Published:Updated:

நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்

நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்திற்காக ஸ்ரீசாந்த் நோ பால் போட்டும், அதனை நடுவர் கவனிக்காமல் விட்டுவிட, இதனால் ஏற்பட்ட பணத்தகராறில் தரகர்கள் ஸ்ரீசாந்தை, கடுமையாக திட்டி, மிரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 9 ஆம் தேதியன்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஶ்ரீசாந்த் “ஸ்பாட்பிக்சிங்” சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

சூதாட்டத்தரகருக்கு சிக்னல் கொடுத்து தனது 2-வது ஓவரில், ஸ்ரீசாந்த் 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். அன்றைய போட்டியின் போது, ஒரு ஓவருக்கு 14 ரன்கள் அளிக்க வேண்டும் என்று ஸ்ரீசாந்துக்கு தரகர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர் 13 ரன் கொடுத்துள்ளார். இதேப்போல, அவர் போட்ட நோ பாலை நடுவர் கவனிக்காமல் விட்டுவிட்டார். இது குறித்து ஸ்ரீசாந்துக்கும், தரகர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில், தரகர்கள் ஸ்ரீசாந்த்தை கடுமையாக திட்டி, மிரட்டியுள்ளனர்.

##~~##
தான் நோபால் வீசியதாகவும், அதை நடுவர் கவனிக்க வில்லை என்றும், அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகரிடம் கேள்வி எழுப்பினார். ஒரு கட்டத்தில் ஸ்ரீசாந்தை சூதாட்ட தரகர் கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார்.
அதோடு பணத்தை தற்காலிகமாகவும் நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் தனது நண்பரும், சூதாட்ட ஏஜெண்டுமான ஜூஜி மூலம்தான் ஸ்பாட்பிக் சிங்கில் ஈடுபட்டதற்கான பணத்தை ஸ்ரீசாந்த் பெற்றார். இந்த நிலையில் “ஸ்பாட் பிக்சிங்” சூதாட்டத்தில் இனி ஈடுபட வேண்டுமானால் தனக்கு ரூ.80 லட்சம் தர வேண்டும் என்று ஸ்ரீசாந்த் சூதாட்ட புரோக்கரிடம் கூறி இருக்கிறார்.
ஏற்கனவே ரூ.40 லட்சம் வாங்கி இருந்தார். அதை அவர் 2 மடங்காக உயர்த்தி இருக்கிறார். ஶ்ரீசாந்தின் தொலைபேசி உரையாடல் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்ததாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.