம்பளம் ரூ.15,000-க்குகீழ் உள்ளவர்களுக்கு, இனி இவற்றுடன் சிறப்புப் படியையும் (Special Allowance) சேர்த்து, இ.பி.எஃப்-க்கான 12% சந்தா கணக்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. 

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

இந்த வழக்கு தொடங்கியது 2011-ல்; தீர்ப்பு இறுதியானது 28.2.2019-ல். இ.பி.எஃப் சந்தாவைக் குறைத்துக்கொள்வதற்காகவே அடிப்படைச் சம்பளமானது (Basic Wages) பல்வேறு அலவன்ஸுகளாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது. எனவே, ஸ்பெஷல் அலவன்ஸ் என்பது சம்பளத்தில் ஒரு பகுதிதான். இதையும் சேர்த்துதான் சந்தா கணக்கிடப்பட வேண்டும் என்பதே தீர்ப்பு. 

இருபது பணியாளர்களாகக் கொண்ட அனைத்து நிறுவனப் பணியாளர்களுக்கும் இந்தத் தீர்ப்பு பயன்தரும் என்பது முக்கியமான விஷயம். இந்தத் தீர்ப்பினைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கும் 'உச்ச நீதிமன்றத்தின் உன்னதத் தீர்ப்பு... இனி ஸ்பெஷல் அலவன்ஸுக்கும் 12% பி.எஃப் சந்தா!' எனும் நாணயம் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க :

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

தென்னந்தோப்பில் சிப்பிக் காளான் வளர்ப்பு... தினமும் ரூ. 2,000 லாபம்!

தென்னந்தோப்பில் சிப்பிக்காளான் பண்ணை அமைத்து நல்ல வருமானம் எடுத்துவருகிறார், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரீத்தா ஆரோக்கியமேரி. 

"தினமும் நாங்க 15 பெட்கள் போட்டுக் கொட்டகைக்குள்ள தொங்கவிடுறோம். அது மூலமா, தினமும் 10 கிலோவிலிருந்து 20 கிலோ வரை காளான் கிடைக்குது. ஒரு மாசம் கிடைக்கிற மகசூலைக் கணக்குப் பண்ணுனா... சராசரியா தினமும் 15 கிலோவுக்குக் குறையாமக் கிடைச்சுடும். நாங்க, 150 கிராம் கொண்ட பாக்கெட் 30 ரூபாய்னு (ஒரு கிலோ 200 ரூபாய்) விற்பனை செய்றோம். வியாபாரிகளுக்கும் அதே விலைக்குத்தான் கொடுக்குறோம். அந்த வகையில தினமும் 3,000 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைச்சுடுது.

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

காளானுக்கு முக்கிய மூலப்பொருளான வைக்கோலுக்கு எங்களுக்குப் பெரிய செலவு கிடையாது. எங்க பகுதியிலயே அதிகமா நெல் விளையுறதால ரொம்பக் குறைவான விலைக்குக் கிடைச்சுடுது. அதில்லாம நாங்க காளான் வளர்ப்புக்குனு வைக்கோல் வாங்குகிறதில்லை. மாடுகளுக்கு வாங்குற வைக்கோல்லதான் காளான் வளர்ப்புக்கு எடுத்துக்குறோம்..." என்கிறார்.

- பசுமை விகடனின் 'பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்' தொடரில் சிப்பிக் காளான் வளர்ப்பு குறித்த ஆரோக்கியமேரியின் அனுபவங்களையும் வெற்றிச்சூத்திரங்களையும் உள்ளடக்கிய 'தென்னந்தோப்பில் சிப்பிக் காளான் வளர்ப்பு... தினமும் ரூ. 2,000 லாபம்!' எனும் பகுதியை முழுமையாக வாசிக்க:

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

வேகன் - R - முன்பைவிட வேகமா போகலாம்!

இந்தியாவில் அது அறிமுகமான நாள் தொடங்கி, வேகன்-R பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் காரின் அளவுகளை மட்டும் மாருதி சுஸூகி மாற்றியதேயில்லை. ஆனால் இப்போது களமிறங்கி இருக்கும் வேகன்-R-ல், இந்த அடிப்படை அம்சங்கள் மாறியிருக்கின்றன. அகலத்தில் 150 மிமீ-யும், நீளத்தில் 150 மிமீ-யும், வீல் பேஸில் 35 மிமீ-யும் இப்போது கார் வளர்ந்திருக்கிறது. எனவே புதிய வேகன்-R-ன் ஸ்டைலை மாற்ற, மாருதி சுஸூகி மெனக்கெட்டிருக்கிறது.

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

ஆனால் அதேசமயம், 'டால் பாய்' டிசைன் என்ற அடையாளத்தையும் கார் இழந்து விடவில்லை. இதன் முகப்பு, தற்போது சற்றே உப்பலாகத் தெரிகிறது. அழகான அம்புகள்போல ஹெட்லைட்ஸ் மாறியிருக் கின்றன. சிமெண்ட் ஸ்லாப் போல இருந்த பக்கவாட்டு ஸ்டைலிங்கை, புதிய க்ரீஸ் கோடுகள் மாற்றியிருக்கின்றன. வீல் ஆர்ச்சுகளும் காருக்குப் புதிய அடையாளத்தைக் கொடுக்கின்றன. அதே போல B&C பில்லர்களுக்குக் கறுப்பு வண்ணம் கொடுக்கப் பட்டிருப்பதால், 'ஃப்ளோட்டிங் ரூஃப்' தோற்றமும் கிடைக்கிறது. டெயில் லைட்ஸ், ஹோண்டா CR-Vயை நினைவுப்படுத்துகின்றன. அலாய்வீல் கிடையாது என்பதால்,  14 இன்ச் டயரும் காரின் தோற்றத்தைத் தூக்கிக்கொடுக்க உதவவில்லை.

- ஃபர்ஸ்ட் டிரைவ் அனுபவத்துடன் மாருதி சுஸூகி வேகன்-R-ன் ப்ளஸ், மைனஸ்களை அடுக்கும் 'வேகன் - R - முன்பைவிட வேகமா போகலாம்!' எனும் மோட்டார் விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க:

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

வருகிறது உப்பு ஏற்றப்பட்ட முட்டைகள்!

அவித்த முட்டை, ஆம்லெட், ஒன்சைட் ஆம்லெட், பிளைன் ஆம்லெட், ஆப்பாயில், புல்பாயில், கலக்கி இவையெல்லாம் முட்டையை வைத்து மிக எளிதாகத் தயாரிக்கக்கூடிய சைடு டிஷ்கள். முட்டையுடன் தூள் உப்பு சேர்த்துக் கலக்கித்தான் இவற்றை தயாரிப்பார்கள். அந்த வேலையையும் சுலபமாக்கும்படி உப்பு ஏற்றப்பட்ட முட்டைகளைத் தயாரித்திருக்கிறது, உத்திரப் பிரதேச மாநிலம், பைரேலி, இஷாத் நகரில் அமைந்திருக்கிற மத்திய பறவையின ஆராய்ச்சி மையம். 

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

உப்பு ஏற்றப்பட்ட முட்டைகளை அப்படியே சமைத்துச் சாப்பிடலாம். இனி வேக வைத்த முட்டையிலும் உப்புச்சுவை இருக்கும். ஆச்சர்யமாக இருக்கிறதா, உண்மைதான். மத்திய பறவையின ஆராய்ச்சி மையத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்தான், உப்புத் தன்மையோடு கூடிய முட்டையை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கோழிகள் இடும் முட்டைகளில் இந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதன் மூலம், முட்டையின் உள்பகுதியில் உப்புச்சுவை ஏற்றப்பட்டு விடுகிறது. இப்படிப்பட்ட முட்டைகளைச் சமைக்கும்போது உப்பு சேர்க்கத் தேவையில்லை. இத்தொழில்நுட்பம் குறித்துப் பறவையின ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி கோபி 'பசுமை விகடன்' இதழிடம் விரிவாக விளக்கியிருக்கிறார். 'ஆம்லேட்டில் இனி உப்பு போட தேவையில்லை... வருகிறது உப்பு ஏற்றப்பட்ட முட்டைகள்!' அந்தச் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க:

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

சிம்பிளான சில எக்ஸர்சைஸ்!

`ஐ டிராக்கிங்' எக்ஸர்சைஸ்: ஒரே இடத்தில் அமர்ந்து கவனம் செலுத்த `ஐ டிராக்கிங் எக்ஸர்சைஸ்' (Eye tracking exercise) உதவும். அகல் விளக்கை ஏற்றிவைத்து, அதிலிருந்து ஒரு செ.மீ. தள்ளி அமரவேண்டும். பெற்றோர் விளக்கை வலப்பக்கம், இடப்பக்கமாக மாற்றி மாற்றி நகர்த்தி, விளக்கையே பார்க்கச் சொல்ல வேண்டும். இப்படி 10 முறை செய்யலாம். கவனித்தல் திறன் மேம்படும். வகுப்பறை கரும்பலகையில் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் நோக்கித்தான் ஆசிரியர் பாடங்களை எழுதுவார் என்பதால், இந்தப் பயிற்சி உதவும்

விகடன் போஸ்ட்: 'ரூ.20 டோக்கன் எப்போது?', சோனியா அகர்வாலின் பக்குவம், இனி 'உப்பு முட்டை'! 

.

கழுத்துப் பயிற்சி: செல்போன் கேம்ஸ் விளையாட குனிந்தபடியே இருப்பது கழுத்தை பாதிக்கும். இதைத் தவிர்க்க, கழுத்தை வளைத்து இடதுபக்கம் பார்த்து, பின்னர் மெதுவாக வலதுபக்கம் பார்க்க வேண்டும். கழுத்தை நிமிர்த்தி மேலேயும் பார்க்க வேண்டும். அடுத்தது, தலையை மெல்லச் சுழற்ற வேண்டும். இதையும் இடது, வலது செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியால், கழுத்து தசைகள் இறுக்கத்திலிருந்து விடுபடும். தைராய்டு சுரப்பிகள் நன்கு வேலை செய்யும்.